வச்சுட்டான்யா...ஆப்பு
லஞ்சம் வாங்கறவங்களுக்கு...

சென்னை தொழிலாளர் நலத்துறை பெண் அதிகாரி கைது -ரூ.2 ஆயிரம் லஞ்சம்

9:25 PM

 

cr308

சென்னை: ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் நலத்துறை பெண் அதிகாரி சென்னையில் கைது செய்யப்பட்டார்.
சென்னை திருவொற்றியூரில் Ôஎண்ணூர் டேங்க் டெர்மினல் லிமிடெட்Õ என்ற நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் தன்ராஜ். இவர், லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி சுனில்குமாரிடம் அளித்துள்ள புகாரில், எங்கள் கம்பெனி ஊழியர்களைப் பற்றி ஆய்வு செய்து, சான்றிதழ் வழங்கும் பொறுப்பு, திருவொற்றியூரில் தொழிலாளர் நலத்துறையில் துணை ஆய்வாளராக பணியாற்றும் மேரி என்பவரிடம் உள்ளது.
இதுதொடர்பாக, அவரிடம் நாங்கள் விண்ணப்பம் அளித்திருந்தோம். ஆனால் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே சான்றிதழ் கொடுப்பதாக மேரி கூறுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.
இதுகுறித்து எஸ்பி லட்சுமி உத்தரவின்பேரில், டிஎஸ்பி வல்சராஜ் தலைமையிலான போலீசார் திருவொற்றியூரில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆபீசை கண்காணித்தனர். நேற்று மாலையில் பணத்தை தன்ராஜ் கொடுத்தபோது மேரியை கைது செய்தனர்.

Read On 0 comments

விருதுநகர் ஊனமுற்றோர் அலுவலகத்தில் விடுமுறையிலும் லஞ்ச வசூல்

6:07 PM

unmuttror

 

விருதுநகர் மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலகத்தில், உதவித்தொகை அனுப்புவதற்கு லஞ்ச வசூலில் ஈடுபட்டிருந்த நான்கு ஊழியர்களை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.விருதுநகர் மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறை அலுவலகம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளது. அரசு விடுமுறை தினமான நேற்று காலை 10 மணி முதல், மனவளர்ச்சி குன்றியோருக்கு, அரசு உதவித்தொகை அனுப்புவதற்கு, லஞ்ச வசூலில் ஊழியர்கள் ஈடுபட்டிருப்பதாக, ரகசிய தகவல் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்தது.


அங்கு போலீசார் சோதனை நடத்தினர். இந்த அலுவலகத்தில் முடநீக்கு தொழில் நுட்ப உதவியாளர் பிரகாஷ், தொழிற்கூட உதவியாளர் ராஜாமணி, பல்நோக்கு மறு வாழ்வு உதவியாளர் கருணாகரன், இரவுக் காவலர் பரமசிவம் ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் கணக்கில் வராத 58 ஆயிரம் ரூபாய் இருந்தது பற்றி, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.


இதில், மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு 60 சதவீதமும், அதற்கு மேல் உள்ளவர்களுக்கு மாதம் 500 ரூபாய் வீதம், அரசு உதவித் தெகை வழங்கி வருகிறது. ஏற்கனவே மாவட்டத்தில் 500 பேர் இந்த உதவித் தொகை பெற்று வந்தனர். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, உதவித்தொகை வழங்கப்படவில்லை. இந்த தொகையான 76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்திருந்தது. ஒரு நபருக்கு நான்கு ஆயிரத்து 500 வீதம், மணியார்டர் மூலம் அனுப்பபட வேண்டும்.


புதிதாக இந்தாண்டுக்கு ஆயிரத்து 200 பேருக்கு உதவித்தொகை வழங்க அரசு அனுமதித்திருந்தது. இதனை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு அனுப்ப வேண்டும். மணியார்டர் செய்வதற்கான கமிஷன் தொகை உட்பட அனைத்தும் அரசு வழங்கியுள்ளது. உதவித்தொகை பெறக்கூடிய அனைவரையும் அலுவலகத்திற்கு நேரில் வர கோரி ஊழியர்கள் கடிதம் அனுப்பியிருந்தனர்.நேரில் வந்த பயனாளிகளிடம் ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் வீதம் லஞ்சமாக வழங்க வேண்டும் என, ஊழியர்கள் தெரிவித்தனர். இதன் பேரில் டிச., 26ல், எழு நபர்களும், நேற்று 51 நபர்களிடம் தலா ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வசூலித்திருந்தனர். 58 ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பிரகாஷ், ராஜாமணி, கருணாகரன், பரமசிவம் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Read On 0 comments

இதுதான் ஊடகச் சுதந்திரமா?

4:46 AM

4482

 

நன்றி: தினமணி தலையங்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ஆந்திர மாநில ஆளுநர் என்.டி. திவாரி தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டுப் புறப்பட்டுவிட்டார் என்றாலும், தெலங்கானா பிரச்னை கொழுந்துவிட்டு எரியும்போது, அதிலும் ஆந்திரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற வதந்தி எழுந்தபோது, ஆளுநரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்தியிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.

தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பிய ஆளுநர் தொடர்பான பாலியல் ஒளிக்காட்சிகளைத் தடை செய்ய வேண்டும் என்று ஆளுநர் மாளிகை கேட்டுக் கொண்டதால் தடை செய்யும் நீதிமன்றம், இந்த ஒளிக்காட்சிகளைக் கொடுத்த பெண், அந்தக் காட்சிகளில் இடம்பெற்றுள்ள பெண்களைக் கைது செய்து, அவர்கள் என்ன ஆதாயத்துக்காக இந்தச் செயலுக்கு மனமுவந்து ஒப்புக்கொண்டார்கள் என்று கண்டறிய வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட வேண்டாமா?  ஒரு நீதிமன்றம்  பொதுநலன் கருதி காவல்துறைக்குத் தன்னிச்சையாக இத்தகைய உத்தரவிட்டால் என்ன குற்றமாகிவிடும். லஞ்சம் வாங்குவது குற்றம், கொடுப்பதும் குற்றம்; கொலை செய்வதும் குற்றம்; கொலையைத் தூண்டுவதும் குற்றம். அப்படியிருக்க இந்த ஒளிக்காட்சிக்குத் தொடர்புடைய பெண்களிடம் உண்மையை அறிய விசாரிக்க வேண்டாமா?

ஆளுநர் தாய்லாந்து சென்று, ஒரு ஸ்பா-வில் ஓய்வெடுத்து, எப்படி இருந்திருந்தாலும் யாரும் குறைசொல்ல முடியாது. அந்த நாட்டுச் சட்டத்திற்கு அது ஏற்புடையது. ஆளுநர் மாளிகையில் அவர் அவ்வாறு நடந்து கொண்டது முறையற்ற சட்டவிரோதச் செய்கைதான் இன்று பிரச்னையாகியிருக்கிறது. ஆனால், யாரோ ஒரு பெண்மணி கொண்டு வரும் ஒளிக்காட்சிகளை அப்படியே ஒளிபரப்பவும் அதை நியாயப்படுத்தவும் முடியுமென்றால், அத்தகைய ஊடகச் சுதந்திரம் சற்று மிகையாகத்தான் இருக்கிறது.

ஆளுநர் பதவி என்பது, அறிஞர் அண்ணா சொன்னதைப் போல, ஆட்டுக்குத் தாடி மாதிரியானது. தேர்தல் முடிவுகளில் அதிக இடங்களைப் பிடித்த கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கவும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்லி குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்யவும் மட்டுமே செய்கிற,  வேறு எந்த அதிகாரமும் இல்லாத பதவி. மிகப் பெரும் மாளிகையில் செüகரியங்களை அனுபவிக்க மட்டுமே உருவாக்கப்பட்ட பதவி. (அவரும் அதைத்தான் செய்துகொண்டிருந்திருக்கிறார் போலும்!).

இந்நிலையில் அதிகாரம் இல்லாத இப்பதவி வகிக்கும் ஓர் ஆளுநர் தனக்கு, கனிமச் சுரங்கங்கள் பெற்றுத் தருவதாகக் கூறியதால் 3 இளம்பெண்களை அனுப்பினேன் என்று கூறிக்கொள்ளும் ஒரு பெண்மணி, அதற்கு ஆதாரமாக ஒளிக்காட்சிகளை தந்தால், அதை தனியார் சானல் அப்படியே ஒளிப்பரப்பிவிட்டு, வழக்கை எதிர்கொள்ளத் தயார் என்று சொல்வதை ஊடகச் சுதந்திரம் என்றால் அது சரியா? அந்தப் பெண்ணின் உள்நோக்கத்தைச் சந்தேகிக்க வேண்டிய நேர்மையைவிட,  பரபரப்புதான் முக்கியமாகிவிடுகிறதா!

கொலை வழக்கு தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு நார்காடிக் சோதனை நடத்தியபோது அவர் மயக்கத்தில் பேசிய ஒளிப்பதிவை தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பியது- அது காவல்துறையின் ஒரிஜினல் குறுந்தகடு! அப்படி இருக்கும்போது அதை யாரும் குறை சொல்ல முடியாதுதான். இருப்பினும், நார்காடிக் சோதனையின் மயக்கத்தில் ஒருவர் பேசுவதை நீதிமன்றமே ஏற்றுக்கொள்ள மறுக்கும் நிலையில், அதை ஒளிபரப்புவது சரியாக இருக்குமா என்று யோசிக்கும் பொறுப்பு அந்த நிறுவனத்துக்குக் கிடையாதா?

அந்தப் பெண்மணியின் நோக்கம் கனிமச் சுரங்கங்கள் பெறுவதுதான் என்பதுதான் என்றால், அத்தகைய அனுமதி வழங்க எத்தகைய அதிகாரமும் இல்லாத ஆளுநரை அணுகியது ஏன்? ஆளுநர் மாளிகையில் ஆளுநரே ரகசிய கேமரா வைத்துப் படம் எடுத்து வைத்துக்கொண்டார் என்று சொல்வது அறிவுக்குப் பொருந்துமா? அப்படியானால், முன்கூட்டியே யோசித்துப் படம் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் இதன் பின்னணியில் உள்ள ஆந்திர மாநில அரசியல்வாதிகள் யார்? பல கேள்விகள் எழுகின்றன. ஆந்திர மாநில ஆளுநரின் பாலியல் புகார் மீதான விசாரணை என்பது, இத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்வதாக அமைந்தால்தான் சரியான விசாரணையாக இருக்கமுடியும்.

ஏனென்றால், ஒவ்வோர் அரசியல் கட்சிக்கும் ஒரு தொலைக்காட்சி சானல் இருக்கிறது. அல்லது தொலைக்காட்சி உரிமையாளர்கள் ஏதோ ஓர் அரசியல் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்.  தன்னை எதிர்க்கும் புதிய கட்சித் தலைவர்கள் அல்லது தன் ஊழலுக்கு உடன்படாத ஒரு ஐஏஎஸ் அதிகாரியை, அல்லது தனக்குச் சாதகமாகத் தீர்ப்பு எழுத மறுக்கும் நீதிபதியின் அந்தரங்கத்தை  இவ்வாறு ரகசியமாகப் படம்பிடித்து, தனக்கு ஆதரவாகப் பணிந்துபோகும்படி மிரட்டினால் என்ன ஆகும்? பணிய மறுக்கும்போது தங்கள் விருப்பப்படி ஒளிபரப்பினால் யார்தான் என்ன செய்ய முடியும்?

மகாராஷ்டிரத்தில் பத்திரிகைகளுக்கு கோடி கோடியாய் பணம் கொடுத்து, செய்திகளை ஒவ்வொரு பத்திரிகைகளிலும் தனிப்பட்ட செய்திபோல பிரசுரிக்கவும் அது விளம்பரம் என்பதை மறைத்தும் பணம் சம்பாதித்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு கண்டனம் செய்யப்படுகிறது. இதே நிலைமை ஊடகங்களில் ஏற்படவில்லை. ஏனென்றால், ஒவ்வொரு கட்சிக்கும் ஓர் ஊடகம் இருக்கிறது. ஆகையால் அவர்கள் தங்களைப் பற்றி மட்டுமே, தங்கள் தலைவர்களின் பிரசாரங்களை மட்டுமே ஒளிபரப்ப வேண்டிய கட்டாயத்தால் இந்த நிலை ஏற்படவில்லை.

இல்லையென்றால், தனியார் தொலைக்காட்சிகளும் தங்கள் சீரியல்களைக்கூட நிறுத்திவிட்டு அரசியல் விளம்பரங்களிலும், எதிர் அணியினரின் பலவீனத்தை அம்பலப்படுத்துவதிலும் இறங்கியிருக்க நேர்ந்திருக்கும். தனியார் தொலைக்காட்சி சானல்களையும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நிச்சயம் கட்டுப்படுத்த மாட்டார்கள். அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான தொலைக்காட்சி சானல் என்பது ஒரு போர்வாள். தேவைப்படும்போது உறையிலிருந்து எடுத்து விருப்பம்போல சுழற்றலாம்.

Read On 1 comments

கட்டாய ஓட்டு...! ஜனநாயகமா - சர்வாதிகாரமா...?

5:17 AM

tblfpnnews_93453180790

ஓட்டளிக்க வேண்டியது ஒவ்வொரு மக்களின் அடிப்படை உரிமை. வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம் பெற்றுள்ள அனைவரும் வரும் உள்ளாட்சி தேர்தலில் கட்டாயமாக ஓட்டளிக்க வேண்டும்'என, குஜராத் சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள சட்ட மசோதா, இந்திய அரசியல் அரங்கில் மட்டுமல்லாமல், சாதாரண மக்கள் வரை அதிர்வு அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்குவது சாத்தியமா, அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் என்ன என்பது குறித்தெல்லாம் சற்றும் கவலைப்படாமல், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இந்த அரசியல் சர வெடியை பற்ற வைத்து, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள் ளார். குஜாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மசோதா போல், பார்லிமென்டிலும் தாக்கல் செய்யப்படுமா? நாடு முழுவதும் ஓட்டுப் போடுவது கட்டாயமாக்கப்படுமா? அப்படி ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்கி சட்டம் கொண்டு வந்தாலும், ஓட்டுப் போடாமல் புறக்கணிப்பவர்களுக்கு தண்டனை அளிக்கப்படுமா என்பது போன்ற கேள்விகள்,எழத் துவங்கி விட்டன.

கட்டாய ஓட்டு புதிய விஷயமா? கட்டாய ஓட்டுப் பதிவு என்பது ஒன்றும் புதிய விஷயமல்ல. ஏற்கனவே சில நாடுகள், ஓட்டளிப்பதை கட்டாயமாக்கி, அதை செயல்படுத்தியும் வருகின்றன. முதல் முதலாக கடந்த 1892ல் பெல்ஜியம் நாட்டில் ஓட்டுப் போடுவது கட்டாயமாக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் 1942ல் இந்த கட்டாய ஓட்டுச் சட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது, அங்குள்ள சில மாகாணங்களில் மட்டுமே, இந்த சட்டம் அமலில் உள்ளது. அர்ஜென்டினாவில் 1914 முதல், இந்த சட்டம் அமலில் உள்ளது. இங்கு 18 முதல் 70 வயதுக்குட்பட்டோர் கட்டாயமாக ஓட்டளிக்க வேண்டும். பிரேசிலிலும் இந்த சட்டம் உள்ளது. 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த சட்டம் பொருந்தாது. இதுதவிர, வெனிசுலா, நெதர்லாந்து போன்ற நாடுகளில் ஒரு சில தேர்தலில் மட்டும் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, பின் ரத்து செய்யப்பட்டது.

அபராதத்தில் இருந்து யாருக்கு விலக்கு? கட்டாய ஓட்டுப் பதிவு சட்டம் நடைமுறையில் உள்ள நாடுகளில், தேர்தலின்போது ஓட்டுப் போடாதவர்களுக்கு குறிப்பிட்ட தொகை அபராதமாக விதிக்கப்படுகிறது. ஓட்டுப் போடாததற்கு தகுந்த காரணங்களை கூறினால், அவர்களுக்கு அபராதத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியா, பிரேசில் போன்ற நாடுகளில் ஓட்டுப் போடாததற்கு சரியான காரணங்களை கூறினால், அதிகாரிகளால் அவை ஏற்றுக் கொள்ளப்படும். அர்ஜென்டினாவை பொறுத்தவரை, தேர்தலின் போது சொந்த ஊரில் இருந்து 500 கி.மீ., தூரத்தில் உள்ளவர்கள் ஓட்டுப் போட வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல், நோயால் பாதிக்கப்பட்டோரும், தகுந்த மருத்துவ காரணங்களை செலுத்தினால், அபராதத்தில் இருந்து விலக்கு பெறலாம்.

வித்தியாசமான தண்டனை: பெல்ஜியத்தில் கட்டாய ஓட்டுச் சட்டம் அமலில் இல்லாதபோதும், தொடர்ந்து பல தேர்தல்களில் ஓட்டுப் போடாமல் இருப்பவரின் ஓட்டுரிமை ரத்து செய்யப்படும். பெரு, கிரீஸ் ஆகிய நாடுகளில் ஓட்டுப் போடாதவர்களுக்கு பொது வினியோகம் மூலம் பொருட்கள் வழங்கப்படுவது நிறுத்தப்படும். பொலிவியாவில் ஓட்டுப் போடாதவர்களுக்கு மூன்று மாத சம்பளம் கிடையாது. துருக்கியில் 150 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

கட்டாய ஓட்டு ஏன் அவசியம்? இந்த கட்டாய ஓட்டுச் சட்டத்தை தான், தற்போது இந்தியாவிலும் அமல் படுத்த வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன. ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்க வேண்டும் என்ற கருத்து தெரிவிப்பவர்கள், அதற்கான காரணங்களை விளக்குகின்றனர். இந்திய தேர்தல் நடைமுறைகளை பொறுத்தவரை, பெரும்பான்மையான மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப அரசு அமைவது இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே உள்ளது. தேர்தல்களில் மிக குறைவான சதவீதம் மக்களே ஓட்டளிக்கின்றனர். படித்தவர்கள் வரிசையில் நின்று ஓட்டளிப்பதற்கு விரும்புவது இல்லை. தேர்தலின்போது சமீபகாலமாக அரங்கேறி வரும் கலவரங்களும், அதனால் சாதாரண மக்களுக்கு ஏற்படும் பயமும் இதற்கு முக்கிய காரணம். இதனால், பெரும் பான்மை மக்களின் விருப்பங்கள், தேர்தலில் எதிரொலிப்பது இல்லை. ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்கினால், இந்த பிரச்னை எழுவதற்கு வாய்ப்பு இல்லை. அடுத்ததாக, கள்ள ஓட்டுகள் முற்றிலும் தவிர்க்கப்படும்.

தற்போது தேர்தல்களில் ஓட்டுப் போடுவதற்கு அடையாள அட்டை, வெப் கேமரா கண்காணிப்பு என, பல்வேறு நவீன நடைமுறைகள் பின்பற்றினாலும், கள்ள ஓட்டுகள் பதிவாவதை தடுக்க முடியவில்லை. ஊரில் இல்லாதவர்கள், இறந்து போனவர்கள் குறித்த விவரங்களை துல்லியமாக சேகரித்துக் கொண்டு, அவர்களின் ஓட்டுகளை கள்ள ஓட்டுகளாக போடும் நடைமுறை, காலம், காலமாக பின்பற்றப்படுகிறது. ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்கினால், கள்ள ஓட்டு பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும். கட்டாய ஓட்டுப் பதிவால், பொதுமக்களிடையே அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படும். தற்போது பெரும்பாலானோர், ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் நமக்கென்ன என்ற மனநிலையோடு தான் உள்ளனர். அனைவரும் கட்டாயமாக ஓட்டுப் போட வேண்டும் என, சட்டம் கொண்டு வந்தால், யார் நல்லவர், யார் கெட்டவர் என, அலசிப்பார்த்து ஆராய்ந்து ஓட்டளிக்கும் மனப்பான்மை மக்களிடையே ஏற்படும்.

அடுத்ததாக, அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கி அரசியலுக்கு மூடு விழா நடத்தி விடலாம். ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் விருப் பங்களை மட்டும் நிறைவேற்றினால் போதும், குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் நல்லது செய்தால் போதும் என, எந்த அரசியல் கட்சியும் நினைக்க முடியாது. அனைவருமே ஓட்டளிப்பதால், அனைத்து மக்களின் விருப்பங்களையும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம், ஆளும் தரப்புக்கு ஏற்படும். இறுதியாக, வரி செலுத்துவது எப்படி ஒருவரின் அடிப்படை கடமையோ, அதுபோல ஓட்டுப் போடுவதும் ஒருவரின் அடிப்படை கடமை. இதை கட்டாயமாக்குவதன் மூலம், ஓட்டுப் போடும் ஜனநாயக கடமையை யாரும் தட்டிக் கழிக்க முடியாது.

கட்டாய ஓட்டுக்கு அவசியமே இல்லை: ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்க வேண்டிய அவசியம் இல்லை என, கூறுவோர் அதற்கான காரணங்களை தெளிவாக எடுத்து வைக்கின்றனர். முதலாவதாக, ஒருவரை ஓட்டுப் போட வேண்டும் என, கட்டாயப்படுத்துவது அவரின் அடிப்படை உரிமையை அப்பட்டமாக மீறும் செயலாகும். ஓட்டுப் போட வேண்டும், இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என, கட்டாயப்படுத்தினால், அவரின் அடிப்படை சுதந்திரத்தில் தலையிடும் விஷயமாகி விடும். இப்படி கட்டாயப்படுத்தி ஓட்டு வாங்கி, அதன் அடிப்படையில் அமையும் அரசு, எப்படி ஜனநாயக அரசாக இருக்க முடியும். இதில், சர்வாதிகார மனப்பான்மை தானே மேலோங்கி நிற்கிறது. அடுத்தாக, போதிய நிதி வசதி இல்லாத நாடுகளால், ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்குவது என்பது முடியாத காரியம். ஒருவரை கட்டாயப் படுத்தி ஓட்டுப் போட வைப்பதால், அவருக்கு வெறுப்பு தான் ஏற்படுமே தவிர, யாருக்கு ஓட்டுப் போடுவது என்ற விஷயத்தில் கவனம் செலுத்த மாட்டார். கட்டாய படுத்துகிறார்களே என்ற வெறுப்பில், தனது ஓட்டை செல்லாத ஓட்டாக்கி விட்டுச் செல்வதற்கும் தயங்க மாட்டர். மேலும், ஓட்டுப் போட வேண்டும் அவ்வளவு தானே, என்ற மனப்பான்மையில், ஓட்டுச் சீட்டில் அல்லது இயந்திரத்தில் முதலில் இருக்கும் வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்கும் சிக்கலும் உருவாகும்.

சாத்தியமா? மகாராஷ்டிராவின் விதர்பா உள்ளிட்ட பகுதிகளில் கடன் தொல்லை காரணமாக, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தினமும் அரங்கேறுகின்றன. ஒரிசா, பீகார் போன்ற மாநிலங்களில் பட்டினிச் சாவுகள் அதிகரித்து வருகின்றன. வடகிழக்கு மாநில மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே, போதிய சுகாதார வசதிகள் கிடைக்கின்றன. இவர்களுக்கு எல்லாம் போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து விட்டு அதற்கு பின்னர் அல்லவா ஓட்டுப் பதிவை கட்டாயமாக்க வேண்டும். வறுமையில் வாடும் மக்களிடம், இந்த சட்டத்தை எப்படி நடைமுறைப் படுத்த முடியும்? அன்றாட உணவுக்கே வழியில்லாத ஏழை மக்களை, ஓட்டுப் போடாத குற்றத்துக்காக சிறையில் அடைக்க முடியுமா? என்ற வேதனைக்குரல்களும் எழாமல் இல்லை.

ஆனால், சமீபகாலமாக, நாடு முழுவதும் நடந்து வரும் தேர்தல்களில் "காசுக்கு ஓட்டு' என்ற விசித்திரமான நடவடிக்கைகள் அரங்கேறத் துவங்கி விட்டன. அரசியல் கட்சிகளும், தங்கள் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, ஓட்டு வாங்குவதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கின்றன. "பணம் கொடுத்தால் தான் ஓட்டுப் போடுவோம்' என்ற மனநிலைக்கு பொதுமக்களையே அரசியல் கட்சிகள் தயார் படுத்தி விட்டன. ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கும் இதுபோன்ற அபாயகரமான போக்கிற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமானால், ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்க வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது. இதுபோன்ற சட்டங்களால் தான் பொதுமக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படும் என்பது தான் இதற்கு காரணம். ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்குவது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதற்கு காலம் தான் பதில் கூற வேண்டும். காத்திருப்போம்.

சாத்தியமில்லை என்கிறது தேர்தல் கமிஷன்: தேர்தல் கமிஷன் குரேஷி கூறியதாவது: ஓட்டளிப்பதை கட்டாயமாக்குவது குறித்து தேர்தல் கமிஷன் சார்பில் பலமுறை விரிவான ஆலோசனை நடத்தப் பட்டுள்ளது. இருந்தாலும், இந்தியா போன்ற நாட்டில் அதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. ஜனநாயகமும், கட்டாயப்படுத்துதலும் ஒரே நேரத்தில் சாத்தியமில்லை. நாடு முழுவதும் 40 சதவீதம் வாக்காளர்கள், ஓட்டளிக்காமல் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடையே ஓட்டளிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பிரசாரம் செய்யலாம்.இவ்வாறு குரேஷி கூறினார்.

லாலு, பா.ஜ., ஆதரவு: பா.ஜ., மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறுகையில்,"குஜராத் மாநில அரசு, ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்கி கொண்டு வந்துள்ள மசோதா, மிகவும் புதுமையானது. மிகவும் பயன் உள்ள திட்டமும் கூட. இத்திட்டத்தை நாடு முழுவதும் கொண்டுவருவது குறித்து விரிவான ஆலோசனை நடத்த வேண்டியது அவசியம். தேவைப்பட்டால், இதற்காக தேசிய அளவில் விவாதமும் நடத்தலாம்'என்றார். ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் கூறுகையில்,"தேர் தல்களில் ஓட்டுப் போடுவோரின் சதவீதம் குறைந்து வருகிறது. இது மிகவும் கவலை அளிக்கும் விஷயம். இதைத் தடுக்க வேண்டுமெனில், உள்ளாட்சி தேர்தல்களில் மட்டுமல்லாமல், லோக்சபா தேர்தலிலும் ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்கி, சட்டம் கொண்டு வர வேண்டும்'என்றார்.

பார்லி விதிமுறைகள் கூறுவது என்ன? கடந்த 2004ல் "ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்க வேண்டும்'என, வலியுறுத்தி, பா.ஜ., எம்.பி., பாச்சி சிங் ரவாத் ஒரு மசோதாவை பார்லிமென்டில் கொண்டு வந்தார். இதற்கு பதில் அளித்து அரசு சார்பில் கூறப்பட்டதாவது: தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக, ஆய்வு செய்த தினேஷ் கோஸ்வாமி குழு, ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன என, கூறி அந்த திட்டத்தை நிராகரித்துள்ளது. மேலும், ஓட்டுப் போடுவதை கட்டாயப்படுத்துவது,  ஜனநாயக விதிமுறைகளுக்கு எதிரானது. வேண்டுமானால், ஓட்டுப் போட வேண்டிய அவசியம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரசாரங்களை மேற்கொள்ளலாம். இவ்வாறு மத்திய அரசு சார்பில் கூறப்பட்டது.

காங்., - இடதுசாரி எதிர்ப்பு: காங்கிரஸ் செய்தி தொடர் பாளர் ஷகீல் அகமது கூறுகையில்,"ஓட்டுப்போடுவதை கட்டாயப்படுத்துவது, ஒருவரின் அடிப்படை உரிமையை மீறும் செயல். இந்த விஷயத்தில், மக்களை கட்டாயப்படுத்தக் கூடாது. இது எந்த வகையிலும் பயன் அளிக்காது. ஜனநாயக நடைமுறையில், ஓட்டுப் போடுவதை ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர, கட்டாயப்படுத்தக் கூடாது. ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்குவதை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது'என்றார். மார்க்சிஸ்ட் கம்யூ., மூத்த தலைவர் வாசுதேவ் ஆச்சார்யா லோக்சபாவில் பேசுகையில்,"ஓட்டுப்போடுவது நமது உரிமை என்பதை வாக்காளர்களுக்கு, போதிய விழிப்புணர்வு பிரசாரங்கள் மூலம் புரிய வைக்க வேண்டும். அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது'என்றார்.

 

நன்றி: தினமலர்.

Read On 0 comments

பெண்ணாசையால் மண்ணைக் கவ்வியவர்கள்

4:59 AM

nd_tiwari

ஆந்திர கவர்னர் என்.டி. திவாரி கடந்த வெள்ளிக்கிழமை 3 பெண்களுடன் தனி அறையில் உல்லாசமாக இருந்ததாக தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பு செய்தில், செக்ஸ் புகாரில் சிக்கி இருக்கிறார். அதற்கான வீடியோ ஆதாரங்களும் வெளியிடப்பட்டு உள்ளன. இதே போல இதற்கு முன்பு பல தலைவர்கள் வீடியோ ஆதாரங்களுடன் செக்ஸ் புகாரில் சிக்கி உள்ளனர்.

 

2005091601360402
கேரள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் உன்னித்தான் கடந்த வாரம் டி.வி. நடிகை ஒருவருடன் ரகசியமாக ஒரு வீட்டில் தங்கியபோது சிக்கினார். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது நடிகை ஜெயப்பிரதாவின் நிர்வாண படங்கள் வெளியானது. இது போலி படம் என்று ஜெயபிரதா கூறினார்.

 

omar-abdullah
காஷ்மீரில் விபசார பெண்களை அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சப்ளை செய்ததாக ஒரு பெண்பிடிபட்டார். இதில் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கும் சம்பந்தம் உண்டு என்று புகார்கள் வந்தன. இதையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் ராஜினாமா வாபஸ் பெற்றுக்கொண்டார்.

 BJP delhi Pradesh President with Sanjay Joshi,BJP Senior leader at a function to Celebrate Birthday of Baba Sahib Ambedkar, in the Capital on Thursday. tribune Photo/Rajeev Tyagi
2005 ம் ஆண்டு பாரதீய ஜனதா பொதுச் செயலாளர் சஞ்சய் ஜோஷி ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ படம் வெளியானது. அதையடுத்து அவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

2007041913640301
2003 ல் உத்தரபிரதேச அமைச்சர் அமரமணி திரிபாதி ஒரு பெண்ணுடன் தவறான தொடர்பு வைத்து இருந்தார். இதில் அந்த பெண் கர்ப்பமானார். பின்னர் அவரை கொலை செய்ததாக திரிபாதி கைது செய்யப்பட்டார்.


2003 ம் ஆண்டு உத்தரகாண்டம் அமைச்சர் ஹாக்கில் திருமணமாகாத ஒரு பெண்ணை கர்ப்பிணியாக்கினார். இதில் அவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.


2001 ம் ஆண்டு ராணுவ ஆயுத தளவாடங்கள் வாங்க ஒப்பந்தம் கொடுப்பதற்கு ராணுவ அதிகாரிகள் விபசார பெண்களை கேட்டதை பத்திரிகை ஒன்று வீடியோ ஆதாரத்துடன் வெளிப்படுத்தியது.

3389717315_kunjalikutty
1997 ம் ஆண்டு கேரள முன்னாள் அமைச்சர் குஞ்சாலி குட்டி மீது செக்ஸ் புகார் எழுந்தது. 1978 ம் ஆண்டு அப்போதைய ராணுவ அமைச்சர் ஜெகஜீவன்ராம் மகன் சுரேஷ் ஒரு பெண்ணுடன் தவறான முறையில் இருந்ததாக படத்துடன் பத்திரிகையில் செய்தி வந்தது

 

நன்றி: நக்கீரன்.

Read On 0 comments

விஜயகாந்த் கட்சி வெற்றி பெற என்ன வழி?

1:10 AM

முரசொலிக் கட்டுரை.

vijaykanth_L 

திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல் முடிவுகள் ஜனநாயக முறைக்கு எதிரானது. எந்த ஊழலை ஒழிக்கப் பாடுபடுகிறோமோ அந்த ஊழல் பணம்தான் ஆளும் கட்சியான தி.மு.க.வுக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளது.


... நேர்மையாகத் தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் இந்த இடைத் தேர்தலை ரத்துச் செய்திருக்கவேண்டும்.
எத்தனை முறை பணம் கொடுத்தாலும் அத்தனை முறையும் தேர்தலை ரத்துச் செய்யவேண்டும். அப்போதுதான் நேர்மையாக தேர்தல் நடைபெறும்


- என்று பகுதி நேர அரசியல் தலைவர் விஜயகாந்த் தனது படுதோல்விக்குப் பட்டுத்திரை போட்டு மூட முயன்றிருக்கிறார்!
திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய இரு தொகுதிகளிலும் விஜய காந்த் கட்சி டெபாசிட் தொகையை இழந்துள்ளது என்பதோடு
சென்ற தேர்தலில் வாங்கிய வாக்குகளைக்கூட இந்தத் தேர்தலில் அதிகரித்து வாங்க முடியவில்லை!


1) திருச்செந்தூர் தொகுதியில் கடந்த தேர்தலில் 3756 வாக்குகளை நடிகர் கட்சி வாங்கியது. இந்தத் தேர்தலிலோ - கை சுத்தம் அதைவிட வாய் சுத்தம் மணக்கும் வாயோடு தொகுதியை வலம் வந்தார் விஜயகாந்த். எனினும் இந்தத் தேர்தலில் அவரது கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 4,186தான்! சென்ற தேர்தலைவிட, 430 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று டெபாசிட்டை இழந்திருக்கிறது அவரது கட்சி.


கடந்த தேர்தலில் வந்தவாசித் தொகுதியில் விஜயகாந்த் கட்சி பெற்ற வாக்குகள் மொத்தம் 9096 இந்தத் தேர்தலிலோ 7063தான்!
போன தேர்தலில் விஜயகாந்த் கட்சிக்கு வாக்களித்த 2033 பேர் ""சோதனை மேல் சோதனை போதுமடா சாமி"" என்பது போல விஜய காந்த் கட்சியைக் கை கழுவி விட்டார்கள். 9 ஆயிரமாக இருந்தால் என்ன? இரண்டு தேர்தலிலும் டெபாசிட் என்னவோ காலிதான்!
மற்றபடி -  எத்தனை முறை பணம் கொடுத்தாலும் அத்தனை முறையும் தேர்தலை ரத்து செய்யவேண்டும். அப்போதுதான் தேர்தல் நேர்மையாக நடைபெறும் என்கிறார்.


இதற்கு உண்மையான அர்த்தம் என்ன?


4 ஆயிரம் ஓட்டும், 7000 ஓட்டும் பெற்று டெபாசிட் இழக்கும் விஜயகாந்த் கட்சியே வெற்றி பெற்றது என்று அறிவிக்கும் வரையில் தேர்தலை ரத்து செய்யவேண்டும்.


நமது அரசியல் சட்டப்படி - அது முடியுமா?


டெபாசிட் இழந்த கட்சியைத்தான் வெற்றி பெற்ற கட்சி என்று அறிவிக்க தேர்தல் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்து நிறை வேற்றவேண்டும். அப்படிப்பட்ட திருத்தம் கொண்டு வர பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன பைத்தியக்காரர்களா?

Read On 0 comments

குளித்தலை வி.ஏ.ஓ.,க்கு ஆப்பு – ரூ.1,000 லஞ்சம்

6:59 PM

arrest-10

குளித்தலை:கரூர் அருகே, லஞ்சம் வாங்கியதற்காக வி.ஏ.ஓ.,வை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த லஞ்ச பணத்தையும் பறிமுதல் செய்தனர்.கரூர் மாவட்டம் கோரப்பட்டியைச் சேர்ந்த சின்னதுரை(50) என்பவர், கடந்த 18ம் தேதி, தனது நிலத்தின் பட்டா சிட்டா நகல் கேட்டு, பொய்யாமணியிலுள்ள வி.ஏ.ஓ., நடராஜனிடம்(52) மனு அளித்தார். நகலை 22ம் தேதி வாங்கி கொள்ளும்படியும், அதற்கு 1,000 ரூபாய் தர வேண்டும் எனவும் கூறியதையடுத்து, நேற்று முன்தினம், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசிடம் சின்னதுரை, புகார் கொடுத்தார்.வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு நேற்று காலை 11.50 மணிக்கு சென்ற அவர், ரசாயனம் தடவிய ரூபாயை வி.ஏ.ஓ.,விடம் கொடுத்தார். அதை வாங்கிய போது, அவரை கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரிடமிருந்து கணக்கில் வராது வைத்திருந்த 8,350 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.கைதான வி.ஏ.ஓ., கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலராகவும் உள்ளா

Read On 0 comments

ஓட்டு போடுவது கட்டாயம்: நரேந்திரமோடி அதிரடி

8:19 AM

narendra-modi

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பது அதிரடி சட்டத்தின் மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே வாக்களிப்பதை கட்டாயமாக்கியுள்ள முதல் மாநிலம் குஜராத் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பான சட்ட மசோதா நேற்று குஜராத் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தில் எதிர்மறை ஓட்டுப் போடவும் வழி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


குஜராத் உள்ளாட்சி நிர்வாக சட்ட மசோதா 2009 என்று பெயரிடப்பட்ட இந்த மசோதாவை நேற்று குஜராத் சட்டசபை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேறியது.


இந்த சட்டத்தின்படி குஜராத்தில் உள்ள ஏழு மாநகராட்சிகள், 159 நகராட்சிகள், 26 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 223 தாலுகா பஞ்சாயத்துக்கள், 13,713 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு நடைபெறும் தேர்தலில் வாக்காளர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.
இந்த சட்டத்தை காங்கிரஸ் கட்சி மோசடி நாடகம் என்று வர்ணித்துள்ளது.


இருப்பினும் இதுகுறித்து முதல்வர் நரேந்திர மோடி கூறுகையில், “இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நடவடிக்கை. இதன் மூலம் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க முன்வருவார்கள். கள்ள ஓட்டுக்கள் குறையும், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் அசிங்கம் ஒழியும். நல்லவரை வெற்றி பெற செய்ய முடியும். ஒரு நிலை வகிக்கும் மக்களும் அதிக அளவில் ஓட்டுப் போடுவதால் உண்மையான ஜனநாயகம் மலரும். அரசில்வாதிகளிடம் சிக்கி கிடக்கும் கறுப்பு பணங்களும் வெளியே வரும்’


இதுவரை வேட்பாளரையும், அவருடைய ஜாதி, கட்சி ஆகியவற்றைப் பார்த்தும், அவர்களுக்கு ஆதரவானவர்களும் மட்டுமே ஓட்டுப் போடும் நிலை உள்ளது. ஆனால் இந்த சட்டத்தின் மூலம் நடுநிலை வாக்காளர்களும் முழுமையாக இந்த ஜனநாயக நடமுறையில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.


இச்சட்டத்தின்படி, வாக்களிக்க வராத, தவறும் வாக்காளர்களுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பப்படும். வாக்களிக்க வராதது குறித்த காரணத்தை 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். திருப்திகரமான விளக்கம் அளிக்கத் தவறுவோர் தவறு செய்தவர்களாக அறிவிக்கப்படுவர்.


இந்தியாவில் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. ஆனால் மத்திய அரசு இதுகுறித்து கண்டுகொள்ளாமல் உள்ளது. இந்த நிலையில் குஜராத்தில் அதிரடியாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read On 0 comments

நீதிபதி தினகரன் பதவி உயர்வு கிடையாது : சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்

5:08 AM

25-pd-dinakaran-200

புதுடில்லி : கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி தினகரனை, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்ற பரிந்துரையை, சுப்ரீம் கோர்ட் விலக்கிக் கொண்டது. இதனால், அவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பொறுப்பேற்கும் வாய்ப்பு இனி இல்லை.

கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருப்பவர் தினகரன். இவர் மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது மற்றும் நில அபகரிப்பு ஆகிய புகார்கள் உள்ளன. இவர் மீது பார்லிமென்டில் கண்டன தீர்மானம் கொண்டு வரக் கோரி எம்.பி.,க்கள் கொடுத்த மனுவை, ராஜ்யசபா தலைவர் அமீது அன்சாரி நேற்று முன்தினம் ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், நீதிபதி தினகரனை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்குமாறு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குழு அளித்த பரிந்துரை விலக்கிக் கொள்ளப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள், எஸ்.எச்.கபாடியா, தருண் சட்டர்ஜி, அல்டமாஸ் கபீர் மற்றும் ஆர்.வி.ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய குழு, நேற்று முன்தினம் மாலை கூடி, நீதிபதி தினகரனுக்கு பதவி உயர்வு வழங்கும் பரிந்துரையை திரும்பப் பெறுவது என தீர்மானித்தனர்.

இது குறித்து தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் சார்பில் வெளியிடப்பட்ட தகவலில், "சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தினகரனை நியமிக்கும் சிபாரிசு நிறுத்தி வைக்கப்படுகிறது' என்று கூறப்பட்டிருக்கிறது. முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி, நீதிபதி தினகரனை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை, மறுபரிசீலனை செய்யுமாறு, மத்திய சட்டத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நீதிபதி தினகரன் கூறுகையில்," நான் நீதிபதி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். எனக்கு எதிராக ராஜ்யசபாவில் கண்டன தீர்மானம் கொண்டு வந்தது, துரதிருஷ்டவசமானது' என்றார்

Read On 0 comments

இடைதேர்தல்- முரசொலி ஜோக்ஸ்

8:11 PM

adade12

ஆண்டியும் போண்டியும்

ஆண்டி :- ஏன்ய்யா; ``திருச்செந்தூர் - வந்தவாசி தொகுதிகளில் பணமழை பெய்யுமா, என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்களிடையே அதிகரித்துள்ளதாக `தினமலர்’ எழுதியிருக்கிறதே!’’

போண்டி:- ""ஆமாம் - இப்போது பணமழை பெய்யுமா என்று வாக்காளர்களே எதிர் பார்ப்பதாக எழுதுவார்கள். தேர்தலில் அ.தி.மு.க. தோற்று தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றதும் ""அய்யோ - பணம் மழையாகப் பொழிந்தது. பணநாயகம் வென்றது"" என்று ஜெயலலிதாவும் அவரது பல்லக்குத் தூக்கிகளும் புலம்புவதைப் பெரிது பெரிதாக பிரசுரிப்பார்கள். `அவாளு’க்கு இதுவெல்லாம் கைவந்த கலைதானே?""   

 

பட்டிக்காடும் பட்டணமும்

பட்டிக்காடு:- ஏன் தம்பி; ``இந்த இடைத் தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கு வித்திடுவதாக அமையட்டும்? என்று கூறியிருக்கிறாரே ஜெயலலிதா?’’

பட்டணம்:- ""ஜெயலலிதா கட்சி இரு தொகுதி - இடைத்தேர்தல்களிலும் தோற்பது உறுதி. தோற்றபின் ""ஆட்சி மாறாது; 2011 சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க.வே வெற்றி பெறும்; தி.மு.கழக ஆட்சியே தொடரும் என்பதின் அடையாளமே இந்த இடைத்தேர்தல் முடிவுகள்"" - என்று ஜெயலலிதா அறிக்கை விடுவாரா? அறிவு நாணயம், வாக்கு நாணயம் ஆகியவைகளுக்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன சம்பந்தம்?""   

Read On 0 comments

மக்கள் என்ன ஜெயலலிதா மாதிரி பித்தலாட்டக்காரர்களா?

8:08 PM

எல்லோரும் ஜெயலலிதா மாதிரி பித்தலாட்டக்காரர்களா?

tblfpnnews_52600824833
""பணத்தைக் கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்கலாம் என்று நினைக்கிறார்கள். உங்களிடம் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். அதி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் - அது உங்கள் வரிப்பணம்"" என்று திருச்செந்தூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார்.

மக்கள் தந்த வரிப்பணம் என்றால் அதை மக்களிடமே வழங்குவதில் என்ன தவறு? ஆட்சியில் இருந்தபோது மக்கள் வரிப்பணத்தை அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கும் 20 சதவிகித போனசாகக்கூடத் தரமுடியாது என்று அறிவித்து எஸ்மா, டெஸ்மா சட்டங்களையெல்லாம் பிரயோகித்து - ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்களை ஒரு சொட்டு மையால் டிஸ்மிஸ் செய்தவர் இப்போது மக்கள் வரிப்பணம் பற்றிப்பேச என்ன யோக்கியதை இருக்கிறது? மக்கள் வரிப்பணத்தை அரசு ஊழியர்களுக்கே போனசாக வழங்கக்கூடாது - முடியாது என்று அன்று பேசிய வாய் இன்று ‘மக்கள் வரிப்பணத்தை வாங்கிக் கொண்டு வாக்குகளை எனக்குப் போடுங்கள்’ என்று கேட்கிறதே! இது என்ன பித்தலாட்டம்?

வாதத்திற்காக - பணம் தரப்போகிறார்கள் என்றே ஒப்புக் கொண்டு பார்த்தாலும் - வாக்காளப் பெருமக்கள் எல்லாம் ஒரு கட்சியிடம் பணம் வாங்கிக் கொண்டு இன்னொரு கட்சிக்கு வாக்களிப்பார்களா? எல்லோரும் தன்னைப்போலவே நாணயங்கெட்ட- பித்தலாட்டக்காரர்கள் என்று ஜெயலலிதா நினைக்கலாம். மக்கள் அப்படிப்பட்டவர்களா?

மக்கள் மீது என்ன ஒரு நம்பிக்கை!!

 

நன்றி :முரசொலி கட்டுரை

Read On 0 comments

இடைத்தேர்தல்: பிரியாணி, வேட்டி,சேலையைத்தொடர்ந்து மொபைல் ரீசார்ஜ்

10:18 AM

tblfpnnews_41199457646

வந்தவாசியில் இடைத்தேர்தலுக்காக தங்கியுள்ள கட்சியினருக்கு, ஆட்களை கொண்டு சமைத்து வருவதால், சமையல்காரர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.வந்தவாசி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., - அ.தி.மு.க., இடையே ஏற்பட்டுள்ள நேரடி போட்டியால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

 

புலம்பும் விடுபட்ட வாக்காளர்கள் :ஓட்டுக்கு அல்ல துட்டுக்கு...! வந்தவாசி தொகுதியில் முக்கிய கட்சியின் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வரும் நிலையில், இத்தொகுதியில் ஓட்டு போடுவதற்கான குறிப்பில் விடுபட்ட வாக்காளர்கள், தங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையே என புலம்புகின்றனர்.வந்தவாசி தொகுதியில் மொத்தம் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 210 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 80 ஆயிரத்து 561 ஆண் வாக்காளர்களும், 77 ஆயிரத்து 649 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.கடந்த லோக்சபா தேர்தலில் ஓட்டு அளித்தவர்கள் மட்டுமே இந்த தேர்தலிலும் ஓட்டளிக்க முடியும் என்ற நிலையுள்ளது.

tblfpnnews_50776308775

பிரியாணி சப்ளை: கூட்டம் முடியும் தருவாயில் தொண்டர்களை அழைத்து வந்த நிர்வாகிகளை தனியாக வரவழைத்து "டோக்கன்'கள் வழங்கப்பட்டன. இந்த டோக்கன்களை வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன. கையோடு குடிநீர் பாக்கெட்களும் கொடுத்தனர்.

tblArasiyalnews_89672487975 தொண்டர்கள் "தாகசாந்தி': பிரியாணி வாங்கி தொண்டர்கள் பலர், சாப்பிடுவதற்கு முன்பாக, அருகில் இருந்த "டாஸ்மாக்' கடைகளுக்குச் சென்று "தாகசாந்தி' செய்து கொண்டனர். பின்னர், கொடுக்கப்பட்ட பிரியாணியை ஒரு பிடி, பிடித்தனர். திருப்தியாக சாப்பிட்ட பின்னர் தாங்கள் வந்த வாகனங்களில் ஏறிச் சென்றனர்.

கல்யாண மண்டபத்தில் தயாரான பிரியாணி: கூட்டத்தில் கலந்து கொள்ளும் அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்காக நேற்று முன்தினம் இரவு, கல்யாண மண்டபம் ஒன்றில் உணவு தயாரிக்கப்பட்டது. இதற்காக 30க்கும் மேற்பட்ட ஆடுகள், 500க்கும் மேற்பட்ட கோழிகள் வாங்கப்பட்டன. மண்டபத்தில் இரவு முழுவதும் சமையல் செய்யப் பட்டது. பின்னர், பிரியாணிகள் பார்சல் கட்டி,பெட்டியில் அடுக்கி வைக்கப் பட்டன. கார், ஆட்டோ மற்றும் பைக்குகளில் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டு தொண்டர்களுக்கு வினியோகிக்கப் பட்டன. நிர்வாகிகளுக்கு மட்டும் தனியாக உணவு வழங்கப்பட்டது.

பிரியாணி "டோர்' டெலிவரி: வந்தவாசியில் நடந்த தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்களுக்காக, பிரியாணி சமைக்கப்பட்டது. பஸ் நிலையம் அருகில், பிரியாணி தயார் செய்யப் பட்டது. நூற்றுக்கணக்கானோர் இரவோடு இரவாக, பிரியாணியை பார்சல் செய்தனர். செயல் வீரர்கள் கூட்டத் தில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட பிரியாணி பார்சல் மோட்டார் பைக், மொபட் மற்றும் சைக்கிள்கள் மூலம் வீடு வீடாக சென்று

 

லேட்டஸ்ட் செய்தி:


fleskeskartice

வந்தவாசி தொகுதியில் தி.மு.க., - அ.திமு.க., உள்ளிட்ட கட்சிகள் வாக்காளர்களை கவரும் விதமாக பிரியாணி  வேட்டி, சேலையும் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில், தி.மு.க.,வினர் இளம் வாக்காளர்களை கவரும் வகையில், ரீசார்ஜ் கார்டுகள் கொடுத்துள்ளனர்.
கிராமம் கிராமாக செல்லும் கட்சி பிரமுகர்கள், இளைஞர்கள் அதிகம் கூடியிருக்கும் இடங்களை தேடிப் பிடிக்கின்றனர் என்றும்,  அவர்களிடம் மொபைல் ரீசார்ஜ் கார்டுகளை அளித்து ஓட்டு வேட்டையாடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read On 0 comments

‘ஸ்பெக்ட்ரம்’ ஊழல் குற்றச்சாட்டின் கதை

7:38 PM

a-raja தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா மீதான ஒரு லட்சம் கோடி இரண்டாம் தலைமுறை ‘ஸ்பெக்ட்ரம்’ ஊழல் குற்றச்சாட்டின் கதை

பரஞ்ஜோய் குஹா தாகுர்தா  தமிழில்: கே. முரளிதரன்

ஜூன் 16-30 தேதியிட்ட The Caravan இதழில் வெளிவந்த The Kingly Fiddle கட்டுரையின் தமிழாக்கம் இது. இக்கட்டுரையின் ஆசிரியரான பரஞ்சோய் குஹா தாகுர்தா பத்திரிகையின் கன்சல்டிங் எடிட்டர். கடந்த 30 ஆண்டு காலமாக பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் செயல்பட்டு வரும் இவர் தனித்தியங்கும் பத்திரிகையாளர்; கல்வியாளர்

கசியும் மௌனம்

கடந்த சில மாதங்களாகப் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் - சுதந்திர இந்தியா சந்தித்த மிகப் பெரிய நிதி ஊழல் என வர்ணிக்கப்படும் - 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல் தொடர்பான விவாதங்கள், சில வாரங்களுக்கு முன்னர் தில்லியிலுள்ள தொலைத்தொடர்புத் துறை அலுவலகம் மத்தியப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் சோதனையிடப்பட்டதிலிருந்து, தீவிரமடைந்திருக்கின்றன. 2ஜி என அழைக்கப்படும் ‘இரண்டாம் தலை முறை’ அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்து 2008 முதல் எழுப்பப்பட்டு வரும் சந்தேகங்களுக்கு மத்தியப் புலனாய்வுத் துறை மேற்கொண்ட இச்சோதனைகள் சட்டபூர்வமான ஆதாரங்களை அளித்திருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு வரையிலும்கூட இது பற்றிய விவாதங்களுக்கு நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகளோ ஊடகங்களோ பெரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. தினமணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தெகல்கா, காரவன், தி பயனீயர் போன்ற சில விதிவிலக்குகளைச் சுட்டிக்காட்டலாம் என்றாலும் நாட்டுக்குக் குறைந்தபட்சம் 50,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படக் காரணமாக இருந்த ஒரு நடைமுறை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளை மக்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்வதில் ஊடகங்களும் முக்கிய அரசியல் கட்சிகளும் காட்டிவருகிற தயக்கம், ஊழல் இந்தியாவில் விரிவும் ஆழமும் பெற்றுவருவதைச் சுட்டுகின்றது. அன்று ‘போபர்ஸ்’ தொடர்பான 64 கோடி ஊழலுக்கு இந்திய அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் ஆற்றிய எதிர்வினையோடு இன்றைய 50 ஆயிரம் கோடி ‘ஸ்பெக்ட்ரம்’ ஊழல் பெற்றிருக்கும் எதிர்வினைகள் ஒப்பிடப்பட வேண்டியவை.

 

மேலும் படிக்க இங்கே செல்லவும்

Read On 0 comments

நீதிபதி தினகரனுக்கு எதிராக கண்டன தீர்மானம்- பா​ஜக,​​ சமா​ஜ​வாதி,​​ இட​து​சாரி

8:52 PM

dinakaran

புது தில்லி,​​ டிச.​ 11:​ கர்​நா​டக உயர் நீதி​மன்ற தலைமை நீதி​பதி தின​க​ர​னுக்கு எதி​ராக கண்​ட​னத் தீர்​மா​னம் கொண்​டு​வ​ரக் கோரி மாநி​லங்​க​ள​வை​யைச் சேர்ந்த 50 உறுப்​பி​னர்​கள் கையெ​ழுத்​திட்​டுள்​ள​னர்.​


பா​ஜக,​​ சமா​ஜ​வாதி,​​ இட​து​சாரி கட்​சி​கள் உள்​ளிட்ட உறுப்​பி​னர்​கள் இதில் கையெ​ழுத்​திட்​டுள்​ள​னர்.​ காங்​கி​ரஸ் உறுப்​பி​னர்​கள் யாரும் இதில் கையெ​ழுத்​தி​ட​வில்லை.​


நீ​தி​பதி தின​க​ரன் உள்​ளிட்ட 5 நீதி​ப​தி​கள் உச்ச நீதி​மன்ற நீதி​ப​தி​க​ளாக நிய​மிப்​ப​தற்கு பரிந்​துரை செய்​யப்​பட்​டது.​ இந்​நி​லை​யில் நீதி​பதி தின​க​ரன் மீது நில ஆக்​கி​ர​மிப்பு தொடர்​பாக புகார் கூறப்​பட்​ட​தைத் தொடர்ந்து அவ​ரது பதவி உயர்வு தொடர்​பான பரிந்​துரை நிறுத்​தி​வைக்​கப்​பட்​டது.​


இந்​நி​லை​யில் அவர் மீது நட​வ​டிக்கை எடுக்​கக் கோரி மாநி​லங்​க​ள​வை​யைச் சேர்ந்த பாஜக உள்​ளிட்ட உறுப்​பி​னர்​கள் 50 பேர் கையெ​ழுத்​திட்டு அவைத் தலை​வ​ரி​டம் அளித்​துள்​ள​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​ மாநி​லங்​க​ளவை விதிப்​படி கண்​ட​னத் தீர்​மா​னம் கொண்​டு​வர குறைந்​தது 50 உறுப்​பி​னர்​கள் கையெ​ழுத்​திட்​டால் போதும்.​ அதன் மீது நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும்.​ எனவே வரும் வாரத்​தில் இந்த கண்​ட​னத் தீர்​மா​னம் கொண்​டு​வ​ரப்​பட்டு நிறை​வேற்​றப்​ப​டும் என சில பாஜக உறுப்​பி​னர்​கள் தெரி​வித்​த​னர்.​


இந்​நி​லை​யில் கடந்த திங்​கள்​கி​ழமை நாடா​ளு​மன்​றத்​தில் பேசிய மத்​திய சட்ட அமைச்​சர் வீரப்ப மொய்லி,​​ ஏற்​கெ​னவே உள்ள விதிப்​படி,​​ நீதி​ப​திக்கு எதி​ரான புகார் குறித்து உச்ச நீதி​மன்ற தலைமை நீதி​ப​தியே விசா​ரணை செய்து நட​வ​டிக்கை மேற்​கொள்​ள​லாம் எனத் தெரி​வித்​தார்

Read On 0 comments

விளாத்திகுளத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

8:49 PM

தூத்துக்குடி : விளாத்திகுளத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தபோது, கணக்கில் வராத 6,730 ரூபாய் வைத்திருந்ததாக அரசு முத்திரை ஆய்வாளர் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டது.தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., தங்கச்சாமி தலைமையில் போலீசார் நேற்று விளாத்திகுளத்தில் தனியார் லாட்ஜில் சோதனை செய்தனர். அங்கு தங்கியிருந்த, கோவில்பட்டி அரசு முத்திரை ஆய்வாளர் திருவள்ளுவன்(41), முத்திரை கொல்லர் ராமசாமி(51), தராசு பழுதுபார்க்கும் தொழிலாளி ராமச்சந்திரன்(60) ஆகியோரிடமிருந்து கணக்கில் வராத 6,730 ரூபாய் பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது

Read On 0 comments

பீகாரில் 300 அரசு அதிகாரிகள் கோடீஸ்வரர்கள்

6:31 PM

Las_Vegas_Money

பாட்னா : பீகாரில் ஊழல் பெருச் சாளிகளாக விளங்கும் அரசு அதிகாரிகளில் 300 பேர் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர் என்று ஊழல் கண்காணிப்புத் துறை தெரிவித்துள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஊழல் பெருச்சாளிகளான அரசு அதிகாரிகளை ஒழித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக் கிறார். அதன் பயனாக ஆண்டுதோறும் பீகாரில் ஊழல் கண்காணிப்புத் துறையின் அதிரடியான நடவடிக்கையில் பல அரசு அதிகாரிகள் சிக்கிக் கொள்கின்றனர்.

கடந்த நான்கு ஆண்டுகளில் 596 கெஜட் அதிகாரம் உடைய அதிகாரிகள்; 632 சாதாரண அதிகாரிகள் மீது ஊழல் வழக்குப் பதியப்பட்டது. இவர்களில் 2006ல் 76 பேர்; 2007ல் 131 பேர்; 2008ல் 97 பேர்; இந்த ஆண்டு நவம்பர் வரை 71 பேர் ஆக 375 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப் பட்டு வருகின்றனர். இவர்களில் 300 பேர் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் சேர்த்திருக்கின்றனர். இப்படி வெளிப்படையாக ஊழல் கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப் பட் டாலும், அதிகாரிகள் அசரவில்லை. அவர்களின் ஊழல் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. கைது செய்யப் பட்ட இத்தனை பேர்களில் இருவர் மட்டுமே பதவியிலிருந்து நீக்கப் பட்டுள்ளனர். மற்றவர்கள் இன்னும் பதவியில் தான் இருக்கின்றனர். இது குறித்து ஊழல் கண்காணிப்புத் துறையினர் கூறுகையில், "அதிகாரிகளைப் பதவியிலிருந்து தூக்க எங்களுக்கு அதிகாரம் கிடையாது. கைது செய்வது; எப்.ஐ.ஆர்., பதிவு செய் வது; விசாரணை; குற்றப் பத்திரிகை தாக்கல்; வழக்குப் பதிவு செய்வது இதுதான் எங்களது கடமை' என்று தெரிவித்தனர்

Read On 0 comments

நெடுஞ்சாலை ஆணையத்தில் சி.பி.ஐ., ரெய்டு : பின்னணியில் 'திடுக்' தகவல்கள்

5:47 PM

tblfpnnews_49413263798

சென்னை : சென்னை விமான நிலைய சரக்கு (கார்கோ) கஸ்டம்ஸ் பிரிவில் நடத்திய சோதனையை தொடர்ந்து, பல்வேறு இடங்களில் உள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிரடி சோதனை நடத்தி வருகிறது. இச்சோதனை மூலம் பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப் பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளில், லஞ்ச வேட்டையில் ஈடுபடும் அதிகாரிகள் மீது சி.பி.ஐ., பார்வை திரும்பியுள்ளது. சென்னை துறைமுகத்தில் நடந்த சோதனையை தொடர்ந்து, லஞ்சத்தில் புரண்ட சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் பிரிவில், சமீபத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, 12 கஸ்டம்ஸ் அதிகாரிகளை கைது செய்தனர். தொடர் சோதனையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. ஏர்போர்ட் கார்கோ பிரிவை சி.பி.ஐ., தொடர்ந்து, ரகசியமாக கண்காணித்து வருகிறது. இந்நிலையில், சி.பி.ஐ.,யின் அடுத்த குறி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மீது திரும்பியுள்ளது.

இதன் ஒரு கட்டமாக, பல்வேறு இடங்களில் உள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலகங்களிலும், உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் வீடுகளிலும் கடந்த இரண்டு தினங்களாக சி.பி.ஐ., சோதனை நடத்தி வருகிறது. இதில், நெடுஞ்சாலைத் ஆணையத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரி ஒருவரின் ஜெய்ப்பூர் வீட்டில் நடத்திய சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. சில அதிகாரிகள் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்திருப்பதும் தெரியவந்துள்ளது. முறைகேடாக சொத்து சேர்த்த அதிகாரிகளின் பட்டியலை சி.பி.ஐ., தயாரித்து வருகிறது. இதன் அடிப்படையில், சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சோதனைக்கு காரணம்

கிண்டியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலகம் இயங்கி வருகிறது. தென் மாநிலங்களின் மண்டல அலுவலகமான இங்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு முக்கிய திட்டங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த அலுவலகத்திற்கு சமீபத்தில் பொறுப்பேற்ற ஒரு உயர் அதிகாரி, திட்டப் பணிகளுக்கான பில்களை "பாஸ்' செய்வதில், காலதாமதம் செய்வதாகவும், பில் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் லஞ்சமாக கேட்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்திய நெடுஞ்சாலை துறை ஆணைய அதிகாரிகள் சிலரின் இந்த போக்கால், தென் மாநிலங்களில் நடந்து வரும் இந்திய தேசிய நெடுஞ் சாலை ஆணைய திட்டப் பணிகள், பெரும்பாலானவை கடந்த சில மாதங்களாக கிடப் பில் போடப்பட்டும், மந்தமாகவும் நடந்து வருகின்றன. இது குறித்த புகார்கள் சி.பி.ஐ., அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து, அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சி.பி.ஐ.,யின் சோதனையின் போது, எந்தெந்த திட்டங்கள் முடங்கியுள்ளன; கான்ட்ராக்ட் நிறுவனங்களிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்டுள்ளனரா; இதுவரை எவ்வளவு தொகை கைமாறியுள்ளது; கான்ட்ராக்டர்களுக்கு வழங்கப் படாமல் பாக்கி வைத்துள்ள தொகை எவ்வளவு; அதற்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் சி.பி.ஐ., விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, சில கான்ட்ராக்டர்களிடம் விசாரிக்கவும் சி.பி.ஐ., அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சி.பி.ஐ.,யின் இந்த அதிரடி நடவடிக்கையால் லஞ்ச அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை கான்ட்ராக்டர் ஒருவர் கூறுகையில், "பெரிய திட் டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்படுகின்றன. ஒவ் வொரு கட்டப் பணிகளும் முடிந்தவுடன், அதற்கான "பில்' நெடுஞ்சாலை ஆணைய அலுவலகத்தில் வழங்கப்படும். கடந்த சில மாதங்களுக்கு முன் வரை "பில்' வழங்கிய 10 நாட்களுக்குள் பணம் வழங்கப் பட்டது. ஆனால், தற்போது அவ்வாறு வழங்கப்படுவதில்லை. வழக்கத்தை காட்டிலும் கூடுதல் தொகையை அதிகாரிகள் லஞ்சமாக எதிர்பார்க் கின்றனர். இதனால், மாதக்கணக்கில் "பில்' செட்டில் செய்யப்படாமல் இருக்கிறது,' என்றார்.

முடங்கும் அபாயத்தில் கோயம்பேடு மேம்பாலம்: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், சென்னை ஏர்போர்ட் எதிரே ஜி.எஸ்.டி., சாலையிலும், கத்திப்பாரா, பாடி, கோயம்பேடு ஆகிய இடங்களிலும் மேம்பாலம் அமைக்கப்பட்டன. இதில், ஏர்போர்ட், கத்திப்பாரா, பாடி மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு, போக்குவரத்திற்கு திறக்கப்பட்டுள்ளன. ஆனால், கோயம்பேடு மேம்பாலம் இன்னமும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளின் மெத்தனமே காரணம் என்று தெரியவந்துள்ளது. தற்போது, கோயம்பேடு மேம்பாலப் பணியில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு சம்பளமே பல லட்சம் வழங்கப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில், 10 கோடி ரூபாய் அளவிற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான, "பில்' அளித்து நான்கு வாரங்கள் ஆகியும், சம்பந்தப்பட்ட கான்ட்ராக்ட் நிறுவனத்திற்கு இதுவரை பணம் வழங்கப்படவில்லை. இதனால், அடுத்த சில தினங்களில் கோயம்பேடு மேம்பால பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

Read On 0 comments

ஸ்ரீபெரும்புதூர் மின்வாரிய இளநிலைப் பொறியாளர்க்கு ஆப்பு

8:42 AM

arrest (1)

ஸ்ரீபெரும்புதூர்,டிச,9. மின் இணைப்பு வழங்க ரூ 3000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸôரால் கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி இவர் அதே பகுதியில் தான் புதிதாக கட்டும் வீட்டிற்கு மின் இணைப்பு வாங்குவதற்காக கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு தண்டலம் கிராமத்தில் உள்ள மின் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். விண்ணப்பித்து நான்கு மாதங்கள் ஆகியும் மின் இணைப்பு வழங்காததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்டலம் மின் அலுவலகத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த இளநிலை பொறியாளர் வெங்கடேசனிடம் தெரிவித்துள்ளார். அதற்கு வெங்கடேசன் ரூ.3000 பணம் கொடுத்தால் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். சுப்ரமணி இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸில் புகார் தெரிவித்தார்.  இதையடுத்து புதன்கிழமை சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸôர் சுப்ரமணியை ரூ 3000 பணத்தை இளநிலைப் பொறியாளர் வெங்கடேசனிடம் கொடுக்கச் சொல்லியுள்ளனர்.   இதையடுத்து சுப்ரமணியிடம் இருந்து வெங்கடேசன் பணத்தை பெற்ற போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸôர் வெங்கடேசனை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read On 0 comments

ஊழலி‌ன் ஊற்று‌க்க‌ண்

6:48 PM

editinside

தலையங்கம்

உலக ஊழ‌ல் ஒழி‌ப்பு தின‌ம் எ‌ன்று ஆ‌ண்​டு‌க்​‌கொரு மு‌றை ஊழ​லு‌க்கு எதி​ரான விழி‌ப்​பு​ண‌ர்‌வை ம‌க்​க‌ள் ம‌த்​தி​யி‌ல் ஏ‌ற்​ப​டு‌த்​து​வது எ‌ன்​ப‌தே அவ​மா​ன​க​ர​மான விஷ​ய‌ம்.​ ‌கொ‌லை ‌கொ‌ள்‌ளை ஒழி‌ப்பு தின‌ம்,​​ விப​சார ஒழி‌ப்பு தின‌ம்,​​ உ‌ண்‌மை ‌பேசு‌ம் தின‌ம் எ‌ன்​‌றெ‌ல்​லா‌ம்​கூட ஏ‌ற்​ப​டு‌மோ எ‌ன்று பய​மாக இரு‌க்​கி​றது.​

ஊழ‌ல் எ‌ன்​பது உல​க​ளா​விய விஷ​ய​மா​கி​வி‌ட்​டது எ‌ன்​ப​தா‌ல் அ‌தை அ‌ன்​றாட வா‌ழ்‌க்​‌கை​யி‌ன் அ‌ம்​ச​மா​க‌வே ‌பெரு‌ம்​பா​‌லே‌ô‌ர் ஏ‌ற்​று‌க்​‌கொ‌ண்டு வி‌ட்​ட​தா​க‌த் ‌தோ‌ன்​று​கி​றது.​ ராஜா ராணி கால‌த்தி​லி​ரு‌ந்து ஆ‌ட்​சி​யா​ள‌ர்​க​ளு‌க்கு ‌நெரு‌க்​க​மாக இரு‌ந்​த​வ‌ர்​க‌ள் அதி​க‌ப்​ப​டி​யான சலு​‌கை​க‌ளை அனு​ப​வி‌ப்​பது எ‌ன்​பது புதிய விஷ​ய​ம‌ல்ல.​ அ‌தே​‌போல,​​ ஆ‌ட்​சி​யா​ள‌ர்​க​ளி‌ல் பல‌ர் குடி​ம‌க்​க​ளி‌ன் நல​‌னை‌ப் ப‌ற்​றி‌யே கவ​‌லை‌ப்​ப​டா​ம‌ல் சகல ‌சௌ​பா‌க்​கி​ய‌ங்​க​ளு​ட‌ன் ராஜ​‌போ​க​மாக ஊதாரி வா‌ழ்‌க்‌கை வா‌ழ்‌ந்த சரி‌த்​தி​ர‌ம் உல​க​ளா​விய ஒ‌ன்று.​

ஆ‌ட்​சி​‌யை​யு‌ம் அதி​கா​ர‌த்​‌தை​யு‌ம் ஒரு சில‌ர் பர‌ம்​ப‌ரை பா‌த்​தி​ய‌தை ‌கொ‌ண்​டாடி வரு​வ​‌தை​யு‌ம்,​​ குடி​ம‌க்​க​ளி‌ன் ந‌ல்​வா‌ழ்​‌வை‌ப் ப‌ற்​றிய சி‌ந்​த​‌னை‌யே இ‌ல்​லா​ம‌ல் ஆ‌ட்​சி​யா​ள‌ர்​க​ளு‌ம் அவ‌ர்​க​ளு‌க்கு ‌நெரு‌க்​க​மா​ன​வ‌ர்​க​ளு‌ம் ‌செய‌ல்​ப‌ட்டு வரு​வ​‌தை​யு‌ம் பா‌ர்‌த்து ம‌க்​க‌ள் ‌கொதி‌த்து எழு‌ந்​த​த‌ன் வி‌ளை​வு​தா‌ன் ம‌ன்​ன‌ர் ஆ‌ட்​சி‌க்கு மு‌ற்​று‌ப்​பு‌ள்ளி ‌வை‌க்​க‌ப்​ப‌ட்​ட​து‌ம்,​​ ம‌க்​க​ளா‌ட்சி மல‌ர்‌ந்​த​து‌ம்.​ நியா​ய​மா​க‌ப் பா‌ர்‌த்​தா‌ல் ம‌க்​க​ளா‌ட்​சி​யி‌ல் ல‌ஞ்​ச‌ம்,​​ ஊழ‌ல்,​​ அதி​கார து‌ஷ்​பி​ர​‌யோ​க‌ம்,​​ ஒரு சில‌ர் தனி‌ச் சலு​‌கை​க‌ள் ‌பெறு​வது ‌போ‌ன்​ற​வ‌ற்​று‌க்‌கே இட‌ம் இரு‌க்​க​லா​காது.​

ஆ‌ட்சி மு‌றை மாறி​ய‌தே தவிர ம‌ன்​ன​ரா‌ட்​சி​யி‌ன் தவ​று​க​ளு‌ம் கு‌றை​பா​டு​க​ளு‌ம் க‌ளை​ய‌ப்​ப‌ட்​ட​னவா எ‌ன்று ‌கே‌ட்​டா‌ல் உத‌ட்​‌டை‌ப் பிது‌க்க ‌வே‌ண்டி இரு‌க்​கி​றது.​ பர‌ம்​ப‌ரை ஆ‌ட்​சி‌க்​கு‌க்​கூட ம‌க்​க​ளா‌ட்​சி​யி‌ல் மு‌ற்​று‌ப்​பு‌ள்ளி ‌வை‌க்க முடி​யாத நி‌லை‌மை.​ ஜா‌ர் ம‌ற்​று‌ம் பதி​‌னெ‌ட்​டா‌ம் லூயி ம‌ன்​ன‌ர்​க​ளு‌க்​கு‌ப் பதி​லாக ஹி‌ட்​ல‌ர்,​​ மு‌சோ​லினி,​​ இடி அமி‌ன் எ‌ன்று ச‌ர்​வா​தி​கா​ரி​க​ளு‌ம்,​​ ம‌க்​க​‌ளை‌ப் ப‌ற்​றிய கவ​‌லை‌யே இ‌ல்​லா​ம‌ல் த‌ங்​க​ளது மன‌ம் ‌போன ‌போ‌க்​கி‌ல் நட‌ந்த ஆ‌ட்​சி​யா​ள‌ர்​க​ளு‌ம் ம‌க்​க​ளா‌ட்​சி​யி​லு‌ம் ‌தொட‌ர்​வ​து​தா‌ன் ‌வேடி‌க்‌கை.​

வள‌ர்‌ச்சி அ‌டை‌ந்த நாடு​க‌ள்,​​ வள‌ர்‌ச்சி அ‌டை​யாத நாடு​க‌ள் எ‌ன்​கிற ‌வேறு​பா‌டே இ‌ல்​லா​ம‌ல்,​​ ம‌க்​க​ளா‌ட்சி,​​ ச‌ர்​வா​தி​கார ஆ‌ட்சி,​​ ராணுவ ஆ‌ட்சி எ‌ன்​‌றெ‌ல்​லா‌ம் வி‌த்​தி​யா​ச‌ம் பாரா​ம‌ல் எ‌ங்​கு‌ம் எ‌ல்லா இட‌த்​து‌ம் நீ‌க்​க​மற நி‌றை‌ந்​தி​ரு‌க்​கு‌ம் பர‌ம்​‌பொ​ரு‌ள்​‌போல ல‌ஞ்​ச​மு‌ம்,​​ ஊழ​லு‌ம்,​​ அதி​கார து‌ஷ்​பி​ர​‌யோ​க​மு‌ம்,​​ தனி​ந​ப‌ர் சலு​‌கை​க​ளு‌ம் பர‌ந்து விரி‌ந்​தி​ரு‌ப்​பது மனித சமு​தா​ய‌த்​து‌க்‌கே கள‌ங்​க​மா​க​வு‌ம் அவ​மா​ன​மா​க​வு‌ம் ‌தொட‌ர்​கி​றது.​

ல‌ஞ்ச ஊழ​‌லை‌ப் ‌பொறு‌த்​த​வ‌ரை ஒரு ‌வேடி‌க்​‌கை​யான விஷ​ய‌ம் எ‌ன்​ன​‌வெ‌ன்​றா‌ல்,​​ இது படி‌த்​த​வ‌ர்​க​ளி‌ன் தனி‌ச்​‌சொ‌த்து எ‌ன்​ப​து​தா‌ன்.​ கிரா​ம‌ங்​க​ளி‌ல் படி‌க்​காத ஏ‌ழை விவ​சா​யி‌யோ,​​ ‌தொழி​லா​ளி‌யோ ல‌ஞ்​ச‌ம் வா‌ங்​க​வு‌ம்,​​ ஊழ‌ல் ‌செ‌ய்​ய​வு‌ம் வா‌ய்‌ப்‌பே இ‌ல்​லா​த​வ‌ர்​க‌ள்.​ அரசு அலு​வ​ல‌ர்​க​ளா​னா​லு‌ம்,​​ காவ‌ல்​து​‌றை​யி​ன​ரா​னா​லு‌ம் அவ‌ர்​க‌ள் படி‌த்​த​வ‌ர்​க‌ள்.​ அவ‌ர்​க‌ள்​தா‌ன் ல‌ஞ்​ச‌ம் வா‌ங்​கு​கி​றா‌ர்​க‌ள்.​ அ‌ப்​பாவி ஏ‌ழை​க​ளு‌ம்,​​ படி‌ப்​ப​றி​வி‌ல்​லா​த​வ‌ர்​க​ளு‌ம்,​​ சாமா​னி​ய‌ர்​க​ளு‌ம்,​​ நடு‌த்​தர வ‌ர்‌க்​க‌த்​தி​ன​ரு‌ம் இ‌ந்​த‌ப் படி‌த்த "கன'வா‌ன்​க​ளி‌ன் ‌பேரா​‌சை‌க்​கு‌த் தீனி ‌போட ‌வே‌ண்​டிய நி‌ர்​ப‌ந்​த‌ம்.​

பிகா​ரி‌ல் முத‌ல்​வ‌ர் நிதீ‌ஷ் குமா‌ர் பதவி ஏ‌ற்​ற​து‌ம் ஊழ​லு‌க்கு எதி​ரா​க‌க் கடு‌ம் நட​வ​டி‌க்​‌கை​க‌ளை ‌மே‌ற்​‌கொ‌ண்​டா‌ர்.​ ல‌ஞ்​ச‌ம் வா‌ங்​கு‌ம்​‌போது ‌கையு‌ம் கள​வு​மா​க‌ப் பிடி​ப‌ட்டு,​​ ​ ‌கைது ‌செ‌ய்​ய‌ப்​ப‌ட்ட 365 அரசு ஊழி​ய‌ர்​க​ளி‌ல் 300 ‌பேரு‌க்​கு‌ம் அதி​க​மா​ன​வ‌ர்​க‌ள் ‌கோடீ‌ஸ்​வ​ர‌ர்​க‌ள் எ‌ன்​பது ​ விசா​ர​‌ணை​யி‌ல் ‌தெரிய வ‌ந்​தது.​

கட‌ந்த நா‌ன்கு ஆ‌ண்​டு​க​ளி‌ல்,​​ சுமா‌ர் 1000 அரசு உய‌ர் அதி​கா​ரி​க‌ள் ம‌ற்​று‌ம் ஊழி​ய‌ர்​க‌ள்​மீது வழ‌க்​கு‌த் ‌தொட​ர‌ப்​ப‌ட்​டி​ரு‌க்​கி​றது.​ இவ‌ர்​க​ளி‌ல் சில‌ர் சி‌றை‌த் த‌ண்​ட​‌னை​யு‌ம் அனு​ப​வி‌த்​த​வ‌ர்​க‌ள்.​ ஆனா​லு‌ம் இவ‌ர்​க​ளி‌ல் ஒ‌ன்​றி​ர‌ண்டு கண‌க்​க‌ர்​க​ளு‌ம்,​​ க‌டை​நி‌லை ஊழி​ய‌ர்​க​ளு‌ம் தவிர யாரு‌ம் பதவி நீ‌க்​க‌ம் ‌செ‌ய்​ய‌ப்​ப​ட​வி‌ல்‌லை.​ வழ‌க்​கு​க‌ள் ‌தொட​ர‌ப்​ப‌ட்டு நட‌ந்து ‌கொ‌ண்​டி​ரு‌க்​கி‌ன்​ற​ன‌வே தவிர தீ‌ர்‌ப்பு எழு​த‌ப்​ப​ட​வி‌ல்‌லை.​ இவ‌ர்​க​‌ளை‌ப் பதவி நீ‌க்​க‌ம் ‌செ‌ய்ய ‌மேல​தி​கா​ரி​க‌ள் தயா​ரு​மி‌ல்‌லை.​ பிகா​ரி‌ல் ம‌ட்​டு​ம‌ல்ல,​​ இ‌ந்​தியா முழு​வ​து‌மே உ‌ள்ள நி‌லை‌மை இது​தா‌ன்.​

ஐ‌ம்​ப​து​க​ளி‌ல் உ‌ள்​து‌றை அ‌மை‌ச்​ச​ராக இரு‌ந்த கு‌ல்​ஜா​ரி​லா‌ல் ந‌ந்​தா​வி‌ல் ‌தொட‌ங்கி எ‌த்​த‌னை எ‌த்​த​‌னை‌யோ பிர​த​ம‌ர்​க​ளு‌ம்,​​ உ‌ள்​து‌றை அ‌மை‌ச்​ச‌ர்​க​ளு‌ம்,​​ அர​சி​ய‌ல் த‌லை​வ‌ர்​க​ளு‌ம் ஊழ​லு‌க்கு எதி​ரா​க‌ப் ‌போ‌ரை அறி​வி‌த்து விள‌ம்​ப​ர‌ம் ‌தேடி‌க் ‌கொ‌ண்​டா‌ர்​க‌ளே தவிர ஊழ‌ல் ஒழி​ய​வு‌ம் இ‌ல்‌லை.​ ஊழ​லு‌க்கு எதி​ரான வா‌ய் சவ​டா‌ல் கு‌றை​ய​வு​மி‌ல்‌லை.​

அர​சி​ய‌ல் த‌லை​வ‌ர்​க​ளி‌ன் ஊழ​‌லை‌க்​கூ​ட‌ப் புரி‌ந்து ‌கொ‌ள்​ள​லா‌ம்.​ ‌தே‌ர்​த​லு‌க்​கு‌ச் ‌செலவு ‌செ‌ய்த பண‌த்‌தை ல‌ஞ்​ச‌ம் வா‌ங்கி ஈடு​க‌ட்டி,​​ அடு‌த்த ‌தே‌ர்​த‌ல்​க​ளு‌க்​கான பண‌த்​‌தை‌ச் ‌சே‌ர்‌த்து ‌வை‌க்க முய‌ற்​சி‌க்​கி​றா‌ர்​க‌ள் எ‌ன்று சமா​தா​ன‌ம் ‌சொ‌ல்ல முடி​யு‌ம்.​ ‌கொ‌ள்‌ளை அடி‌த்​து‌க் ‌கொ‌ள்​ள​வு‌ம்,​​ ல‌ஞ்​ச‌ம் வா‌ங்​கி‌க் ‌கொ‌ள்​ள​வு‌ம் ம‌க்​க‌ள் அவ‌ர்​க​ளு‌க்கு வா‌க்​க​ளி‌த்து அனு​மதி வழ‌ங்கி இரு‌க்​கி​றா‌ர்​க‌ள் எ‌ன்று மன​‌தை‌த் ‌தே‌ற்​றி‌க் ‌கொ‌ள்​ள​லா‌ம்.​

ஆனா‌ல்,​​ ம‌க்​க​ளி‌ன் வரி‌ப்​ப​ண‌த்​தி‌ல் ச‌ம்​ப​ள‌ம் வா‌ங்​கு‌ம் அரசு அதி​கா​ரி​க‌ள்,​​ ம‌க்​க​ளி​ட‌மே ல‌ஞ்​ச‌ம் வா‌ங்​கு​வது எ‌ந்த வித‌த்​தி‌ல் நியா​ய‌ம்?​ வா‌ங்​கு‌ம் ச‌ம்​ப​ள‌ம் த‌ங்​க​ளது தகு​தி‌க்​கு‌ம் திற​‌மை‌க்​கு‌ம் ஏ‌ற்​ற​தாக இ‌ல்​‌லை​‌யெ‌ன்​றா‌ல் ராஜி​நாமா ‌செ‌ய்​து​வி‌ட்டு ‌வேறு ‌வே‌லை பா‌ர்‌த்​து‌க் ‌கொ‌ள்​வ​து​தா‌னே?​ ம‌க்​க​ளா‌ட்​சி​யி‌ல் ம‌க்​க​ளு‌க்​காக உ‌ழை‌ப்​ப​த‌ற்​காக ம‌க்​க​ளா‌ல் ச‌ம்​ப​ள‌ம் ‌கொடு‌த்து நிய​மி‌க்​க‌ப்​ப‌ட்​டி​ரு‌க்​கு‌ம் ‌வே‌லை‌க்​கா​ர‌ர்​க‌ள்,​​ ம‌க்​க​ளி‌ன் ‌கோரி‌க்​‌கை‌யை நி‌றை​‌வே‌ற்ற ம‌க்​க​ளி​ட‌மே ல‌ஞ்​ச‌ம் வா‌ங்​கு​வது தடு‌க்​க‌ப்​ப‌ட்​டா‌ல் ஒழிய,​​ ல‌ஞ்​ச​மு‌ம் ஊழ​லு‌ம் அ‌ன்​றாட வா‌ழ்‌க்​‌கை​யி‌ன் ​ அ‌ங்​க​மா​க‌த் ‌தொட‌ர்​வ​‌தை‌த் தடு‌க்க முடி​யாது.​

ல‌ஞ்​ச​மு‌ம் ஊழ​லு‌ம் படி‌த்​த​வ‌ன் ‌செ‌ய்​யு‌ம் தவறு.​ "இவ​‌னெ‌ல்​லா‌ம் படி‌த்​தா‌ல் எ‌ன்ன,​​ படி‌க்​கா​ம‌ல் ‌போனா‌ல் எ‌ன்ன?​' எ‌ன்று ‌கே‌ட்​க‌த் ‌தோ‌ன்​று​கி​றதா?​ படி‌க்​கா​வி‌ட்​டா‌ல் ல‌ஞ்​ச‌ம் வா‌ங்க முடி​யா‌தே...!

Read On 0 comments

சேலம் 'டான்மாக்' உதவி மேலாளருக்கு ஆப்பு

6:02 PM

tblSambavamnews_65926760436

சேலம் : கான்ட்ராக்டரிடம் ஒப்பந்த "பில் பாஸ்' செய்ய, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய "டான்மாக்' உதவி மேலாளரை, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சேலம் அருகே தேக்கம்பட்டியை சேர்ந்தவர் சங்கர்(40). இவர், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தில் (டான்மாக்) வெள்ளைக்கல் தரம் பிரிக்கும் ஒப்பந்த பணி செய்கிறார். "டான்மாக்'கில் உதவி மேலாளராக பணியாற்றுபவர் பாலு(44). இவர், சங்கர் மேற்கொள்ளும் ஒப்பந்த பணிக்கான பில்லை "பாஸ்' செய்யும் பொறுப்பில் உள்ளார். ஒவ்வொரு மாதமும், சங்கர் மேற்கொள்ளும் ஒப்பந்த பணிக்கான "பில்'லை உதவி மேலாளர் பாலு "பாஸ்' செய்து வந்தார். கடைசியாக சங்கர் மேற்கொண்ட ஒப்பந்த பணிக்கான "பில்' பாஸ் செய்யாமல் நிலுவையில் இருந்தது. ஒப்பந்த பணிக்கான தொகையை "பாஸ்' செய்ய, சங்கரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார் பாலு. இதுகுறித்து, சங்கர் சேலம் லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். அவர்கள் அறிவுரைப்படி, சங்கர், ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பாலுவிடம் கொடுத்தார். அதை அவர் வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் பாலுவை கைது செய்தனர்

Read On 0 comments

தாம்பரம் துணை நில ஆய்வாளருக்கு ஆப்பு: ரூ.10 ஆயிரம் லஞ்சம்

6:00 PM

tblSambavamnews_68372744322

சென்னை : இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை நில ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ஜல்லடியன்பேட்டையைச் சேர்ந்தவர் தனசேகர்(42). பி.எஸ்.என்.எல்.,லில் பணிபுரிந்து வருகிறார். குடியிருக்கும் வீட்டிற்கு, சொந்த பெயரில் இலவச வீட்டுமனை பட்டா பெறுவதற்காக, தாம்பரம் நத்தம் நில வரித்திட்டம், துணை நில ஆய்வாளர் கபிலனை(52) அணுகினார். பட்டா வழங்குவதற்கு கபிலன், 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதில் முன்பணமாக 10 ஆயிரம் ரூபாய் நேற்றும், மீதி 40 ஆயிரம் ரூபாயை வரும் வெள்ளிக்கிழமை அன்றும் தரும்படி தனசேகரிடம் கூறினார். இதுகுறித்து தனசேகர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை, சென்னை நகர் பிரிவு-1 டி.எஸ்.பி.,க்கள் நடராஜன், திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், கஜேந்திரவரதன், குமரகுருபரன், லட்சுமிகாந்தன் ஆகியோர் நேற்று காலை தாம்பரம் தாசில்தார் அலுவலகத்தில் மறைந்திருந்து கண்காணித்தனர்.

தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள டீ கடைக்கு தனசேகரை வரவைத்த கபிலன், லஞ்சப் பணம் 10 ஆயிரம் ரூபாயை வாங்கினார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கபிலனை கையும், களவுமாக கைது செய்தனர். கபிலனிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், கபிலனின் பாக்கெட்டில் இருந்த 26 ஆயிரத்து 800 ரூபாயையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். பின், கபிலனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்

Read On 0 comments

மனுவை தொலைத்த அதிகாரிகள் : இழப்பீடு வழங்கியது மத்திய தகவல் கமிஷன்

7:02 PM

 

makalgraph

சென்னை:தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட மேல் முறையீட்டு மனுவை தாலைத்துவிட்டு, மனுதாரரை சென்னைக்கும் டில்லிக்கும் அலைக்கழித்த விஷயத்தில், பாதிக்கப்பட்டவருக்கு மத்திய தகவல் கமிஷன் 5,000 ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது.சென்னை துறைமுகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் சண்முகநாதன். இவர் கடந்த 2006ம் ஆண்டு, ஜூன் 26ம் தேதி மத்திய தகவல் அதிகாரி, கப்பல் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் துறைமுக அதிகாரிகளுக்கான "வேஜ் ரிவிஷன் கமிட்டி' கொடுத்த ஒரு பரிந்துரை சம்பந்தமாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சில தகவல்களை கேட்டார். இதற்கு பதில் இல்லை. பின், மேல்முறையீடு செய்தார். அதற்கும் பலன் இல்லை.கடந்த 2006ல் மத்திய தகவல் கமிஷனில் மேல் முறையீடு செய்தார். அப்போதும், அவரது கோரிக்கை நிறைவேறவில்லை.

இதையடுத்து, கடித நகலுடன், சண்முகநாதன் தனது மேல்முறையீட்டு மனுவை இணைத்து, இந்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதில் கேட்டார். கிட்டத்தட்ட 480 நாட்கள் கழித்து, தனது மனு மீதான நடவடிக்கை குறித்து மீண்டும் தகவல் கேட்டார்.இதற்கு, "விண்ணப்பதாரரின் மனுவை தேடினோம். கிடைக்கவில்லை' என, மத்திய தகவல் கமிஷன் அதிகாரிகள் பதில் அளித்தனர். இதையடுத்து, தனது மேல்முறையீட்டு மனுவும், தான் அனுப்பிய 11 கடிதங்களும் கிடைத்ததா, இல்லையா என்று தகவல் தரும்படி "அப்பெல்லெட் அத்தாரிட்டிக்கு' சண்முகநாதன் மேல்முறையீடு செய்தார்.இதையடுத்து, சண்முகநாதனை டில்லியில் உள்ள மத்திய தகவல் கமிஷன் அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என கடிதம் அனுப்பினர். சண்முகநாதன் நேரில் ஆஜராகி,"மேல்முறையீட்டு மனுவும், கடிதங்களும் கிடைத்தன. பின், அந்த மனு தவறிவிட்டது' என, உத்தரவாதம் பெற்றுக் கொண்டார்.இது குறித்து, "தினமலர்' நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதனால், உற்சாகமும், தெம்பும் அடைந்த சண்முகநாதன், நீதி கேட்கும் தனது போராட்டத்தை தீவிரப்படுத்தினார்.

மத்திய தகவல் கமிஷனுக்கு சண்முகநாதன் அனுப்பிய ஒரு மனுவில், "இந்த வழக்கில் டில்லியில் உள்ள மத்திய தகவல் கமிஷனுக்கு நேரில் செல்ல போக்குவரத்து செலவு, உணவு, தங்கும் செலவு, விரைவு தபால் அனுப்பிய செலவு, துறைமுகத்திற்கு நேரில் சென்ற ஆட்டோ கட்டணம் உட்பட, எனக்கு 15 ஆயிரம் ரூபாய் செலவானது. இதை மத்திய தகவல் கமிஷன் வழங்க வேண்டும்' என்று கேட்டிருந்தார்.இது குறித்து, விரிவான விசாரணை நடத்திய மத்திய தகவல் கமிஷனர் திவாரி, சண்முகநாதனுக்கு இழப்பீட்டு தொகையாக 5,000 ரூபாய் வழங்க கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார். இந்த தொகையை இரண்டு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, சண்முகநாதனுக்கு மத்திய தகவல் அளிக்கும் அதிகாரி, 5,000 ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கினார்.

இந்த சம்பவத்தின் மூலம் மத்திய தகவல் கமிஷனில் உள்ள குளறுபடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.சண்முகநாதன் கூறுகையில், "தகவல் கேட்டு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் தகவல் அளிக்காவிட்டால் ஒவ்வொரு நாளுக்கும் 250 ரூபாய் அபராதம் கொடுக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த சம்பவத்தில், மத்திய தகவல் கமிஷன், விண்ணப்பித்த 522 நாட்களுக்கு பிறகே மனுவை தொலைத்துவிட்ட உண்மையை ஒப்புக் கொண்டுள்ளது. மேலும், இந்த மனு மீது நடவடிக்கை எடுத்து முடிவு சொல்ல 577 நாட்கள் ஆகிவிட்டன' என்றார்.

விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி!:தகவல் அறியும் உரிமை சட்டம், பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம் என்பது சண்முகநாதன் விஷயத்தில் நிரூபணமாகியுள்ளது. விடாது போராடி, மத்திய தகவல் கமிஷன் வரை தனது பிரச்னையை கொண்டு சென்று, இழப்பீடும் பெற்றார். மேலும், அவரின் இந்த முயற்சியின் பலனாக நாட்டின் 11 பெரிய துறைமுகங்களில் பணிபுரியும் 1,000க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் பயன் அடைந்துள்ளனர். சண்முகநாதனின் முயற்சியால், கடந்த 1997ம் ஆண்டு முதல் அந்த அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு தர கப்பல் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. உச்சக்கட்டமாக, மத்திய தகவல் கமிஷன், முறையாக தகவல் அளிக்க தவறிய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்தை கடுமையாக எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read On 0 comments

திருப்பூர் வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்: வீடியோ ஆதாரத்தால் சிக்கினார்

6:39 PM

 

Beggar Extends his hand for Money

திருப்பூர்:திருப்பூரில் சிட்டா அடங்கல் வழங்க 4,500 ரூபாய் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ.,வை சஸ்பெண்ட் செய்து, ஆர்.டி.ஓ., சையத் ஹூமாயூன் உத்தரவிட்டார். நில அளவையர் சண்முகம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.திருப்பூர் தாராபுரம் ரோடு நாச்சிமுத்து கவுண்டர் லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர், திருப்பூர் தாலுகா அலுவலகம் நில அளவைத் துறைக்கு சிட்டா அடங்கல் கோரி விண்ணப்பித்தார். நகர வி.ஏ.ஓ., பொன்னுசாமி மற்றும் நில அளவையர் சண்முகம் ஆகியோர் சிட்டா அடங்கல் வழங்க தாமதம் செய்து, ஒரு மாதம் காலம் கடத்தினர். பின், 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளனர்.

பக்ரீத் அரசு விடுமுறை தினத்தில், ஜீவானந்தத்தின் வீட்டுக்கு, வி.ஏ.ஓ., பொன்னுசாமி, நில அளவையர் சண்முகம் உதவியாளர்களுடன் வந்து இடத்தை அளந்தனர். பின், லஞ்சமாகக் கேட்ட பணத்தை தரும்படி பேசினர். பேரத்துக்கு பின், 20 ஆயிரமாக லஞ்சப் பணம் குறைக்கப்பட்டு, முன்பணமாக 4,500 ரூபாயை தன் வீட்டுக்கு வெளியே ஜீவானந்தம், வி.ஏ.ஓ.,விடம் கொடுத்தார். இதை, ஜீவானந்தத்தின் சகோதரர் சுப்ரமணியன், வீடியோவில் பதிவு செய்து கொண்டார்.வி.ஏ.ஓ., லஞ்சம் பெற்றது தொடர்பாக, வீடியோ ஆதாரத்துடன் கலெக்டருக்கு புகார் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக வி.ஏ.ஓ., பொன்னுசாமியை ஆர்.டி.ஓ., சையத் ஹூமாயூன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். நில அளவையர் சண்முகம் இட மாற்றம் செய்யப்பட்டு, அவரிடம் சம்பவம் தொடர்பாக விளக்கம் கோரப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடக்கிறது

Read On 0 comments

அரசு அலுவலர்கள் சொத்துக்கணக்குகளை வெளியிட பொதுநல வழக்கு

1:53 AM

 

mchozhan2

அரசு அலுவலர்கள் தங்களது சொத்து கணக்குகளை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா எட்டிமங்கலத்தை சேர்ந்தவர் பி.ஸ்டாலின், ஐகோர்ட்டு வக்கீல். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், அனைத்து மாநில ஐகோர்ட்டு நீதிபதிகள் தாமாகவே முன்வந்து தங்களது சொத்து கணக்குகளை வெளியிட்டுள்ளனர். இதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். இதே போன்று தமிழகத்தில் பணியாற்றும் அரசு அலுவலர்கள், அதிகாரிகள் தங்களது சொத்து கணக்குகளை வெளியிட உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர்கள் நடத்தை விதியில் அரசு அலுவலர்கள் தங்களது பெயரிலோ அல்லது தங்களது குடும்பத்தினர் பெயரிலோ சொத்துக்கள் வாங்கினாலோ அல்லது அவர்கள் பெயரில் உள்ள சொத்துக்களை அடமானம் வைத்தாலோ, விற்பனை செய்தாலோ சொத்து பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதே போன்று நடத்தை விதியில் அரசு அலுவலர், அதிகாரிகள் தங்களது சொத்து கணக்குகளை விருப்பப்பட்டால் வெளியிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடத்தை விதி 1973 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது உள்ள சூழ்நிலையில் அரசு அலுவலர்கள், அதிகாரிகள் கண்டிப்பாக சொத்துக் கணக்குகளை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டால் மட்டுமே அவர்கள் வெளியிடுவார்கள்.

தமிழகத்தைப் பொருத்த அளவில் நேர்மையான அதிகாரிகள், அலுவலர்கள் பலர் உள்ளனர். சில அலுவலர்கள், அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு பணிகளை மேற்கொள்வதால் ஓட்டு மொத்த அரசு அலுவலர்கள், அதிகாரிகளின் பெயர்களும் கெட்டு விடுகின்றன. அரசுத்துறையில் பணியாற்றும் அடிமட்ட ஊழியர் முதல் உயர்பதவியில் இருக்கும் அதிகாரிகள் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் மாட்டிக்கொள்வது அன்றாட செய்தித் தாள்களில் வந்த வண்ணம் இருக்கிறது.

லஞ்சம் பெறும் அலுவலர்கள், அதிகாரிகள் சிலர் தந்திரமான முறையில் தப்பித்து வருகின்றனர். சொத்துக்கணக்குகளை கண்டிப்பாக வெளியிட வேண்டும் என்று உத்தரவிடும் போது, சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த பணத்தை அதிகாரிகள், அலுவலர்களால் மறைக்க முடியாது. இதன் மூலம் லஞ்சம் பெறுவதை ஒழிக்க முடியும்.

சமீபத்தில் நாமக்கல் கலெக்டர் சகாயம் தனது சொத்துக் கணக்குகளை வெளியிட்டார். இதன் மூலம் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் நேர்மையான செயல்பாட்டை மக்கள் புரிந்து கொள்ள முடிகிறது.

எனவே தமிழகத்தில் பணியாற்றக்கூடிய அனைத்து அலுவலர்கள், அதிகாரிகள் தங்கள் சொத்து கணக்குகளை வெளியிட தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளருக்கு 14.11.2009 அன்று மனு அனுப்பினேன். அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நான் அனுப்பிய மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க தமிழக தலைமை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நாளை(7 ந் தேதி) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Read On 0 comments

நடிகை புவனேஸ்வரிக்கு மாநில மகளிர் அணி செயலாளர் பொறுப்பு!

1:47 AM

bhuvaneswari-1

சென்னை: வீட்டில் ஆள் வைத்து விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ள நடிகை புவனேஸ்வரி திடீரென தீவிர அரசியலில் குதித்து விட்டார். ஜாதிக் கட்சியான டாக்டர் சேதுராமனின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு மாநில மகளிர் அணிச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை அடையாரில் உள்ள தனது வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து கையும் களவுமாக பிடிபட்டவர் புவனேஸ்வரி. இவரது கைது சம்பவம் மற்றும் அதைத் தொடர்ந்து வெளியான நடிகைகள் குறித்த செய்திகள்  தமிழகத்தில் புயலைக் கிளப்பின.

எந்தெந்த நடிகை உல்லாசத்திற்கு எவ்வளவு வாங்குகிறார் என்ற பட்டியல் தன்னிடம் இருப்பதாக கூறி அதை போலீஸாரிடம் புவனேஸ்வரி தெரிவித்ததாகவும், வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரம் செய்த தன்னை கைது செய்தது நியாயமில்லை என்று கூறி புவனேஸ்வரி புலம்பியதாகவும் செய்திகள் வெளியாகின.

தற்போது புவனேஸ்வரி ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். இந்த நிலையில் நேற்று திடீரென அரசியலில் குதித்து விட்டார் புவனேஸ்வரி.

மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தில் அவர் சேர்ந்துள்ளார். அக்கட்சியின் நிறுவனரான டாக்டர் சேதுராமன் முன்னிலையில், கட்சியில் இணைந்தார்.

இதுகுறித்து புவனேஸ்வரியின் வக்கீல்கள் டி.ரமேஷ், காமேஸ்வரராவ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திரைப்பட மற்றும் டி.வி. நடிகை டி.புவனேஸ்வரி, மூவேந்தர் முன்னேற்ற கழகத்தில், கட்சியின் தலைவர் டாக்டர் சேதுராமன் முன்னிலையில் இணைந்தார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள அலுவலகத்தில் டாக்டர் சேதுராமனுக்கு அப்போது மாலை அணிவித்தார். நடிகை டி.புவனேஸ்வரிக்கு மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் மாநில மகளிர் அணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது என்றனர்.

முன்பு அதிமுகவுக்கு ஆதரவாக இருந்து வந்தார் புவனேஸ்வரி. தேர்தல் பிரசாரத்திலும் கூட ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் விபச்சாரத்தில் ஈடுபட்டு கைதான பின்னர் தற்போது மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தில் அவர் இணைந்துள்ளார்

இப்ப என்ன செய்வீங்க …  இப்ப என்ன செய்வீங்க …

Read On 0 comments

லஞ்சம் இல்லாத இந்தியா?

1:02 AM

indian-currency

தினகரன் தலையங்கம்

‘இந்தியா லஞ்ச ஊழலில் திளைக்கும் நாடு என்றுதான் உலகமும் பார்க்கிறது. அணுகுண்டு வைத்திருக்கிறோம், ஆஸ்கர் விருது பெற்றுள்ளோம், ஆண்டுக்கு ஏழெட்டு சதவீத பொருளாதார வளர்ச்சி காண்கிறோம், ஐந்து வருடத்துக்கு ஒரு தடவை தேர்தல் நடத்தி அதிசயிக்க வைக்கிறோம்.. ஆனாலும் இந்த அவமானம் நம்மை விட்டு போவேனா என்கிறது. உலக அளவில் 180 நாடுகளில் நடத்திய ஆய்வில் இந்தியா 84வது இடத்தில் இருக்கிறதாம். ஓட்டப் பந்தயத்தில் அத்தனாவது இடத்தில் வந்தால் வேடிக்கை பார்க்கக்கூட எவரும் மிச்சமிருக்க மாட்டார்கள். டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த ஆய்வை நடத்துகிறது. சென்ற ஆண்டு நமக்கு 85ம் இடம். அதற்கு முன்னால் 72. நாடாளுமன்ற வாக்கெடுப்பில் கத்தை கத்தையாக கரன்சி நோட்டுகள் கைமாறிய விவகாரத்தால் தடாலென்று 13 படி சறுக்கினோம். அரசு துறைகளில் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வேலைகள் எப்படி முடித்துக் கொடுக்கப்படுகிறது என்பதை அளவுகோலாக வைத்து ஆய்வு நடத்தப்படுகிறது.


அதில் மொத்தம் 13 குறியீடுகள். அதிகாரிகளின் நேர்மை ஒரு குறியீடு. லஞ்சம் வாங்காமல் வேலையை முடித்து தருவதாக ஆய்வில் பங்கேற்ற அனைவரும் தெரிவித்தால் முழு மதிப்பெண் போடப்படும். இந்த விஷயத்தில் இந்தியா பெற்றுள்ளது 10க்கு 3.4 மட்டுமே. பக்கத்தில் உள்ள குட்டி நாடு பூடான் 5 மார்க் வாங்கியுள்ளது. தனியார் துறை ஊழல்கள் இந்த கணக்கில் வராது. உலகிலேயே லஞ்சம் குறைந்த நாடு நியூசிலாந்து. அடுத்து டென்மார்க், அப்புறம் சிங்கப்பூர். இம்மூன்றும் 9க்கு மேல் பெற்றுள்ளன. இந்தியாவில் லஞ்சம் தலைவிரித்து ஆடும் துறைகளில் முதன்மையானது காவல் துறை. லஞ்சம் குறைந்தது பள்ளிக் கல்வித் துறை. ஊழல் மிகுந்த மாநிலம் என்ற பெருமையை பெறுவது பீகார். அடுத்து வருவது காஷ்மீர், மத்திய பிரதேசம். அரசுப் பணிகளை கணினி மயமாக்கியதால் லஞ்சம் பெரிய அளவில் குறைந்துவிடவில்லை என்று அகமதாபாத் ஐஐஎம் நடத்திய ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. ஏனென்றால் அந்த கணினிகளை கையாள்வது மனிதர்கள். அவர்களுக்கு பதில் ரோபோக்களை நியமித்து அரசு எந்திரத்தை உண்மையிலேயே எந்திரமாக்கினால் இந்தியாவும் அதிக மதிப்பெண் பெற வாய்ப்பு இருக்கிறது.

Read On 0 comments

நீதிபதி தினகரன் பதவி உயர்வு: சட்ட அமைச்சகம் நிராகரிப்பு

9:16 AM

25-pd-dinakaran-200

புதுடில்லி : கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி தினகரனை, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கும்படி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குழு அளித்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.நீதிபதி தினகரன் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிராக நில அபகரிப்பு குற்றச் சாட்டு கூறப்பட்டுள்ளதால், அவருக்கு பதவி உயர்வு அளிப்பதை மறுபரிசீலனை செய்யும்படியும், சுப்ரீம் கோர்ட் குழுவை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக சட்ட அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்ட ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் பட்டியலில், கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி தினகரன் பெயரையும் சேர்த்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குழு மத்திய சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்திருந்தது.ஆனால், இதை ஏற்க சட்ட அமைச்சகம் மறுத்து விட்டது. உளவுத்துறை, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உட்பட பல தரப்பிலும் நடத்தப்பட்ட விசாரணையில், நீதிபதி தினகரன் மீதான நில அபகரிப்பு குற்றச்சாட்டுக்கள் உண்மை என தெரியவந்துள்ளதால், அவருக்கு பதவி உயர்வு அளிக்க வாய்ப்பு இல்லை என, தெரிவித்து விட்டது.தினகரன் தொடர்பான பைலையும் தலைமை நீதிபதிக்கே திருப்பி அனுப்பி விட்டது. நீதிபதி தினகரன் விவகாரத்தில், மேலும் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளது.இவ்வாறு சட்ட அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியிடம் கருத்து கேட்க முற்பட்ட போது, அவர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்

Read On 1 comments

Cartoon Corner

7:50 PM
adade10 adade12
cartoon18a homeattai1
cartoon23 21cartoon
adade04 1car
   
5car cartoon2
1car 3car
   
Read On 0 comments

ரூ.20,000 லஞ்சம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டர் கைது

7:31 PM

arrest

நாகை மாவட்டம் பொறையாறு அருகே காழியப்பநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ்(வயது 65). இவர் சில ஆண்டுகளாக திருச்சியில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருள்தாஸ் திருக்கடையூரை சேர்ந்த பாலமுருகன் என்பவரிடம் நிலம் வாங்க ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கொடுத்து ஒப்பந்தம் செய்தார்.
அப்போது ஒப்பந்த காலத்திற்குள் நிலத்தை பத்திரப்பதிவு செய்து தருவதாக அருள்தாசிடம், பாலமுருகன் தெரிவித்தார். ஆனால் ஒப்பந்தக்காலம் முடிந்து பல மாதங்களாகியும் அருள்தாசின் பெயருக்கு நிலம் பத்திரப்பதிவு செய்யப்படவிலலை.
இதனால் அருள்தாஸ் பொறையாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகார் மனுவை பெற்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன்(52) ரூ.45 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அருள்தாஸ் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன், மீது நாகை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் செய்தார். இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுரைப்படி முதல் தவணையாக ரூ.20 ஆயிரம் பணத்தை பொறையாறு போலீஸ் நிலையத்தில் வைத்து தருவதாக சப் இன்ஸ்பெக்டர் குணசேகரனிடம் அருள்தாஸ் கூறினார்.
அதன்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு பொறையாறு போலீஸ் நிலையத்திற்கு அருள்தாஸ் சென்றார். பணத்தை சப் இன்ஸ்பெக்டர் குணசேகரனிடம் அருள்தாஸ் கொடுத்தார். பணத்தை பெற்றுக் கொண்ட சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மேஜையில் வைத்தார்.
அப்போது அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குணசேகரனை சுற்றி வளைத்து கையும், களவுமாக பிடித்தனர்.

இதன் பின் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரனை போலீசார் கைது செய்து நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் லஞ்சஒழிப்பு போலீசார் பொறையாறில் குணசேகரன் தங்கியிருந்த தனியார் லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர்

Read On 0 comments

பி.எப். பணத்தை கொடுக்க லஞ்சம் சார்பதிவாளர் கைது

7:28 PM

arrest-10 பாபநாசம், டிச. 2: தஞ்சை மாவட்டம் பாப நாசம் படுகை புதுத் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(43). இவர் கபிஸ்தலம் தொடக்க வேளாண் கூட் டுறவு வங்கியில் தலைமை எழுத்தராக பணியாற்றி வருகிறார். இவர் சேம நல நிதியில் இருந்து பணம் கேட்டு கடந்த அக்டோபர் 1ம் தேதி பாபநாசம் கூட்டுறவு சார்பதிவாளர் ராஜேந்திரனிடம் மனு கொடுத்தார்.

இதையடுத்து கடந்த 6ம் தேதி குடந்தை மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து பாலசுப்பிரமணியன் பெய ருக்கு ரூ.51 ஆயிரத்துக்கான காசோலை வந்தது. ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத் தால் மட்டுமே காசோலை தர முடியும் என பாலசுப் பிரமணியனிடம், சார் பதிவாளர் ராஜேந்தி ரன் கூறியுள்ளார். இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீ சார் ஏற்பாட்டின் படி நேற்று சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்ற பாலசுப்பிரமணியன், ராஜேந்திரனிடம் ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார்.அப்போது அவர் பணத்தை வாங்காமல், அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான மெடிக்கல் கடைக்கு வந்து கொடுக்கும்படி கூறியுள் ளார். பின்னர் மருந்துக் கடையில் ராஜேந்திரன் பணத்தை வாங்கியபோது, போலீசார் அவரை கைது செய்தனர்

Read On 0 comments

ஸ்ரீவி., மோட்டார் வாகன ஆய்வாளர் ஆபிசில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு

7:26 PM

tblSambavamnews_52126711607 ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்ததில் கணக்கில் வராத 22000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.சிவகாசியை சேர்ந்தவர் தேன்ராஜ். சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவருடைய வேன், நவ.,23ல், கிருஷ்ணன்கோவில் அருகில் விபத்துக்குள்ளாகியது.

விபத்துக்குண்டான சான்றிதழ் வழங்க வேனை, குருசாமி ஸ்ரீவில்லிபுத்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு கடந்த 27ம் தேதி கொண்டு வந்தார். அவரிடம் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் கணேச சுப்பிரமணியம் சான்றிதழ் வழங்க 2000 ரூபாய் லஞ்சம் கேட்டார். அதை கொண்டு வந்து கொடுக்கும்படி போட்டோ எடுப்பவராக பணிபுரியும் சீனிவாச காந்தி கூறினார். குருசாமியிடமிருந்து வேனின் ஆர்.சி., இன்சூரன்ஸ், பெர்மிட் புத்தகங்களை, இருவரும் வாங்கி வைத்தனர்.

இது தொடர்பாக குருசாமி, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். அவர்களின் ஆலோசனைப்படி நேற்று 2000 ரூபாயை கொடுக்கும் போது ஆர்.சி. புக், இன்சூரன்ஸ், பெர்மிட் புத்தகத்தை விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு டிச.,1ல் அனுப்பி வைத்ததாக கூறி பணத்தை வாங்க மறுத்தனர்.இதையடுத்து டி.எஸ்.பி., குலோத்துங்க பாண்டியன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனை நடத்தியதில் விபத்திற்குள்ளான வேன் தொடர்பாக புத்தகங்களை விருதுநகர் அலுவலகத்திற்கு அனுப்பாதது தெரிய வந்தது.

மேலும் புரோக்கர் சரவணனிடம் 3140 ரூபாயும், ரிக்கார்டு கிளார்க் சிங்காரத்திற்கு கொடுப்பதற்காக புரோக்கர் கண்ணன் வைத்திருந்த 18,310 ரூபாயும், விடுமுறையில் உள்ள பூட்டப்பட்ட இளநிலை உதவியாளர் ஒருவரின் மேஜை டிராயரில் இருந்த 1,220 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்

Read On 0 comments

கட்டதுரை காங்கிரசும்… கைப்புள்ள திமுகவும் - (ஒரு Parody பதிவு)

10:10 AM

Opening Scene:

[மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர்  ஜெய்ராம் ரமேஷ் புண்ணியத்தால்,முல்லைப் பெரியாற்றில்  புதிய அணைக்கான ஆய்வு நடத்துவதற்குத் தேவையான அனுமதியை வாங்கி விட்ட கேரள அரசு அதை தற்போது மும்முரமாக மேற்கொண்டுள்ளது.]

image

இந்த கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல நம்ம கிட்ட விளையாடரதே வேலையா போச்சு….. பாத்ருவோம் இன்னிக்கு.. இந்த கைபுள்ளயா.. அந்த கட்டட்துரையான்னு.. எடுரா வண்டிய……..

 

என் சங்கது 0ஆளை அடிச்சவன் எவண்டா?..  ஆன்.. கேட்கலை பக்கதுல வந்து சொல்லு..   நான் கிழிச்ச கோட்ட தாண்ட மாட்டேன்.. எ ஆளு வருவான் சொல்லி அனுப்பு… சரி தல..

[மத்திய அமைச்சர் ராசா, ஜெய்ராம் ரமேஷை நேரில் சந்தித்து முதல்வர் கருணாநிதி யின் எச்சரிக்கைக் கடிதத்தை நேரிலேயே வழங்கி, இந்த விவகாரத்தில் விளையாட வேண்டாம் என்று கூறியதாகத் தெரிகிறது. மத்திய அரசின் இந்தச் செயலால் தமிழக மக்களிடையே கொதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர்  ராசா தெரிவித்தார்.]

  imageஎன் சங்கது ஆளை அடிச்சவன் எவண்டா?..   என்னது… டாவா…  டாய் கட்டதுரை ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தா என் ஆள அடிச்சு பாரு…

 

[முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மத்திய இணை அமைச்சர் ஒருவர் நடந்துகொண்ட விதத்தை கண்டித்து மதுரை மாநகரில் 1.11.2009 ஞாயிற்றுக் கிழமையன்று திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும்.]

(கும்)….வொய்…வொய்ங்ங்ங்…..

[2 ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பாக நேற்று மாலை திடீரென வழக்குப் பதிவு செய்த சிபிஐ இன்று மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகிறது.]

vadivelu_comedy_from_the_winner_movie_part_1 உன் தாய் பத்தினின்னு ஒத்துக்கறேன்..நெக்ஸ்ட் மீட் பண்றேன்……

 

[மத்திய அமைச்சருக்கு எதிரான கண்டன  பொதுக்கூட்டம் என்பதற்கு பதிலாக, முல்லைப் பெரியாறு புதிய அணைக்கு தமிழ்நாடு எதிர்ப்பு: மதுரை மாநகரில் மாபெரும் பொதுக் கூட்டம் என திமுகவின் அதிகாரப் பூர்வ நாளேடான முரசொலியில் இன்று விளம்பரம் வெளியாகி உள்ளது]

image வேணாம்… என்னை யாரும் தொட்டதில்ல.. போன மாசம்தான அடிச்சேன்.. அது போன மாசம், நான் சொல்றது இந்த மாசம்.

[முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழ்நாடு பாதிக்கப்படக் கூடாது என்று மத்திய அரசு  கருதுகிறது. 'சர்வே' நடத்துவதற்கு மட்டும்தான் மத்திய இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கேரளாவுக்கு அனுமதி கொடுத்தார். அவரைக் கண்டித்து மதுரையில் வரும் 10ம் தேதி கண்டனப் பொதுக் கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். ஸ்பெக்ட்ரம் ஊழலைக் கண்டித்து காங்கிரஸால் கண்டனக் கூட்டம் நடத்த முடியாதா? எல்லோருக்கும் ஒரு நியாயம்தான். தமிழ்நாட்டில் தாளம் போடுவதற்கென்றே புலவர்கள் கூட்டம் உள்ளது. "காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுக்கு எதிராக திமுகவின் போராட்டம் தொடர்ந்தால் தக்க பதிலடி கொடுப்போம்'' என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.]

GsnUK4hrHzM.gif வலிக்குது..  வேணாம்… அழுதுறுவேன்… எடுரா மாப்ள.. என்ன..து .. நம்பர் சொல்ற…டொம் டொம்

 

[மத்திய அரசுக்கு 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ) தனது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.]

thumb_youtube_rNPcRPzhZgA என்ன தல நொண்டர… கால்ல போட்டாங்கலோ… அடேயப்ப  அடி வாங்குன கைப்புள்ளக்கே இத்தன அடின்னா அடி வாங்குனவன் உயிரோடியிருப்பான்னு நம்பற…. இந்த ஊரூ இன்னுமாடா.. நம்பள நம்புது… அது அவங்க தலயெழுத்து… விடு தல….

[முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டதை கண்டித்து முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில் மதுரையில் 1 ந் தேதி நடைபெறுவதாக இருந்த கண்டன பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றுவருவதை கருத்தில் கொண்டு கண்டன பொதுக்கூட்டம் தள்ளிவைக்கப்படுவதாக தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.]

karunanidhi_20090427

சிரிங்க சைட்ல கொஞ்சம் சிந்திங்க..ரைட் விடு…

Read On 0 comments

"என் வாழ்க்கையே எனது செய்தி"

Blog Archive


Followers