வச்சுட்டான்யா...ஆப்பு
லஞ்சம் வாங்கறவங்களுக்கு...

லஞ்சம் பெற்ற மேலும் 3 சுங்க அதிகாரிகளுக்கு ஆப்பு

சென்னை விமான நிலைய சரக்குப்பிரிவில் லஞ்சம் பெற்றதாக பெற்றதாக மேலும், 3 சுங்க இலாகா அதிகாரிகளை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள சரக்குப் பிரிவில் இருந்து உலக நாடுகளுக்கு அனுப்பப்படும் பொருட்களும், அதுபோல் பிற நாடுகளில் இருந்து வரும் பொருட்களும் சோதனை செய்யப்பட்டு, சுங்க வரி உள்பட வரியினங்கள் வசூலித்த பின்னரே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.

get_prisson--200x150 இந்த சரக்குப்பிரிவில் வரியினங்களை குறைவாக காட்டி பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் கூறப்பட்டன. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு சி.பி.ஐ. அதிகாரிகள் விமான நிலைய சரக்குப்பிரிவில் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.
அப்போது, பொருட்களை சரிவர சோதனையிடாமல் சுங்க வரி குறைவாக காட்டி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி லட்சக்கணக்கில் சுங்க இலாகா அதிகாரிகள் லஞ்சம் பெற்றதை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக சுங்க இலாகா சரக்குப்பிரிவு அதிகாரிகள் 9 பேர் கைது செய்யப்பட்டு தற்காலிகமாக பணி நீக்கமும் செய்யப்பட்டும் உள்ளனர்.

இந்த நிலையில், தடை செய்யப்பட்ட பார்சல்களை கடந்த 2 தினங்களாக சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து சோதனை போட்டனர். அப்போது, மேலும் லஞ்சம் பெற்றதாக சுங்க இலாகா சூப்பிரண்டுகள் சின்ஹா, புகழேந்தி, தடுப்பு அதிகாரி கிரிபிரசாத் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.
இதையடுத்து சி.பி.ஐ. வேட்டையில் சிக்கிய சுங்க இலாகா அதிகாரிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.
கைது செய்யப்பட்ட சுங்க இலாகா அதிகாரிகள் மூவரும் சி.பி.ஐ. வழக்குகளுக்கான விசேஷ நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை 3 நாள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதித்தார். ஏற்கனவே சி.பி.ஐ. காவலில் இருந்த பாஸ்கர், கண்ணன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நேற்று நீதிமன்ற காவலில் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டனர். ஏஜெண்டு குமாரை மேலும் 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

இந்த வழக்கில் குமார் என்பவர்தான் முக்கிய குற்றவாளி ஆவார். அவர்தான் அதிகாரிகளுக்கு லஞ்சத்தை வாங்கி வாரி, வாரி வழங்கி கோடி, கோடியாக கொட்டி கொடுத்து உள்ளார். அவர் கொடுத்த வாக்குமூலத்தில், `கடந்த 4 ஆண்டுகளாக ஏஜெண்டு தொழில் செய்வதாகவும், இந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ.35 கோடி வரை லஞ்சம் வாங்கி கொடுத்துள்ளதாக பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார்.

சரக்குப்பிரிவில் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் குறித்து சி.பி.ஐ. காவல்துறையினர் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

" ஓட்டு போட்டால், இந்த செய்தி இன்னும் நிறைய பேரைப் போய் சேரும் .Please

0 comments:

Post a Comment


Followers