வச்சுட்டான்யா...ஆப்பு
லஞ்சம் வாங்கறவங்களுக்கு...

சவக் கிடங்கு வாசலில் தலைவிரித்தாடுது லஞ்சம் : சரிகிறது மனித நேயம்

கோவை :கோவை அரசு மருத்துவமனையில் லஞ்ச முறைகேடு தலைவிரித்தாடுகிறது. சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் சடலத்தை பார்க்கக் கூட, "கட் டணம் நிர்ணயித்து' உறவினர்களிடம் பணம் பறிக்கின்றனர்.

tblfpnnews_1414126158 நூற்றாண்டு சிறப்பு மிக்க கோவை அரசு மருத்துவமனையில் 1,500 உள்நோயாளிகளும், தினமும் 7,000 வெளிநோயாளிகளும் சிகிச்சைபெறுகின்றனர். தவிர, சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைவோர், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோர், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுகின்றனர். சிகிச்சை பலனின்றி உயிரிழப்போரின் பிரேதம், சவ கிடங்குக்கு அனுப்பப்படுகிறது. அதன் பின், சட்டம் சார்ந்த மருத்துவத்துறையினரால் "பிரேத பரிசோதனை' நடத்தப்பட்ட பின், உறவினரிடம் ஒப்படைக் கப்படுகிறது.உயிரிழந்தோரின் உடல் சவ கிடங்கினுள் வைக்கப்பட்டிருக்கும் போது, உறவினர் மற்றும் நண்பர்கள் கண்ணீரும், கம்பலையுமாக சென்று உடலை பார்க்க முற்படுகின்றனர். இதற்காக, சவ கிடங்கு ஊழியர்களை அணுகி, அனுமதி கேட்டு கெஞ்சுகின்றனர்.

நீண்ட நேர காத்திருப்புக்கு பின் உள்ளே செல்ல அனுமதிக்கும் ஊழியர்கள், உடலை பார்த்து திரும்பும் போது பணம் கேட்டு நிர்பந்தம் செய்கின்றனர். " பிணத்தை பார்க்கவும் லஞ்சமா' என மனம் வெதும்பும் உறவினர்கள், "போனால் போகட்டும்...' என நினைத்து 10, 20 நோட்டுகளை நீட்டுகின்றனர். இவற்றை வாங்க மறுக்கும் ஊழியர்கள், "50 ரூபாயாவது கொடு' எனக்கேட்டு அடம் பிடித்து பணம் பறிக்கின்றனர். இவ்வாறு, பிணத்தை பார்க்க தினமும் ஏராளமான நபர்களிடம் பணம் பறிக்கப்படுகிறது. தவிர, "போஸ்ட்மார்ட்டம்' முடிந்து உடலை ஒப்படைக்கும் போது "காடா துணி, வாசனை திரவியம் வாங்கிய வகையில் செலவு' எனக்கூறி, 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை உறவினரிடம் வசூலிக்கின்றனர்.

இத்தொகையை தர மறுக்கும் போது வாக்குவாதம் செய்கின்றனர். பிரேதத்தை வைத்து பேரம் நடத்த விரும்பாத பலரும் கேட்ட தொகையை கொடுத்து விடுகின்றனர். ஆனால், கூலி வேலை செய்யும் ஏழை, எளிய மக்க ளால், இவ்வளவு தொகையை கொடுக்க முடிவதில்லை; வேறு வழியின்றி, மருத்துவமனை வளாகத்தில் கூடியிருக்கும் உறவினரிடம் கடன் பெற்றாவது இத் தொகையை கொடுத்துவிட்டு, பிரேதத்தை எடுத்துச் செல்கின்றனர்.இது தொடர்பான புகார் அதிகரித்ததை தொடர்ந்து, "லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற் றம்' என்ற அறிவிப்பு பலகைகள் மட்டும் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல இடங்களிலும் வைக்கப்பட்டன.

அதில், மருத் துவ அலுவலரின் போன் நம்பர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.எனினும், மக்கள் தெரிவிக்கும் புகார்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் யாராவது கேள்வி எழுப்பினால், "போனில் புகார் தெரிவிக்கும் நபர்கள், நேரில் வந்து எழுத்து பூர்வ புகார் மனுவை அளிக்க வேண்டும். அப்போது தான், தவறு செய்த ஊழியர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ள முடியும்' என்கிறது. அதாவது, " மருத்துவமனை நிர்வாகத்தால் தமது ஊழியர்களின் முறைகேடுகளை சுயமாக தடுக்க முடியாது என்று கூறி பொறுப்பை தட்டிக்கழித்து,  "யாரும் எழுத்து பூர்வமான புகார் தருவதில்லை' என, மக்கள் மீதே பழியை போடுகின்றனர். இது போன்ற பண முறைகேடுகளை முடிவுக்கு கொண்டு வர, மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

" ஓட்டு போட்டால், இந்த செய்தி இன்னும் நிறைய பேரைப் போய் சேரும் .Please

0 comments:

Post a Comment


Followers