வச்சுட்டான்யா...ஆப்பு
லஞ்சம் வாங்கறவங்களுக்கு...

ஸ்ரீவி., மோட்டார் வாகன ஆய்வாளர் ஆபிசில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு

tblSambavamnews_52126711607 ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்ததில் கணக்கில் வராத 22000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.சிவகாசியை சேர்ந்தவர் தேன்ராஜ். சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவருடைய வேன், நவ.,23ல், கிருஷ்ணன்கோவில் அருகில் விபத்துக்குள்ளாகியது.

விபத்துக்குண்டான சான்றிதழ் வழங்க வேனை, குருசாமி ஸ்ரீவில்லிபுத்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு கடந்த 27ம் தேதி கொண்டு வந்தார். அவரிடம் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் கணேச சுப்பிரமணியம் சான்றிதழ் வழங்க 2000 ரூபாய் லஞ்சம் கேட்டார். அதை கொண்டு வந்து கொடுக்கும்படி போட்டோ எடுப்பவராக பணிபுரியும் சீனிவாச காந்தி கூறினார். குருசாமியிடமிருந்து வேனின் ஆர்.சி., இன்சூரன்ஸ், பெர்மிட் புத்தகங்களை, இருவரும் வாங்கி வைத்தனர்.

இது தொடர்பாக குருசாமி, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். அவர்களின் ஆலோசனைப்படி நேற்று 2000 ரூபாயை கொடுக்கும் போது ஆர்.சி. புக், இன்சூரன்ஸ், பெர்மிட் புத்தகத்தை விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு டிச.,1ல் அனுப்பி வைத்ததாக கூறி பணத்தை வாங்க மறுத்தனர்.இதையடுத்து டி.எஸ்.பி., குலோத்துங்க பாண்டியன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனை நடத்தியதில் விபத்திற்குள்ளான வேன் தொடர்பாக புத்தகங்களை விருதுநகர் அலுவலகத்திற்கு அனுப்பாதது தெரிய வந்தது.

மேலும் புரோக்கர் சரவணனிடம் 3140 ரூபாயும், ரிக்கார்டு கிளார்க் சிங்காரத்திற்கு கொடுப்பதற்காக புரோக்கர் கண்ணன் வைத்திருந்த 18,310 ரூபாயும், விடுமுறையில் உள்ள பூட்டப்பட்ட இளநிலை உதவியாளர் ஒருவரின் மேஜை டிராயரில் இருந்த 1,220 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்

" ஓட்டு போட்டால், இந்த செய்தி இன்னும் நிறைய பேரைப் போய் சேரும் .Please

0 comments:

Post a Comment


Followers