வச்சுட்டான்யா...ஆப்பு
லஞ்சம் வாங்கறவங்களுக்கு...

நெடுஞ்சாலை ஆணையத்தில் சி.பி.ஐ., ரெய்டு : பின்னணியில் 'திடுக்' தகவல்கள்

tblfpnnews_49413263798

சென்னை : சென்னை விமான நிலைய சரக்கு (கார்கோ) கஸ்டம்ஸ் பிரிவில் நடத்திய சோதனையை தொடர்ந்து, பல்வேறு இடங்களில் உள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிரடி சோதனை நடத்தி வருகிறது. இச்சோதனை மூலம் பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப் பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளில், லஞ்ச வேட்டையில் ஈடுபடும் அதிகாரிகள் மீது சி.பி.ஐ., பார்வை திரும்பியுள்ளது. சென்னை துறைமுகத்தில் நடந்த சோதனையை தொடர்ந்து, லஞ்சத்தில் புரண்ட சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் பிரிவில், சமீபத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, 12 கஸ்டம்ஸ் அதிகாரிகளை கைது செய்தனர். தொடர் சோதனையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. ஏர்போர்ட் கார்கோ பிரிவை சி.பி.ஐ., தொடர்ந்து, ரகசியமாக கண்காணித்து வருகிறது. இந்நிலையில், சி.பி.ஐ.,யின் அடுத்த குறி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மீது திரும்பியுள்ளது.

இதன் ஒரு கட்டமாக, பல்வேறு இடங்களில் உள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலகங்களிலும், உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் வீடுகளிலும் கடந்த இரண்டு தினங்களாக சி.பி.ஐ., சோதனை நடத்தி வருகிறது. இதில், நெடுஞ்சாலைத் ஆணையத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரி ஒருவரின் ஜெய்ப்பூர் வீட்டில் நடத்திய சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. சில அதிகாரிகள் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்திருப்பதும் தெரியவந்துள்ளது. முறைகேடாக சொத்து சேர்த்த அதிகாரிகளின் பட்டியலை சி.பி.ஐ., தயாரித்து வருகிறது. இதன் அடிப்படையில், சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சோதனைக்கு காரணம்

கிண்டியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலகம் இயங்கி வருகிறது. தென் மாநிலங்களின் மண்டல அலுவலகமான இங்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு முக்கிய திட்டங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த அலுவலகத்திற்கு சமீபத்தில் பொறுப்பேற்ற ஒரு உயர் அதிகாரி, திட்டப் பணிகளுக்கான பில்களை "பாஸ்' செய்வதில், காலதாமதம் செய்வதாகவும், பில் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் லஞ்சமாக கேட்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்திய நெடுஞ்சாலை துறை ஆணைய அதிகாரிகள் சிலரின் இந்த போக்கால், தென் மாநிலங்களில் நடந்து வரும் இந்திய தேசிய நெடுஞ் சாலை ஆணைய திட்டப் பணிகள், பெரும்பாலானவை கடந்த சில மாதங்களாக கிடப் பில் போடப்பட்டும், மந்தமாகவும் நடந்து வருகின்றன. இது குறித்த புகார்கள் சி.பி.ஐ., அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து, அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சி.பி.ஐ.,யின் சோதனையின் போது, எந்தெந்த திட்டங்கள் முடங்கியுள்ளன; கான்ட்ராக்ட் நிறுவனங்களிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்டுள்ளனரா; இதுவரை எவ்வளவு தொகை கைமாறியுள்ளது; கான்ட்ராக்டர்களுக்கு வழங்கப் படாமல் பாக்கி வைத்துள்ள தொகை எவ்வளவு; அதற்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் சி.பி.ஐ., விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, சில கான்ட்ராக்டர்களிடம் விசாரிக்கவும் சி.பி.ஐ., அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சி.பி.ஐ.,யின் இந்த அதிரடி நடவடிக்கையால் லஞ்ச அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை கான்ட்ராக்டர் ஒருவர் கூறுகையில், "பெரிய திட் டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்படுகின்றன. ஒவ் வொரு கட்டப் பணிகளும் முடிந்தவுடன், அதற்கான "பில்' நெடுஞ்சாலை ஆணைய அலுவலகத்தில் வழங்கப்படும். கடந்த சில மாதங்களுக்கு முன் வரை "பில்' வழங்கிய 10 நாட்களுக்குள் பணம் வழங்கப் பட்டது. ஆனால், தற்போது அவ்வாறு வழங்கப்படுவதில்லை. வழக்கத்தை காட்டிலும் கூடுதல் தொகையை அதிகாரிகள் லஞ்சமாக எதிர்பார்க் கின்றனர். இதனால், மாதக்கணக்கில் "பில்' செட்டில் செய்யப்படாமல் இருக்கிறது,' என்றார்.

முடங்கும் அபாயத்தில் கோயம்பேடு மேம்பாலம்: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், சென்னை ஏர்போர்ட் எதிரே ஜி.எஸ்.டி., சாலையிலும், கத்திப்பாரா, பாடி, கோயம்பேடு ஆகிய இடங்களிலும் மேம்பாலம் அமைக்கப்பட்டன. இதில், ஏர்போர்ட், கத்திப்பாரா, பாடி மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு, போக்குவரத்திற்கு திறக்கப்பட்டுள்ளன. ஆனால், கோயம்பேடு மேம்பாலம் இன்னமும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளின் மெத்தனமே காரணம் என்று தெரியவந்துள்ளது. தற்போது, கோயம்பேடு மேம்பாலப் பணியில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு சம்பளமே பல லட்சம் வழங்கப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில், 10 கோடி ரூபாய் அளவிற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான, "பில்' அளித்து நான்கு வாரங்கள் ஆகியும், சம்பந்தப்பட்ட கான்ட்ராக்ட் நிறுவனத்திற்கு இதுவரை பணம் வழங்கப்படவில்லை. இதனால், அடுத்த சில தினங்களில் கோயம்பேடு மேம்பால பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

" ஓட்டு போட்டால், இந்த செய்தி இன்னும் நிறைய பேரைப் போய் சேரும் .Please

0 comments:

Post a Comment


"என் வாழ்க்கையே எனது செய்தி"

Blog Archive


Followers