வச்சுட்டான்யா...ஆப்பு
லஞ்சம் வாங்கறவங்களுக்கு...

நீதிபதி தினகரன் பதவி உயர்வு கிடையாது : சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்

25-pd-dinakaran-200

புதுடில்லி : கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி தினகரனை, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்ற பரிந்துரையை, சுப்ரீம் கோர்ட் விலக்கிக் கொண்டது. இதனால், அவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பொறுப்பேற்கும் வாய்ப்பு இனி இல்லை.

கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருப்பவர் தினகரன். இவர் மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது மற்றும் நில அபகரிப்பு ஆகிய புகார்கள் உள்ளன. இவர் மீது பார்லிமென்டில் கண்டன தீர்மானம் கொண்டு வரக் கோரி எம்.பி.,க்கள் கொடுத்த மனுவை, ராஜ்யசபா தலைவர் அமீது அன்சாரி நேற்று முன்தினம் ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், நீதிபதி தினகரனை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்குமாறு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குழு அளித்த பரிந்துரை விலக்கிக் கொள்ளப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள், எஸ்.எச்.கபாடியா, தருண் சட்டர்ஜி, அல்டமாஸ் கபீர் மற்றும் ஆர்.வி.ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய குழு, நேற்று முன்தினம் மாலை கூடி, நீதிபதி தினகரனுக்கு பதவி உயர்வு வழங்கும் பரிந்துரையை திரும்பப் பெறுவது என தீர்மானித்தனர்.

இது குறித்து தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் சார்பில் வெளியிடப்பட்ட தகவலில், "சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தினகரனை நியமிக்கும் சிபாரிசு நிறுத்தி வைக்கப்படுகிறது' என்று கூறப்பட்டிருக்கிறது. முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி, நீதிபதி தினகரனை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை, மறுபரிசீலனை செய்யுமாறு, மத்திய சட்டத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நீதிபதி தினகரன் கூறுகையில்," நான் நீதிபதி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். எனக்கு எதிராக ராஜ்யசபாவில் கண்டன தீர்மானம் கொண்டு வந்தது, துரதிருஷ்டவசமானது' என்றார்

" ஓட்டு போட்டால், இந்த செய்தி இன்னும் நிறைய பேரைப் போய் சேரும் .Please

0 comments:

Post a Comment


Followers