வச்சுட்டான்யா...ஆப்பு
லஞ்சம் வாங்கறவங்களுக்கு...

ஓட்டு போடுவது கட்டாயம்: நரேந்திரமோடி அதிரடி

narendra-modi

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பது அதிரடி சட்டத்தின் மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே வாக்களிப்பதை கட்டாயமாக்கியுள்ள முதல் மாநிலம் குஜராத் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பான சட்ட மசோதா நேற்று குஜராத் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தில் எதிர்மறை ஓட்டுப் போடவும் வழி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


குஜராத் உள்ளாட்சி நிர்வாக சட்ட மசோதா 2009 என்று பெயரிடப்பட்ட இந்த மசோதாவை நேற்று குஜராத் சட்டசபை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேறியது.


இந்த சட்டத்தின்படி குஜராத்தில் உள்ள ஏழு மாநகராட்சிகள், 159 நகராட்சிகள், 26 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 223 தாலுகா பஞ்சாயத்துக்கள், 13,713 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு நடைபெறும் தேர்தலில் வாக்காளர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.
இந்த சட்டத்தை காங்கிரஸ் கட்சி மோசடி நாடகம் என்று வர்ணித்துள்ளது.


இருப்பினும் இதுகுறித்து முதல்வர் நரேந்திர மோடி கூறுகையில், “இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நடவடிக்கை. இதன் மூலம் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க முன்வருவார்கள். கள்ள ஓட்டுக்கள் குறையும், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் அசிங்கம் ஒழியும். நல்லவரை வெற்றி பெற செய்ய முடியும். ஒரு நிலை வகிக்கும் மக்களும் அதிக அளவில் ஓட்டுப் போடுவதால் உண்மையான ஜனநாயகம் மலரும். அரசில்வாதிகளிடம் சிக்கி கிடக்கும் கறுப்பு பணங்களும் வெளியே வரும்’


இதுவரை வேட்பாளரையும், அவருடைய ஜாதி, கட்சி ஆகியவற்றைப் பார்த்தும், அவர்களுக்கு ஆதரவானவர்களும் மட்டுமே ஓட்டுப் போடும் நிலை உள்ளது. ஆனால் இந்த சட்டத்தின் மூலம் நடுநிலை வாக்காளர்களும் முழுமையாக இந்த ஜனநாயக நடமுறையில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.


இச்சட்டத்தின்படி, வாக்களிக்க வராத, தவறும் வாக்காளர்களுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பப்படும். வாக்களிக்க வராதது குறித்த காரணத்தை 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். திருப்திகரமான விளக்கம் அளிக்கத் தவறுவோர் தவறு செய்தவர்களாக அறிவிக்கப்படுவர்.


இந்தியாவில் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. ஆனால் மத்திய அரசு இதுகுறித்து கண்டுகொள்ளாமல் உள்ளது. இந்த நிலையில் குஜராத்தில் அதிரடியாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

" ஓட்டு போட்டால், இந்த செய்தி இன்னும் நிறைய பேரைப் போய் சேரும் .Please

0 comments:

Post a Comment


Followers