வச்சுட்டான்யா...ஆப்பு
லஞ்சம் வாங்கறவங்களுக்கு...

மனுவை தொலைத்த அதிகாரிகள் : இழப்பீடு வழங்கியது மத்திய தகவல் கமிஷன்

 

makalgraph

சென்னை:தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட மேல் முறையீட்டு மனுவை தாலைத்துவிட்டு, மனுதாரரை சென்னைக்கும் டில்லிக்கும் அலைக்கழித்த விஷயத்தில், பாதிக்கப்பட்டவருக்கு மத்திய தகவல் கமிஷன் 5,000 ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது.சென்னை துறைமுகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் சண்முகநாதன். இவர் கடந்த 2006ம் ஆண்டு, ஜூன் 26ம் தேதி மத்திய தகவல் அதிகாரி, கப்பல் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் துறைமுக அதிகாரிகளுக்கான "வேஜ் ரிவிஷன் கமிட்டி' கொடுத்த ஒரு பரிந்துரை சம்பந்தமாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சில தகவல்களை கேட்டார். இதற்கு பதில் இல்லை. பின், மேல்முறையீடு செய்தார். அதற்கும் பலன் இல்லை.கடந்த 2006ல் மத்திய தகவல் கமிஷனில் மேல் முறையீடு செய்தார். அப்போதும், அவரது கோரிக்கை நிறைவேறவில்லை.

இதையடுத்து, கடித நகலுடன், சண்முகநாதன் தனது மேல்முறையீட்டு மனுவை இணைத்து, இந்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதில் கேட்டார். கிட்டத்தட்ட 480 நாட்கள் கழித்து, தனது மனு மீதான நடவடிக்கை குறித்து மீண்டும் தகவல் கேட்டார்.இதற்கு, "விண்ணப்பதாரரின் மனுவை தேடினோம். கிடைக்கவில்லை' என, மத்திய தகவல் கமிஷன் அதிகாரிகள் பதில் அளித்தனர். இதையடுத்து, தனது மேல்முறையீட்டு மனுவும், தான் அனுப்பிய 11 கடிதங்களும் கிடைத்ததா, இல்லையா என்று தகவல் தரும்படி "அப்பெல்லெட் அத்தாரிட்டிக்கு' சண்முகநாதன் மேல்முறையீடு செய்தார்.இதையடுத்து, சண்முகநாதனை டில்லியில் உள்ள மத்திய தகவல் கமிஷன் அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என கடிதம் அனுப்பினர். சண்முகநாதன் நேரில் ஆஜராகி,"மேல்முறையீட்டு மனுவும், கடிதங்களும் கிடைத்தன. பின், அந்த மனு தவறிவிட்டது' என, உத்தரவாதம் பெற்றுக் கொண்டார்.இது குறித்து, "தினமலர்' நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதனால், உற்சாகமும், தெம்பும் அடைந்த சண்முகநாதன், நீதி கேட்கும் தனது போராட்டத்தை தீவிரப்படுத்தினார்.

மத்திய தகவல் கமிஷனுக்கு சண்முகநாதன் அனுப்பிய ஒரு மனுவில், "இந்த வழக்கில் டில்லியில் உள்ள மத்திய தகவல் கமிஷனுக்கு நேரில் செல்ல போக்குவரத்து செலவு, உணவு, தங்கும் செலவு, விரைவு தபால் அனுப்பிய செலவு, துறைமுகத்திற்கு நேரில் சென்ற ஆட்டோ கட்டணம் உட்பட, எனக்கு 15 ஆயிரம் ரூபாய் செலவானது. இதை மத்திய தகவல் கமிஷன் வழங்க வேண்டும்' என்று கேட்டிருந்தார்.இது குறித்து, விரிவான விசாரணை நடத்திய மத்திய தகவல் கமிஷனர் திவாரி, சண்முகநாதனுக்கு இழப்பீட்டு தொகையாக 5,000 ரூபாய் வழங்க கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார். இந்த தொகையை இரண்டு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, சண்முகநாதனுக்கு மத்திய தகவல் அளிக்கும் அதிகாரி, 5,000 ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கினார்.

இந்த சம்பவத்தின் மூலம் மத்திய தகவல் கமிஷனில் உள்ள குளறுபடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.சண்முகநாதன் கூறுகையில், "தகவல் கேட்டு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் தகவல் அளிக்காவிட்டால் ஒவ்வொரு நாளுக்கும் 250 ரூபாய் அபராதம் கொடுக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த சம்பவத்தில், மத்திய தகவல் கமிஷன், விண்ணப்பித்த 522 நாட்களுக்கு பிறகே மனுவை தொலைத்துவிட்ட உண்மையை ஒப்புக் கொண்டுள்ளது. மேலும், இந்த மனு மீது நடவடிக்கை எடுத்து முடிவு சொல்ல 577 நாட்கள் ஆகிவிட்டன' என்றார்.

விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி!:தகவல் அறியும் உரிமை சட்டம், பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம் என்பது சண்முகநாதன் விஷயத்தில் நிரூபணமாகியுள்ளது. விடாது போராடி, மத்திய தகவல் கமிஷன் வரை தனது பிரச்னையை கொண்டு சென்று, இழப்பீடும் பெற்றார். மேலும், அவரின் இந்த முயற்சியின் பலனாக நாட்டின் 11 பெரிய துறைமுகங்களில் பணிபுரியும் 1,000க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் பயன் அடைந்துள்ளனர். சண்முகநாதனின் முயற்சியால், கடந்த 1997ம் ஆண்டு முதல் அந்த அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு தர கப்பல் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. உச்சக்கட்டமாக, மத்திய தகவல் கமிஷன், முறையாக தகவல் அளிக்க தவறிய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்தை கடுமையாக எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

" ஓட்டு போட்டால், இந்த செய்தி இன்னும் நிறைய பேரைப் போய் சேரும் .Please

0 comments:

Post a Comment


"என் வாழ்க்கையே எனது செய்தி"

Blog Archive


Followers