வச்சுட்டான்யா...ஆப்பு
லஞ்சம் வாங்கறவங்களுக்கு...

இதுதான் ஊடகச் சுதந்திரமா?

4482

 

நன்றி: தினமணி தலையங்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ஆந்திர மாநில ஆளுநர் என்.டி. திவாரி தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டுப் புறப்பட்டுவிட்டார் என்றாலும், தெலங்கானா பிரச்னை கொழுந்துவிட்டு எரியும்போது, அதிலும் ஆந்திரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற வதந்தி எழுந்தபோது, ஆளுநரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்தியிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.

தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பிய ஆளுநர் தொடர்பான பாலியல் ஒளிக்காட்சிகளைத் தடை செய்ய வேண்டும் என்று ஆளுநர் மாளிகை கேட்டுக் கொண்டதால் தடை செய்யும் நீதிமன்றம், இந்த ஒளிக்காட்சிகளைக் கொடுத்த பெண், அந்தக் காட்சிகளில் இடம்பெற்றுள்ள பெண்களைக் கைது செய்து, அவர்கள் என்ன ஆதாயத்துக்காக இந்தச் செயலுக்கு மனமுவந்து ஒப்புக்கொண்டார்கள் என்று கண்டறிய வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட வேண்டாமா?  ஒரு நீதிமன்றம்  பொதுநலன் கருதி காவல்துறைக்குத் தன்னிச்சையாக இத்தகைய உத்தரவிட்டால் என்ன குற்றமாகிவிடும். லஞ்சம் வாங்குவது குற்றம், கொடுப்பதும் குற்றம்; கொலை செய்வதும் குற்றம்; கொலையைத் தூண்டுவதும் குற்றம். அப்படியிருக்க இந்த ஒளிக்காட்சிக்குத் தொடர்புடைய பெண்களிடம் உண்மையை அறிய விசாரிக்க வேண்டாமா?

ஆளுநர் தாய்லாந்து சென்று, ஒரு ஸ்பா-வில் ஓய்வெடுத்து, எப்படி இருந்திருந்தாலும் யாரும் குறைசொல்ல முடியாது. அந்த நாட்டுச் சட்டத்திற்கு அது ஏற்புடையது. ஆளுநர் மாளிகையில் அவர் அவ்வாறு நடந்து கொண்டது முறையற்ற சட்டவிரோதச் செய்கைதான் இன்று பிரச்னையாகியிருக்கிறது. ஆனால், யாரோ ஒரு பெண்மணி கொண்டு வரும் ஒளிக்காட்சிகளை அப்படியே ஒளிபரப்பவும் அதை நியாயப்படுத்தவும் முடியுமென்றால், அத்தகைய ஊடகச் சுதந்திரம் சற்று மிகையாகத்தான் இருக்கிறது.

ஆளுநர் பதவி என்பது, அறிஞர் அண்ணா சொன்னதைப் போல, ஆட்டுக்குத் தாடி மாதிரியானது. தேர்தல் முடிவுகளில் அதிக இடங்களைப் பிடித்த கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கவும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்லி குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்யவும் மட்டுமே செய்கிற,  வேறு எந்த அதிகாரமும் இல்லாத பதவி. மிகப் பெரும் மாளிகையில் செüகரியங்களை அனுபவிக்க மட்டுமே உருவாக்கப்பட்ட பதவி. (அவரும் அதைத்தான் செய்துகொண்டிருந்திருக்கிறார் போலும்!).

இந்நிலையில் அதிகாரம் இல்லாத இப்பதவி வகிக்கும் ஓர் ஆளுநர் தனக்கு, கனிமச் சுரங்கங்கள் பெற்றுத் தருவதாகக் கூறியதால் 3 இளம்பெண்களை அனுப்பினேன் என்று கூறிக்கொள்ளும் ஒரு பெண்மணி, அதற்கு ஆதாரமாக ஒளிக்காட்சிகளை தந்தால், அதை தனியார் சானல் அப்படியே ஒளிப்பரப்பிவிட்டு, வழக்கை எதிர்கொள்ளத் தயார் என்று சொல்வதை ஊடகச் சுதந்திரம் என்றால் அது சரியா? அந்தப் பெண்ணின் உள்நோக்கத்தைச் சந்தேகிக்க வேண்டிய நேர்மையைவிட,  பரபரப்புதான் முக்கியமாகிவிடுகிறதா!

கொலை வழக்கு தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு நார்காடிக் சோதனை நடத்தியபோது அவர் மயக்கத்தில் பேசிய ஒளிப்பதிவை தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பியது- அது காவல்துறையின் ஒரிஜினல் குறுந்தகடு! அப்படி இருக்கும்போது அதை யாரும் குறை சொல்ல முடியாதுதான். இருப்பினும், நார்காடிக் சோதனையின் மயக்கத்தில் ஒருவர் பேசுவதை நீதிமன்றமே ஏற்றுக்கொள்ள மறுக்கும் நிலையில், அதை ஒளிபரப்புவது சரியாக இருக்குமா என்று யோசிக்கும் பொறுப்பு அந்த நிறுவனத்துக்குக் கிடையாதா?

அந்தப் பெண்மணியின் நோக்கம் கனிமச் சுரங்கங்கள் பெறுவதுதான் என்பதுதான் என்றால், அத்தகைய அனுமதி வழங்க எத்தகைய அதிகாரமும் இல்லாத ஆளுநரை அணுகியது ஏன்? ஆளுநர் மாளிகையில் ஆளுநரே ரகசிய கேமரா வைத்துப் படம் எடுத்து வைத்துக்கொண்டார் என்று சொல்வது அறிவுக்குப் பொருந்துமா? அப்படியானால், முன்கூட்டியே யோசித்துப் படம் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் இதன் பின்னணியில் உள்ள ஆந்திர மாநில அரசியல்வாதிகள் யார்? பல கேள்விகள் எழுகின்றன. ஆந்திர மாநில ஆளுநரின் பாலியல் புகார் மீதான விசாரணை என்பது, இத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்வதாக அமைந்தால்தான் சரியான விசாரணையாக இருக்கமுடியும்.

ஏனென்றால், ஒவ்வோர் அரசியல் கட்சிக்கும் ஒரு தொலைக்காட்சி சானல் இருக்கிறது. அல்லது தொலைக்காட்சி உரிமையாளர்கள் ஏதோ ஓர் அரசியல் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்.  தன்னை எதிர்க்கும் புதிய கட்சித் தலைவர்கள் அல்லது தன் ஊழலுக்கு உடன்படாத ஒரு ஐஏஎஸ் அதிகாரியை, அல்லது தனக்குச் சாதகமாகத் தீர்ப்பு எழுத மறுக்கும் நீதிபதியின் அந்தரங்கத்தை  இவ்வாறு ரகசியமாகப் படம்பிடித்து, தனக்கு ஆதரவாகப் பணிந்துபோகும்படி மிரட்டினால் என்ன ஆகும்? பணிய மறுக்கும்போது தங்கள் விருப்பப்படி ஒளிபரப்பினால் யார்தான் என்ன செய்ய முடியும்?

மகாராஷ்டிரத்தில் பத்திரிகைகளுக்கு கோடி கோடியாய் பணம் கொடுத்து, செய்திகளை ஒவ்வொரு பத்திரிகைகளிலும் தனிப்பட்ட செய்திபோல பிரசுரிக்கவும் அது விளம்பரம் என்பதை மறைத்தும் பணம் சம்பாதித்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு கண்டனம் செய்யப்படுகிறது. இதே நிலைமை ஊடகங்களில் ஏற்படவில்லை. ஏனென்றால், ஒவ்வொரு கட்சிக்கும் ஓர் ஊடகம் இருக்கிறது. ஆகையால் அவர்கள் தங்களைப் பற்றி மட்டுமே, தங்கள் தலைவர்களின் பிரசாரங்களை மட்டுமே ஒளிபரப்ப வேண்டிய கட்டாயத்தால் இந்த நிலை ஏற்படவில்லை.

இல்லையென்றால், தனியார் தொலைக்காட்சிகளும் தங்கள் சீரியல்களைக்கூட நிறுத்திவிட்டு அரசியல் விளம்பரங்களிலும், எதிர் அணியினரின் பலவீனத்தை அம்பலப்படுத்துவதிலும் இறங்கியிருக்க நேர்ந்திருக்கும். தனியார் தொலைக்காட்சி சானல்களையும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நிச்சயம் கட்டுப்படுத்த மாட்டார்கள். அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான தொலைக்காட்சி சானல் என்பது ஒரு போர்வாள். தேவைப்படும்போது உறையிலிருந்து எடுத்து விருப்பம்போல சுழற்றலாம்.

" ஓட்டு போட்டால், இந்த செய்தி இன்னும் நிறைய பேரைப் போய் சேரும் .Please

1 comments:

சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்நு சொல்வதோடு சரி. போன மாதம் andhrapradesh governer N T திவாரி 3 பெண்கள் கூட செக்ஸ் உறவு வச்சு இருந்ததா வீடியோ ஆதாரம் உடன் டிவி நியூஸ் சேனல்ல செய்தி வந்தது. என்ன ஆச்சு. பதவியை ராஜினாமா செஞ்சுட்டு போய்ட்டாரு. ஆளுநர் பதவியில் இருந்து விலகிவிட்டு செல்வதால் ‘கார்டு ஆப் ஆனர்’ எனப்படும் அணிவகுப்பு மரியாதை வேறு. இது ஒரு சாதாரண நபர் பண்ணி இருந்தால் அவர் கைது செய்யப்பட்டு இருபார். இந்திய சட்டத்தில், அரசியலில் நிறைய மாற்றங்கள் தேவை. http://simplygetit.blogspot.com/


Post a Comment


Followers