வச்சுட்டான்யா...ஆப்பு
லஞ்சம் வாங்கறவங்களுக்கு...

அரசு அலுவலர்கள் சொத்துக்கணக்குகளை வெளியிட பொதுநல வழக்கு

 

mchozhan2

அரசு அலுவலர்கள் தங்களது சொத்து கணக்குகளை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா எட்டிமங்கலத்தை சேர்ந்தவர் பி.ஸ்டாலின், ஐகோர்ட்டு வக்கீல். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், அனைத்து மாநில ஐகோர்ட்டு நீதிபதிகள் தாமாகவே முன்வந்து தங்களது சொத்து கணக்குகளை வெளியிட்டுள்ளனர். இதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். இதே போன்று தமிழகத்தில் பணியாற்றும் அரசு அலுவலர்கள், அதிகாரிகள் தங்களது சொத்து கணக்குகளை வெளியிட உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர்கள் நடத்தை விதியில் அரசு அலுவலர்கள் தங்களது பெயரிலோ அல்லது தங்களது குடும்பத்தினர் பெயரிலோ சொத்துக்கள் வாங்கினாலோ அல்லது அவர்கள் பெயரில் உள்ள சொத்துக்களை அடமானம் வைத்தாலோ, விற்பனை செய்தாலோ சொத்து பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதே போன்று நடத்தை விதியில் அரசு அலுவலர், அதிகாரிகள் தங்களது சொத்து கணக்குகளை விருப்பப்பட்டால் வெளியிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடத்தை விதி 1973 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது உள்ள சூழ்நிலையில் அரசு அலுவலர்கள், அதிகாரிகள் கண்டிப்பாக சொத்துக் கணக்குகளை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டால் மட்டுமே அவர்கள் வெளியிடுவார்கள்.

தமிழகத்தைப் பொருத்த அளவில் நேர்மையான அதிகாரிகள், அலுவலர்கள் பலர் உள்ளனர். சில அலுவலர்கள், அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு பணிகளை மேற்கொள்வதால் ஓட்டு மொத்த அரசு அலுவலர்கள், அதிகாரிகளின் பெயர்களும் கெட்டு விடுகின்றன. அரசுத்துறையில் பணியாற்றும் அடிமட்ட ஊழியர் முதல் உயர்பதவியில் இருக்கும் அதிகாரிகள் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் மாட்டிக்கொள்வது அன்றாட செய்தித் தாள்களில் வந்த வண்ணம் இருக்கிறது.

லஞ்சம் பெறும் அலுவலர்கள், அதிகாரிகள் சிலர் தந்திரமான முறையில் தப்பித்து வருகின்றனர். சொத்துக்கணக்குகளை கண்டிப்பாக வெளியிட வேண்டும் என்று உத்தரவிடும் போது, சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த பணத்தை அதிகாரிகள், அலுவலர்களால் மறைக்க முடியாது. இதன் மூலம் லஞ்சம் பெறுவதை ஒழிக்க முடியும்.

சமீபத்தில் நாமக்கல் கலெக்டர் சகாயம் தனது சொத்துக் கணக்குகளை வெளியிட்டார். இதன் மூலம் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் நேர்மையான செயல்பாட்டை மக்கள் புரிந்து கொள்ள முடிகிறது.

எனவே தமிழகத்தில் பணியாற்றக்கூடிய அனைத்து அலுவலர்கள், அதிகாரிகள் தங்கள் சொத்து கணக்குகளை வெளியிட தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளருக்கு 14.11.2009 அன்று மனு அனுப்பினேன். அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நான் அனுப்பிய மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க தமிழக தலைமை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நாளை(7 ந் தேதி) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

" ஓட்டு போட்டால், இந்த செய்தி இன்னும் நிறைய பேரைப் போய் சேரும் .Please

0 comments:

Post a Comment


"என் வாழ்க்கையே எனது செய்தி"

Blog Archive


Followers