வச்சுட்டான்யா...ஆப்பு
லஞ்சம் வாங்கறவங்களுக்கு...

Cartoon Corner

7:50 PM
adade10 adade12
cartoon18a homeattai1
cartoon23 21cartoon
adade04 1car
   
5car cartoon2
1car 3car
   
Read On 0 comments

ரூ.20,000 லஞ்சம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டர் கைது

7:31 PM

arrest

நாகை மாவட்டம் பொறையாறு அருகே காழியப்பநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ்(வயது 65). இவர் சில ஆண்டுகளாக திருச்சியில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருள்தாஸ் திருக்கடையூரை சேர்ந்த பாலமுருகன் என்பவரிடம் நிலம் வாங்க ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கொடுத்து ஒப்பந்தம் செய்தார்.
அப்போது ஒப்பந்த காலத்திற்குள் நிலத்தை பத்திரப்பதிவு செய்து தருவதாக அருள்தாசிடம், பாலமுருகன் தெரிவித்தார். ஆனால் ஒப்பந்தக்காலம் முடிந்து பல மாதங்களாகியும் அருள்தாசின் பெயருக்கு நிலம் பத்திரப்பதிவு செய்யப்படவிலலை.
இதனால் அருள்தாஸ் பொறையாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகார் மனுவை பெற்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன்(52) ரூ.45 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அருள்தாஸ் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன், மீது நாகை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் செய்தார். இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுரைப்படி முதல் தவணையாக ரூ.20 ஆயிரம் பணத்தை பொறையாறு போலீஸ் நிலையத்தில் வைத்து தருவதாக சப் இன்ஸ்பெக்டர் குணசேகரனிடம் அருள்தாஸ் கூறினார்.
அதன்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு பொறையாறு போலீஸ் நிலையத்திற்கு அருள்தாஸ் சென்றார். பணத்தை சப் இன்ஸ்பெக்டர் குணசேகரனிடம் அருள்தாஸ் கொடுத்தார். பணத்தை பெற்றுக் கொண்ட சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மேஜையில் வைத்தார்.
அப்போது அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குணசேகரனை சுற்றி வளைத்து கையும், களவுமாக பிடித்தனர்.

இதன் பின் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரனை போலீசார் கைது செய்து நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் லஞ்சஒழிப்பு போலீசார் பொறையாறில் குணசேகரன் தங்கியிருந்த தனியார் லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர்

Read On 0 comments

பி.எப். பணத்தை கொடுக்க லஞ்சம் சார்பதிவாளர் கைது

7:28 PM

arrest-10 பாபநாசம், டிச. 2: தஞ்சை மாவட்டம் பாப நாசம் படுகை புதுத் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(43). இவர் கபிஸ்தலம் தொடக்க வேளாண் கூட் டுறவு வங்கியில் தலைமை எழுத்தராக பணியாற்றி வருகிறார். இவர் சேம நல நிதியில் இருந்து பணம் கேட்டு கடந்த அக்டோபர் 1ம் தேதி பாபநாசம் கூட்டுறவு சார்பதிவாளர் ராஜேந்திரனிடம் மனு கொடுத்தார்.

இதையடுத்து கடந்த 6ம் தேதி குடந்தை மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து பாலசுப்பிரமணியன் பெய ருக்கு ரூ.51 ஆயிரத்துக்கான காசோலை வந்தது. ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத் தால் மட்டுமே காசோலை தர முடியும் என பாலசுப் பிரமணியனிடம், சார் பதிவாளர் ராஜேந்தி ரன் கூறியுள்ளார். இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீ சார் ஏற்பாட்டின் படி நேற்று சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்ற பாலசுப்பிரமணியன், ராஜேந்திரனிடம் ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார்.அப்போது அவர் பணத்தை வாங்காமல், அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான மெடிக்கல் கடைக்கு வந்து கொடுக்கும்படி கூறியுள் ளார். பின்னர் மருந்துக் கடையில் ராஜேந்திரன் பணத்தை வாங்கியபோது, போலீசார் அவரை கைது செய்தனர்

Read On 0 comments

ஸ்ரீவி., மோட்டார் வாகன ஆய்வாளர் ஆபிசில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு

7:26 PM

tblSambavamnews_52126711607 ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்ததில் கணக்கில் வராத 22000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.சிவகாசியை சேர்ந்தவர் தேன்ராஜ். சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவருடைய வேன், நவ.,23ல், கிருஷ்ணன்கோவில் அருகில் விபத்துக்குள்ளாகியது.

விபத்துக்குண்டான சான்றிதழ் வழங்க வேனை, குருசாமி ஸ்ரீவில்லிபுத்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு கடந்த 27ம் தேதி கொண்டு வந்தார். அவரிடம் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் கணேச சுப்பிரமணியம் சான்றிதழ் வழங்க 2000 ரூபாய் லஞ்சம் கேட்டார். அதை கொண்டு வந்து கொடுக்கும்படி போட்டோ எடுப்பவராக பணிபுரியும் சீனிவாச காந்தி கூறினார். குருசாமியிடமிருந்து வேனின் ஆர்.சி., இன்சூரன்ஸ், பெர்மிட் புத்தகங்களை, இருவரும் வாங்கி வைத்தனர்.

இது தொடர்பாக குருசாமி, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். அவர்களின் ஆலோசனைப்படி நேற்று 2000 ரூபாயை கொடுக்கும் போது ஆர்.சி. புக், இன்சூரன்ஸ், பெர்மிட் புத்தகத்தை விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு டிச.,1ல் அனுப்பி வைத்ததாக கூறி பணத்தை வாங்க மறுத்தனர்.இதையடுத்து டி.எஸ்.பி., குலோத்துங்க பாண்டியன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனை நடத்தியதில் விபத்திற்குள்ளான வேன் தொடர்பாக புத்தகங்களை விருதுநகர் அலுவலகத்திற்கு அனுப்பாதது தெரிய வந்தது.

மேலும் புரோக்கர் சரவணனிடம் 3140 ரூபாயும், ரிக்கார்டு கிளார்க் சிங்காரத்திற்கு கொடுப்பதற்காக புரோக்கர் கண்ணன் வைத்திருந்த 18,310 ரூபாயும், விடுமுறையில் உள்ள பூட்டப்பட்ட இளநிலை உதவியாளர் ஒருவரின் மேஜை டிராயரில் இருந்த 1,220 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்

Read On 0 comments

கட்டதுரை காங்கிரசும்… கைப்புள்ள திமுகவும் - (ஒரு Parody பதிவு)

10:10 AM

Opening Scene:

[மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர்  ஜெய்ராம் ரமேஷ் புண்ணியத்தால்,முல்லைப் பெரியாற்றில்  புதிய அணைக்கான ஆய்வு நடத்துவதற்குத் தேவையான அனுமதியை வாங்கி விட்ட கேரள அரசு அதை தற்போது மும்முரமாக மேற்கொண்டுள்ளது.]

image

இந்த கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல நம்ம கிட்ட விளையாடரதே வேலையா போச்சு….. பாத்ருவோம் இன்னிக்கு.. இந்த கைபுள்ளயா.. அந்த கட்டட்துரையான்னு.. எடுரா வண்டிய……..

 

என் சங்கது 0ஆளை அடிச்சவன் எவண்டா?..  ஆன்.. கேட்கலை பக்கதுல வந்து சொல்லு..   நான் கிழிச்ச கோட்ட தாண்ட மாட்டேன்.. எ ஆளு வருவான் சொல்லி அனுப்பு… சரி தல..

[மத்திய அமைச்சர் ராசா, ஜெய்ராம் ரமேஷை நேரில் சந்தித்து முதல்வர் கருணாநிதி யின் எச்சரிக்கைக் கடிதத்தை நேரிலேயே வழங்கி, இந்த விவகாரத்தில் விளையாட வேண்டாம் என்று கூறியதாகத் தெரிகிறது. மத்திய அரசின் இந்தச் செயலால் தமிழக மக்களிடையே கொதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர்  ராசா தெரிவித்தார்.]

  imageஎன் சங்கது ஆளை அடிச்சவன் எவண்டா?..   என்னது… டாவா…  டாய் கட்டதுரை ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தா என் ஆள அடிச்சு பாரு…

 

[முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மத்திய இணை அமைச்சர் ஒருவர் நடந்துகொண்ட விதத்தை கண்டித்து மதுரை மாநகரில் 1.11.2009 ஞாயிற்றுக் கிழமையன்று திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும்.]

(கும்)….வொய்…வொய்ங்ங்ங்…..

[2 ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பாக நேற்று மாலை திடீரென வழக்குப் பதிவு செய்த சிபிஐ இன்று மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகிறது.]

vadivelu_comedy_from_the_winner_movie_part_1 உன் தாய் பத்தினின்னு ஒத்துக்கறேன்..நெக்ஸ்ட் மீட் பண்றேன்……

 

[மத்திய அமைச்சருக்கு எதிரான கண்டன  பொதுக்கூட்டம் என்பதற்கு பதிலாக, முல்லைப் பெரியாறு புதிய அணைக்கு தமிழ்நாடு எதிர்ப்பு: மதுரை மாநகரில் மாபெரும் பொதுக் கூட்டம் என திமுகவின் அதிகாரப் பூர்வ நாளேடான முரசொலியில் இன்று விளம்பரம் வெளியாகி உள்ளது]

image வேணாம்… என்னை யாரும் தொட்டதில்ல.. போன மாசம்தான அடிச்சேன்.. அது போன மாசம், நான் சொல்றது இந்த மாசம்.

[முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழ்நாடு பாதிக்கப்படக் கூடாது என்று மத்திய அரசு  கருதுகிறது. 'சர்வே' நடத்துவதற்கு மட்டும்தான் மத்திய இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கேரளாவுக்கு அனுமதி கொடுத்தார். அவரைக் கண்டித்து மதுரையில் வரும் 10ம் தேதி கண்டனப் பொதுக் கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். ஸ்பெக்ட்ரம் ஊழலைக் கண்டித்து காங்கிரஸால் கண்டனக் கூட்டம் நடத்த முடியாதா? எல்லோருக்கும் ஒரு நியாயம்தான். தமிழ்நாட்டில் தாளம் போடுவதற்கென்றே புலவர்கள் கூட்டம் உள்ளது. "காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுக்கு எதிராக திமுகவின் போராட்டம் தொடர்ந்தால் தக்க பதிலடி கொடுப்போம்'' என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.]

GsnUK4hrHzM.gif வலிக்குது..  வேணாம்… அழுதுறுவேன்… எடுரா மாப்ள.. என்ன..து .. நம்பர் சொல்ற…டொம் டொம்

 

[மத்திய அரசுக்கு 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ) தனது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.]

thumb_youtube_rNPcRPzhZgA என்ன தல நொண்டர… கால்ல போட்டாங்கலோ… அடேயப்ப  அடி வாங்குன கைப்புள்ளக்கே இத்தன அடின்னா அடி வாங்குனவன் உயிரோடியிருப்பான்னு நம்பற…. இந்த ஊரூ இன்னுமாடா.. நம்பள நம்புது… அது அவங்க தலயெழுத்து… விடு தல….

[முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டதை கண்டித்து முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில் மதுரையில் 1 ந் தேதி நடைபெறுவதாக இருந்த கண்டன பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றுவருவதை கருத்தில் கொண்டு கண்டன பொதுக்கூட்டம் தள்ளிவைக்கப்படுவதாக தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.]

karunanidhi_20090427

சிரிங்க சைட்ல கொஞ்சம் சிந்திங்க..ரைட் விடு…

Read On 0 comments

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து! இப்படியும் ஒரு கலெக்டர்

10:03 AM

Image''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''

சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.

''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை.
நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.

''புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.

காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.

நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.

நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.

ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.
இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும்.
ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!'' என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்!'' என சொல்லிக் கொடுக்கிறார்.

''உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்'தான் கரெக்ட்!'' - திருத்திச் சிரிக்கிறாள் கலெக்டர் மகள்!

- ஜூனியர் விகடன்

Read On 0 comments

சவக் கிடங்கு வாசலில் தலைவிரித்தாடுது லஞ்சம் : சரிகிறது மனித நேயம்

10:01 AM

கோவை :கோவை அரசு மருத்துவமனையில் லஞ்ச முறைகேடு தலைவிரித்தாடுகிறது. சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் சடலத்தை பார்க்கக் கூட, "கட் டணம் நிர்ணயித்து' உறவினர்களிடம் பணம் பறிக்கின்றனர்.

tblfpnnews_1414126158 நூற்றாண்டு சிறப்பு மிக்க கோவை அரசு மருத்துவமனையில் 1,500 உள்நோயாளிகளும், தினமும் 7,000 வெளிநோயாளிகளும் சிகிச்சைபெறுகின்றனர். தவிர, சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைவோர், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோர், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுகின்றனர். சிகிச்சை பலனின்றி உயிரிழப்போரின் பிரேதம், சவ கிடங்குக்கு அனுப்பப்படுகிறது. அதன் பின், சட்டம் சார்ந்த மருத்துவத்துறையினரால் "பிரேத பரிசோதனை' நடத்தப்பட்ட பின், உறவினரிடம் ஒப்படைக் கப்படுகிறது.உயிரிழந்தோரின் உடல் சவ கிடங்கினுள் வைக்கப்பட்டிருக்கும் போது, உறவினர் மற்றும் நண்பர்கள் கண்ணீரும், கம்பலையுமாக சென்று உடலை பார்க்க முற்படுகின்றனர். இதற்காக, சவ கிடங்கு ஊழியர்களை அணுகி, அனுமதி கேட்டு கெஞ்சுகின்றனர்.

நீண்ட நேர காத்திருப்புக்கு பின் உள்ளே செல்ல அனுமதிக்கும் ஊழியர்கள், உடலை பார்த்து திரும்பும் போது பணம் கேட்டு நிர்பந்தம் செய்கின்றனர். " பிணத்தை பார்க்கவும் லஞ்சமா' என மனம் வெதும்பும் உறவினர்கள், "போனால் போகட்டும்...' என நினைத்து 10, 20 நோட்டுகளை நீட்டுகின்றனர். இவற்றை வாங்க மறுக்கும் ஊழியர்கள், "50 ரூபாயாவது கொடு' எனக்கேட்டு அடம் பிடித்து பணம் பறிக்கின்றனர். இவ்வாறு, பிணத்தை பார்க்க தினமும் ஏராளமான நபர்களிடம் பணம் பறிக்கப்படுகிறது. தவிர, "போஸ்ட்மார்ட்டம்' முடிந்து உடலை ஒப்படைக்கும் போது "காடா துணி, வாசனை திரவியம் வாங்கிய வகையில் செலவு' எனக்கூறி, 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை உறவினரிடம் வசூலிக்கின்றனர்.

இத்தொகையை தர மறுக்கும் போது வாக்குவாதம் செய்கின்றனர். பிரேதத்தை வைத்து பேரம் நடத்த விரும்பாத பலரும் கேட்ட தொகையை கொடுத்து விடுகின்றனர். ஆனால், கூலி வேலை செய்யும் ஏழை, எளிய மக்க ளால், இவ்வளவு தொகையை கொடுக்க முடிவதில்லை; வேறு வழியின்றி, மருத்துவமனை வளாகத்தில் கூடியிருக்கும் உறவினரிடம் கடன் பெற்றாவது இத் தொகையை கொடுத்துவிட்டு, பிரேதத்தை எடுத்துச் செல்கின்றனர்.இது தொடர்பான புகார் அதிகரித்ததை தொடர்ந்து, "லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற் றம்' என்ற அறிவிப்பு பலகைகள் மட்டும் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல இடங்களிலும் வைக்கப்பட்டன.

அதில், மருத் துவ அலுவலரின் போன் நம்பர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.எனினும், மக்கள் தெரிவிக்கும் புகார்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் யாராவது கேள்வி எழுப்பினால், "போனில் புகார் தெரிவிக்கும் நபர்கள், நேரில் வந்து எழுத்து பூர்வ புகார் மனுவை அளிக்க வேண்டும். அப்போது தான், தவறு செய்த ஊழியர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ள முடியும்' என்கிறது. அதாவது, " மருத்துவமனை நிர்வாகத்தால் தமது ஊழியர்களின் முறைகேடுகளை சுயமாக தடுக்க முடியாது என்று கூறி பொறுப்பை தட்டிக்கழித்து,  "யாரும் எழுத்து பூர்வமான புகார் தருவதில்லை' என, மக்கள் மீதே பழியை போடுகின்றனர். இது போன்ற பண முறைகேடுகளை முடிவுக்கு கொண்டு வர, மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Read On 0 comments

லஞ்சம் பெற்ற மேலும் 3 சுங்க அதிகாரிகளுக்கு ஆப்பு

10:00 AM

சென்னை விமான நிலைய சரக்குப்பிரிவில் லஞ்சம் பெற்றதாக பெற்றதாக மேலும், 3 சுங்க இலாகா அதிகாரிகளை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள சரக்குப் பிரிவில் இருந்து உலக நாடுகளுக்கு அனுப்பப்படும் பொருட்களும், அதுபோல் பிற நாடுகளில் இருந்து வரும் பொருட்களும் சோதனை செய்யப்பட்டு, சுங்க வரி உள்பட வரியினங்கள் வசூலித்த பின்னரே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.

get_prisson--200x150 இந்த சரக்குப்பிரிவில் வரியினங்களை குறைவாக காட்டி பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் கூறப்பட்டன. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு சி.பி.ஐ. அதிகாரிகள் விமான நிலைய சரக்குப்பிரிவில் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.
அப்போது, பொருட்களை சரிவர சோதனையிடாமல் சுங்க வரி குறைவாக காட்டி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி லட்சக்கணக்கில் சுங்க இலாகா அதிகாரிகள் லஞ்சம் பெற்றதை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக சுங்க இலாகா சரக்குப்பிரிவு அதிகாரிகள் 9 பேர் கைது செய்யப்பட்டு தற்காலிகமாக பணி நீக்கமும் செய்யப்பட்டும் உள்ளனர்.

இந்த நிலையில், தடை செய்யப்பட்ட பார்சல்களை கடந்த 2 தினங்களாக சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து சோதனை போட்டனர். அப்போது, மேலும் லஞ்சம் பெற்றதாக சுங்க இலாகா சூப்பிரண்டுகள் சின்ஹா, புகழேந்தி, தடுப்பு அதிகாரி கிரிபிரசாத் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.
இதையடுத்து சி.பி.ஐ. வேட்டையில் சிக்கிய சுங்க இலாகா அதிகாரிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.
கைது செய்யப்பட்ட சுங்க இலாகா அதிகாரிகள் மூவரும் சி.பி.ஐ. வழக்குகளுக்கான விசேஷ நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை 3 நாள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதித்தார். ஏற்கனவே சி.பி.ஐ. காவலில் இருந்த பாஸ்கர், கண்ணன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நேற்று நீதிமன்ற காவலில் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டனர். ஏஜெண்டு குமாரை மேலும் 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

இந்த வழக்கில் குமார் என்பவர்தான் முக்கிய குற்றவாளி ஆவார். அவர்தான் அதிகாரிகளுக்கு லஞ்சத்தை வாங்கி வாரி, வாரி வழங்கி கோடி, கோடியாக கொட்டி கொடுத்து உள்ளார். அவர் கொடுத்த வாக்குமூலத்தில், `கடந்த 4 ஆண்டுகளாக ஏஜெண்டு தொழில் செய்வதாகவும், இந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ.35 கோடி வரை லஞ்சம் வாங்கி கொடுத்துள்ளதாக பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார்.

சரக்குப்பிரிவில் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் குறித்து சி.பி.ஐ. காவல்துறையினர் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read On 0 comments

Followers