வச்சுட்டான்யா...ஆப்பு
லஞ்சம் வாங்கறவங்களுக்கு...

நீதிபதி தினகரன் பதவி உயர்வு கிடையாது : சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்

5:08 AM

25-pd-dinakaran-200

புதுடில்லி : கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி தினகரனை, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்ற பரிந்துரையை, சுப்ரீம் கோர்ட் விலக்கிக் கொண்டது. இதனால், அவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பொறுப்பேற்கும் வாய்ப்பு இனி இல்லை.

கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருப்பவர் தினகரன். இவர் மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது மற்றும் நில அபகரிப்பு ஆகிய புகார்கள் உள்ளன. இவர் மீது பார்லிமென்டில் கண்டன தீர்மானம் கொண்டு வரக் கோரி எம்.பி.,க்கள் கொடுத்த மனுவை, ராஜ்யசபா தலைவர் அமீது அன்சாரி நேற்று முன்தினம் ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், நீதிபதி தினகரனை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்குமாறு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குழு அளித்த பரிந்துரை விலக்கிக் கொள்ளப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள், எஸ்.எச்.கபாடியா, தருண் சட்டர்ஜி, அல்டமாஸ் கபீர் மற்றும் ஆர்.வி.ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய குழு, நேற்று முன்தினம் மாலை கூடி, நீதிபதி தினகரனுக்கு பதவி உயர்வு வழங்கும் பரிந்துரையை திரும்பப் பெறுவது என தீர்மானித்தனர்.

இது குறித்து தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் சார்பில் வெளியிடப்பட்ட தகவலில், "சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தினகரனை நியமிக்கும் சிபாரிசு நிறுத்தி வைக்கப்படுகிறது' என்று கூறப்பட்டிருக்கிறது. முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி, நீதிபதி தினகரனை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை, மறுபரிசீலனை செய்யுமாறு, மத்திய சட்டத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நீதிபதி தினகரன் கூறுகையில்," நான் நீதிபதி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். எனக்கு எதிராக ராஜ்யசபாவில் கண்டன தீர்மானம் கொண்டு வந்தது, துரதிருஷ்டவசமானது' என்றார்

Read On 0 comments

இடைதேர்தல்- முரசொலி ஜோக்ஸ்

8:11 PM

adade12

ஆண்டியும் போண்டியும்

ஆண்டி :- ஏன்ய்யா; ``திருச்செந்தூர் - வந்தவாசி தொகுதிகளில் பணமழை பெய்யுமா, என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்களிடையே அதிகரித்துள்ளதாக `தினமலர்’ எழுதியிருக்கிறதே!’’

போண்டி:- ""ஆமாம் - இப்போது பணமழை பெய்யுமா என்று வாக்காளர்களே எதிர் பார்ப்பதாக எழுதுவார்கள். தேர்தலில் அ.தி.மு.க. தோற்று தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றதும் ""அய்யோ - பணம் மழையாகப் பொழிந்தது. பணநாயகம் வென்றது"" என்று ஜெயலலிதாவும் அவரது பல்லக்குத் தூக்கிகளும் புலம்புவதைப் பெரிது பெரிதாக பிரசுரிப்பார்கள். `அவாளு’க்கு இதுவெல்லாம் கைவந்த கலைதானே?""   

 

பட்டிக்காடும் பட்டணமும்

பட்டிக்காடு:- ஏன் தம்பி; ``இந்த இடைத் தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கு வித்திடுவதாக அமையட்டும்? என்று கூறியிருக்கிறாரே ஜெயலலிதா?’’

பட்டணம்:- ""ஜெயலலிதா கட்சி இரு தொகுதி - இடைத்தேர்தல்களிலும் தோற்பது உறுதி. தோற்றபின் ""ஆட்சி மாறாது; 2011 சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க.வே வெற்றி பெறும்; தி.மு.கழக ஆட்சியே தொடரும் என்பதின் அடையாளமே இந்த இடைத்தேர்தல் முடிவுகள்"" - என்று ஜெயலலிதா அறிக்கை விடுவாரா? அறிவு நாணயம், வாக்கு நாணயம் ஆகியவைகளுக்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன சம்பந்தம்?""   

Read On 0 comments

மக்கள் என்ன ஜெயலலிதா மாதிரி பித்தலாட்டக்காரர்களா?

8:08 PM

எல்லோரும் ஜெயலலிதா மாதிரி பித்தலாட்டக்காரர்களா?

tblfpnnews_52600824833
""பணத்தைக் கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்கலாம் என்று நினைக்கிறார்கள். உங்களிடம் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். அதி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் - அது உங்கள் வரிப்பணம்"" என்று திருச்செந்தூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார்.

மக்கள் தந்த வரிப்பணம் என்றால் அதை மக்களிடமே வழங்குவதில் என்ன தவறு? ஆட்சியில் இருந்தபோது மக்கள் வரிப்பணத்தை அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கும் 20 சதவிகித போனசாகக்கூடத் தரமுடியாது என்று அறிவித்து எஸ்மா, டெஸ்மா சட்டங்களையெல்லாம் பிரயோகித்து - ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்களை ஒரு சொட்டு மையால் டிஸ்மிஸ் செய்தவர் இப்போது மக்கள் வரிப்பணம் பற்றிப்பேச என்ன யோக்கியதை இருக்கிறது? மக்கள் வரிப்பணத்தை அரசு ஊழியர்களுக்கே போனசாக வழங்கக்கூடாது - முடியாது என்று அன்று பேசிய வாய் இன்று ‘மக்கள் வரிப்பணத்தை வாங்கிக் கொண்டு வாக்குகளை எனக்குப் போடுங்கள்’ என்று கேட்கிறதே! இது என்ன பித்தலாட்டம்?

வாதத்திற்காக - பணம் தரப்போகிறார்கள் என்றே ஒப்புக் கொண்டு பார்த்தாலும் - வாக்காளப் பெருமக்கள் எல்லாம் ஒரு கட்சியிடம் பணம் வாங்கிக் கொண்டு இன்னொரு கட்சிக்கு வாக்களிப்பார்களா? எல்லோரும் தன்னைப்போலவே நாணயங்கெட்ட- பித்தலாட்டக்காரர்கள் என்று ஜெயலலிதா நினைக்கலாம். மக்கள் அப்படிப்பட்டவர்களா?

மக்கள் மீது என்ன ஒரு நம்பிக்கை!!

 

நன்றி :முரசொலி கட்டுரை

Read On 0 comments

இடைத்தேர்தல்: பிரியாணி, வேட்டி,சேலையைத்தொடர்ந்து மொபைல் ரீசார்ஜ்

10:18 AM

tblfpnnews_41199457646

வந்தவாசியில் இடைத்தேர்தலுக்காக தங்கியுள்ள கட்சியினருக்கு, ஆட்களை கொண்டு சமைத்து வருவதால், சமையல்காரர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.வந்தவாசி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., - அ.தி.மு.க., இடையே ஏற்பட்டுள்ள நேரடி போட்டியால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

 

புலம்பும் விடுபட்ட வாக்காளர்கள் :ஓட்டுக்கு அல்ல துட்டுக்கு...! வந்தவாசி தொகுதியில் முக்கிய கட்சியின் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வரும் நிலையில், இத்தொகுதியில் ஓட்டு போடுவதற்கான குறிப்பில் விடுபட்ட வாக்காளர்கள், தங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையே என புலம்புகின்றனர்.வந்தவாசி தொகுதியில் மொத்தம் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 210 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 80 ஆயிரத்து 561 ஆண் வாக்காளர்களும், 77 ஆயிரத்து 649 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.கடந்த லோக்சபா தேர்தலில் ஓட்டு அளித்தவர்கள் மட்டுமே இந்த தேர்தலிலும் ஓட்டளிக்க முடியும் என்ற நிலையுள்ளது.

tblfpnnews_50776308775

பிரியாணி சப்ளை: கூட்டம் முடியும் தருவாயில் தொண்டர்களை அழைத்து வந்த நிர்வாகிகளை தனியாக வரவழைத்து "டோக்கன்'கள் வழங்கப்பட்டன. இந்த டோக்கன்களை வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன. கையோடு குடிநீர் பாக்கெட்களும் கொடுத்தனர்.

tblArasiyalnews_89672487975 தொண்டர்கள் "தாகசாந்தி': பிரியாணி வாங்கி தொண்டர்கள் பலர், சாப்பிடுவதற்கு முன்பாக, அருகில் இருந்த "டாஸ்மாக்' கடைகளுக்குச் சென்று "தாகசாந்தி' செய்து கொண்டனர். பின்னர், கொடுக்கப்பட்ட பிரியாணியை ஒரு பிடி, பிடித்தனர். திருப்தியாக சாப்பிட்ட பின்னர் தாங்கள் வந்த வாகனங்களில் ஏறிச் சென்றனர்.

கல்யாண மண்டபத்தில் தயாரான பிரியாணி: கூட்டத்தில் கலந்து கொள்ளும் அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்காக நேற்று முன்தினம் இரவு, கல்யாண மண்டபம் ஒன்றில் உணவு தயாரிக்கப்பட்டது. இதற்காக 30க்கும் மேற்பட்ட ஆடுகள், 500க்கும் மேற்பட்ட கோழிகள் வாங்கப்பட்டன. மண்டபத்தில் இரவு முழுவதும் சமையல் செய்யப் பட்டது. பின்னர், பிரியாணிகள் பார்சல் கட்டி,பெட்டியில் அடுக்கி வைக்கப் பட்டன. கார், ஆட்டோ மற்றும் பைக்குகளில் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டு தொண்டர்களுக்கு வினியோகிக்கப் பட்டன. நிர்வாகிகளுக்கு மட்டும் தனியாக உணவு வழங்கப்பட்டது.

பிரியாணி "டோர்' டெலிவரி: வந்தவாசியில் நடந்த தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்களுக்காக, பிரியாணி சமைக்கப்பட்டது. பஸ் நிலையம் அருகில், பிரியாணி தயார் செய்யப் பட்டது. நூற்றுக்கணக்கானோர் இரவோடு இரவாக, பிரியாணியை பார்சல் செய்தனர். செயல் வீரர்கள் கூட்டத் தில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட பிரியாணி பார்சல் மோட்டார் பைக், மொபட் மற்றும் சைக்கிள்கள் மூலம் வீடு வீடாக சென்று

 

லேட்டஸ்ட் செய்தி:


fleskeskartice

வந்தவாசி தொகுதியில் தி.மு.க., - அ.திமு.க., உள்ளிட்ட கட்சிகள் வாக்காளர்களை கவரும் விதமாக பிரியாணி  வேட்டி, சேலையும் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில், தி.மு.க.,வினர் இளம் வாக்காளர்களை கவரும் வகையில், ரீசார்ஜ் கார்டுகள் கொடுத்துள்ளனர்.
கிராமம் கிராமாக செல்லும் கட்சி பிரமுகர்கள், இளைஞர்கள் அதிகம் கூடியிருக்கும் இடங்களை தேடிப் பிடிக்கின்றனர் என்றும்,  அவர்களிடம் மொபைல் ரீசார்ஜ் கார்டுகளை அளித்து ஓட்டு வேட்டையாடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read On 0 comments

Followers