வச்சுட்டான்யா...ஆப்பு
லஞ்சம் வாங்கறவங்களுக்கு...

சென்னை தொழிலாளர் நலத்துறை பெண் அதிகாரி கைது -ரூ.2 ஆயிரம் லஞ்சம்

9:25 PM

 

cr308

சென்னை: ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் நலத்துறை பெண் அதிகாரி சென்னையில் கைது செய்யப்பட்டார்.
சென்னை திருவொற்றியூரில் Ôஎண்ணூர் டேங்க் டெர்மினல் லிமிடெட்Õ என்ற நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் தன்ராஜ். இவர், லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி சுனில்குமாரிடம் அளித்துள்ள புகாரில், எங்கள் கம்பெனி ஊழியர்களைப் பற்றி ஆய்வு செய்து, சான்றிதழ் வழங்கும் பொறுப்பு, திருவொற்றியூரில் தொழிலாளர் நலத்துறையில் துணை ஆய்வாளராக பணியாற்றும் மேரி என்பவரிடம் உள்ளது.
இதுதொடர்பாக, அவரிடம் நாங்கள் விண்ணப்பம் அளித்திருந்தோம். ஆனால் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே சான்றிதழ் கொடுப்பதாக மேரி கூறுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.
இதுகுறித்து எஸ்பி லட்சுமி உத்தரவின்பேரில், டிஎஸ்பி வல்சராஜ் தலைமையிலான போலீசார் திருவொற்றியூரில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆபீசை கண்காணித்தனர். நேற்று மாலையில் பணத்தை தன்ராஜ் கொடுத்தபோது மேரியை கைது செய்தனர்.

Read On 0 comments

விருதுநகர் ஊனமுற்றோர் அலுவலகத்தில் விடுமுறையிலும் லஞ்ச வசூல்

6:07 PM

unmuttror

 

விருதுநகர் மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலகத்தில், உதவித்தொகை அனுப்புவதற்கு லஞ்ச வசூலில் ஈடுபட்டிருந்த நான்கு ஊழியர்களை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.விருதுநகர் மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறை அலுவலகம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளது. அரசு விடுமுறை தினமான நேற்று காலை 10 மணி முதல், மனவளர்ச்சி குன்றியோருக்கு, அரசு உதவித்தொகை அனுப்புவதற்கு, லஞ்ச வசூலில் ஊழியர்கள் ஈடுபட்டிருப்பதாக, ரகசிய தகவல் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்தது.


அங்கு போலீசார் சோதனை நடத்தினர். இந்த அலுவலகத்தில் முடநீக்கு தொழில் நுட்ப உதவியாளர் பிரகாஷ், தொழிற்கூட உதவியாளர் ராஜாமணி, பல்நோக்கு மறு வாழ்வு உதவியாளர் கருணாகரன், இரவுக் காவலர் பரமசிவம் ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் கணக்கில் வராத 58 ஆயிரம் ரூபாய் இருந்தது பற்றி, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.


இதில், மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு 60 சதவீதமும், அதற்கு மேல் உள்ளவர்களுக்கு மாதம் 500 ரூபாய் வீதம், அரசு உதவித் தெகை வழங்கி வருகிறது. ஏற்கனவே மாவட்டத்தில் 500 பேர் இந்த உதவித் தொகை பெற்று வந்தனர். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, உதவித்தொகை வழங்கப்படவில்லை. இந்த தொகையான 76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்திருந்தது. ஒரு நபருக்கு நான்கு ஆயிரத்து 500 வீதம், மணியார்டர் மூலம் அனுப்பபட வேண்டும்.


புதிதாக இந்தாண்டுக்கு ஆயிரத்து 200 பேருக்கு உதவித்தொகை வழங்க அரசு அனுமதித்திருந்தது. இதனை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு அனுப்ப வேண்டும். மணியார்டர் செய்வதற்கான கமிஷன் தொகை உட்பட அனைத்தும் அரசு வழங்கியுள்ளது. உதவித்தொகை பெறக்கூடிய அனைவரையும் அலுவலகத்திற்கு நேரில் வர கோரி ஊழியர்கள் கடிதம் அனுப்பியிருந்தனர்.நேரில் வந்த பயனாளிகளிடம் ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் வீதம் லஞ்சமாக வழங்க வேண்டும் என, ஊழியர்கள் தெரிவித்தனர். இதன் பேரில் டிச., 26ல், எழு நபர்களும், நேற்று 51 நபர்களிடம் தலா ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வசூலித்திருந்தனர். 58 ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பிரகாஷ், ராஜாமணி, கருணாகரன், பரமசிவம் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Read On 0 comments

இதுதான் ஊடகச் சுதந்திரமா?

4:46 AM

4482

 

நன்றி: தினமணி தலையங்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ஆந்திர மாநில ஆளுநர் என்.டி. திவாரி தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டுப் புறப்பட்டுவிட்டார் என்றாலும், தெலங்கானா பிரச்னை கொழுந்துவிட்டு எரியும்போது, அதிலும் ஆந்திரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற வதந்தி எழுந்தபோது, ஆளுநரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்தியிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.

தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பிய ஆளுநர் தொடர்பான பாலியல் ஒளிக்காட்சிகளைத் தடை செய்ய வேண்டும் என்று ஆளுநர் மாளிகை கேட்டுக் கொண்டதால் தடை செய்யும் நீதிமன்றம், இந்த ஒளிக்காட்சிகளைக் கொடுத்த பெண், அந்தக் காட்சிகளில் இடம்பெற்றுள்ள பெண்களைக் கைது செய்து, அவர்கள் என்ன ஆதாயத்துக்காக இந்தச் செயலுக்கு மனமுவந்து ஒப்புக்கொண்டார்கள் என்று கண்டறிய வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட வேண்டாமா?  ஒரு நீதிமன்றம்  பொதுநலன் கருதி காவல்துறைக்குத் தன்னிச்சையாக இத்தகைய உத்தரவிட்டால் என்ன குற்றமாகிவிடும். லஞ்சம் வாங்குவது குற்றம், கொடுப்பதும் குற்றம்; கொலை செய்வதும் குற்றம்; கொலையைத் தூண்டுவதும் குற்றம். அப்படியிருக்க இந்த ஒளிக்காட்சிக்குத் தொடர்புடைய பெண்களிடம் உண்மையை அறிய விசாரிக்க வேண்டாமா?

ஆளுநர் தாய்லாந்து சென்று, ஒரு ஸ்பா-வில் ஓய்வெடுத்து, எப்படி இருந்திருந்தாலும் யாரும் குறைசொல்ல முடியாது. அந்த நாட்டுச் சட்டத்திற்கு அது ஏற்புடையது. ஆளுநர் மாளிகையில் அவர் அவ்வாறு நடந்து கொண்டது முறையற்ற சட்டவிரோதச் செய்கைதான் இன்று பிரச்னையாகியிருக்கிறது. ஆனால், யாரோ ஒரு பெண்மணி கொண்டு வரும் ஒளிக்காட்சிகளை அப்படியே ஒளிபரப்பவும் அதை நியாயப்படுத்தவும் முடியுமென்றால், அத்தகைய ஊடகச் சுதந்திரம் சற்று மிகையாகத்தான் இருக்கிறது.

ஆளுநர் பதவி என்பது, அறிஞர் அண்ணா சொன்னதைப் போல, ஆட்டுக்குத் தாடி மாதிரியானது. தேர்தல் முடிவுகளில் அதிக இடங்களைப் பிடித்த கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கவும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்லி குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்யவும் மட்டுமே செய்கிற,  வேறு எந்த அதிகாரமும் இல்லாத பதவி. மிகப் பெரும் மாளிகையில் செüகரியங்களை அனுபவிக்க மட்டுமே உருவாக்கப்பட்ட பதவி. (அவரும் அதைத்தான் செய்துகொண்டிருந்திருக்கிறார் போலும்!).

இந்நிலையில் அதிகாரம் இல்லாத இப்பதவி வகிக்கும் ஓர் ஆளுநர் தனக்கு, கனிமச் சுரங்கங்கள் பெற்றுத் தருவதாகக் கூறியதால் 3 இளம்பெண்களை அனுப்பினேன் என்று கூறிக்கொள்ளும் ஒரு பெண்மணி, அதற்கு ஆதாரமாக ஒளிக்காட்சிகளை தந்தால், அதை தனியார் சானல் அப்படியே ஒளிப்பரப்பிவிட்டு, வழக்கை எதிர்கொள்ளத் தயார் என்று சொல்வதை ஊடகச் சுதந்திரம் என்றால் அது சரியா? அந்தப் பெண்ணின் உள்நோக்கத்தைச் சந்தேகிக்க வேண்டிய நேர்மையைவிட,  பரபரப்புதான் முக்கியமாகிவிடுகிறதா!

கொலை வழக்கு தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு நார்காடிக் சோதனை நடத்தியபோது அவர் மயக்கத்தில் பேசிய ஒளிப்பதிவை தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பியது- அது காவல்துறையின் ஒரிஜினல் குறுந்தகடு! அப்படி இருக்கும்போது அதை யாரும் குறை சொல்ல முடியாதுதான். இருப்பினும், நார்காடிக் சோதனையின் மயக்கத்தில் ஒருவர் பேசுவதை நீதிமன்றமே ஏற்றுக்கொள்ள மறுக்கும் நிலையில், அதை ஒளிபரப்புவது சரியாக இருக்குமா என்று யோசிக்கும் பொறுப்பு அந்த நிறுவனத்துக்குக் கிடையாதா?

அந்தப் பெண்மணியின் நோக்கம் கனிமச் சுரங்கங்கள் பெறுவதுதான் என்பதுதான் என்றால், அத்தகைய அனுமதி வழங்க எத்தகைய அதிகாரமும் இல்லாத ஆளுநரை அணுகியது ஏன்? ஆளுநர் மாளிகையில் ஆளுநரே ரகசிய கேமரா வைத்துப் படம் எடுத்து வைத்துக்கொண்டார் என்று சொல்வது அறிவுக்குப் பொருந்துமா? அப்படியானால், முன்கூட்டியே யோசித்துப் படம் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் இதன் பின்னணியில் உள்ள ஆந்திர மாநில அரசியல்வாதிகள் யார்? பல கேள்விகள் எழுகின்றன. ஆந்திர மாநில ஆளுநரின் பாலியல் புகார் மீதான விசாரணை என்பது, இத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்வதாக அமைந்தால்தான் சரியான விசாரணையாக இருக்கமுடியும்.

ஏனென்றால், ஒவ்வோர் அரசியல் கட்சிக்கும் ஒரு தொலைக்காட்சி சானல் இருக்கிறது. அல்லது தொலைக்காட்சி உரிமையாளர்கள் ஏதோ ஓர் அரசியல் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்.  தன்னை எதிர்க்கும் புதிய கட்சித் தலைவர்கள் அல்லது தன் ஊழலுக்கு உடன்படாத ஒரு ஐஏஎஸ் அதிகாரியை, அல்லது தனக்குச் சாதகமாகத் தீர்ப்பு எழுத மறுக்கும் நீதிபதியின் அந்தரங்கத்தை  இவ்வாறு ரகசியமாகப் படம்பிடித்து, தனக்கு ஆதரவாகப் பணிந்துபோகும்படி மிரட்டினால் என்ன ஆகும்? பணிய மறுக்கும்போது தங்கள் விருப்பப்படி ஒளிபரப்பினால் யார்தான் என்ன செய்ய முடியும்?

மகாராஷ்டிரத்தில் பத்திரிகைகளுக்கு கோடி கோடியாய் பணம் கொடுத்து, செய்திகளை ஒவ்வொரு பத்திரிகைகளிலும் தனிப்பட்ட செய்திபோல பிரசுரிக்கவும் அது விளம்பரம் என்பதை மறைத்தும் பணம் சம்பாதித்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு கண்டனம் செய்யப்படுகிறது. இதே நிலைமை ஊடகங்களில் ஏற்படவில்லை. ஏனென்றால், ஒவ்வொரு கட்சிக்கும் ஓர் ஊடகம் இருக்கிறது. ஆகையால் அவர்கள் தங்களைப் பற்றி மட்டுமே, தங்கள் தலைவர்களின் பிரசாரங்களை மட்டுமே ஒளிபரப்ப வேண்டிய கட்டாயத்தால் இந்த நிலை ஏற்படவில்லை.

இல்லையென்றால், தனியார் தொலைக்காட்சிகளும் தங்கள் சீரியல்களைக்கூட நிறுத்திவிட்டு அரசியல் விளம்பரங்களிலும், எதிர் அணியினரின் பலவீனத்தை அம்பலப்படுத்துவதிலும் இறங்கியிருக்க நேர்ந்திருக்கும். தனியார் தொலைக்காட்சி சானல்களையும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நிச்சயம் கட்டுப்படுத்த மாட்டார்கள். அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான தொலைக்காட்சி சானல் என்பது ஒரு போர்வாள். தேவைப்படும்போது உறையிலிருந்து எடுத்து விருப்பம்போல சுழற்றலாம்.

Read On 1 comments

கட்டாய ஓட்டு...! ஜனநாயகமா - சர்வாதிகாரமா...?

5:17 AM

tblfpnnews_93453180790

ஓட்டளிக்க வேண்டியது ஒவ்வொரு மக்களின் அடிப்படை உரிமை. வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம் பெற்றுள்ள அனைவரும் வரும் உள்ளாட்சி தேர்தலில் கட்டாயமாக ஓட்டளிக்க வேண்டும்'என, குஜராத் சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள சட்ட மசோதா, இந்திய அரசியல் அரங்கில் மட்டுமல்லாமல், சாதாரண மக்கள் வரை அதிர்வு அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்குவது சாத்தியமா, அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் என்ன என்பது குறித்தெல்லாம் சற்றும் கவலைப்படாமல், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இந்த அரசியல் சர வெடியை பற்ற வைத்து, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள் ளார். குஜாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மசோதா போல், பார்லிமென்டிலும் தாக்கல் செய்யப்படுமா? நாடு முழுவதும் ஓட்டுப் போடுவது கட்டாயமாக்கப்படுமா? அப்படி ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்கி சட்டம் கொண்டு வந்தாலும், ஓட்டுப் போடாமல் புறக்கணிப்பவர்களுக்கு தண்டனை அளிக்கப்படுமா என்பது போன்ற கேள்விகள்,எழத் துவங்கி விட்டன.

கட்டாய ஓட்டு புதிய விஷயமா? கட்டாய ஓட்டுப் பதிவு என்பது ஒன்றும் புதிய விஷயமல்ல. ஏற்கனவே சில நாடுகள், ஓட்டளிப்பதை கட்டாயமாக்கி, அதை செயல்படுத்தியும் வருகின்றன. முதல் முதலாக கடந்த 1892ல் பெல்ஜியம் நாட்டில் ஓட்டுப் போடுவது கட்டாயமாக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் 1942ல் இந்த கட்டாய ஓட்டுச் சட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது, அங்குள்ள சில மாகாணங்களில் மட்டுமே, இந்த சட்டம் அமலில் உள்ளது. அர்ஜென்டினாவில் 1914 முதல், இந்த சட்டம் அமலில் உள்ளது. இங்கு 18 முதல் 70 வயதுக்குட்பட்டோர் கட்டாயமாக ஓட்டளிக்க வேண்டும். பிரேசிலிலும் இந்த சட்டம் உள்ளது. 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த சட்டம் பொருந்தாது. இதுதவிர, வெனிசுலா, நெதர்லாந்து போன்ற நாடுகளில் ஒரு சில தேர்தலில் மட்டும் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, பின் ரத்து செய்யப்பட்டது.

அபராதத்தில் இருந்து யாருக்கு விலக்கு? கட்டாய ஓட்டுப் பதிவு சட்டம் நடைமுறையில் உள்ள நாடுகளில், தேர்தலின்போது ஓட்டுப் போடாதவர்களுக்கு குறிப்பிட்ட தொகை அபராதமாக விதிக்கப்படுகிறது. ஓட்டுப் போடாததற்கு தகுந்த காரணங்களை கூறினால், அவர்களுக்கு அபராதத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியா, பிரேசில் போன்ற நாடுகளில் ஓட்டுப் போடாததற்கு சரியான காரணங்களை கூறினால், அதிகாரிகளால் அவை ஏற்றுக் கொள்ளப்படும். அர்ஜென்டினாவை பொறுத்தவரை, தேர்தலின் போது சொந்த ஊரில் இருந்து 500 கி.மீ., தூரத்தில் உள்ளவர்கள் ஓட்டுப் போட வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல், நோயால் பாதிக்கப்பட்டோரும், தகுந்த மருத்துவ காரணங்களை செலுத்தினால், அபராதத்தில் இருந்து விலக்கு பெறலாம்.

வித்தியாசமான தண்டனை: பெல்ஜியத்தில் கட்டாய ஓட்டுச் சட்டம் அமலில் இல்லாதபோதும், தொடர்ந்து பல தேர்தல்களில் ஓட்டுப் போடாமல் இருப்பவரின் ஓட்டுரிமை ரத்து செய்யப்படும். பெரு, கிரீஸ் ஆகிய நாடுகளில் ஓட்டுப் போடாதவர்களுக்கு பொது வினியோகம் மூலம் பொருட்கள் வழங்கப்படுவது நிறுத்தப்படும். பொலிவியாவில் ஓட்டுப் போடாதவர்களுக்கு மூன்று மாத சம்பளம் கிடையாது. துருக்கியில் 150 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

கட்டாய ஓட்டு ஏன் அவசியம்? இந்த கட்டாய ஓட்டுச் சட்டத்தை தான், தற்போது இந்தியாவிலும் அமல் படுத்த வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன. ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்க வேண்டும் என்ற கருத்து தெரிவிப்பவர்கள், அதற்கான காரணங்களை விளக்குகின்றனர். இந்திய தேர்தல் நடைமுறைகளை பொறுத்தவரை, பெரும்பான்மையான மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப அரசு அமைவது இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே உள்ளது. தேர்தல்களில் மிக குறைவான சதவீதம் மக்களே ஓட்டளிக்கின்றனர். படித்தவர்கள் வரிசையில் நின்று ஓட்டளிப்பதற்கு விரும்புவது இல்லை. தேர்தலின்போது சமீபகாலமாக அரங்கேறி வரும் கலவரங்களும், அதனால் சாதாரண மக்களுக்கு ஏற்படும் பயமும் இதற்கு முக்கிய காரணம். இதனால், பெரும் பான்மை மக்களின் விருப்பங்கள், தேர்தலில் எதிரொலிப்பது இல்லை. ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்கினால், இந்த பிரச்னை எழுவதற்கு வாய்ப்பு இல்லை. அடுத்ததாக, கள்ள ஓட்டுகள் முற்றிலும் தவிர்க்கப்படும்.

தற்போது தேர்தல்களில் ஓட்டுப் போடுவதற்கு அடையாள அட்டை, வெப் கேமரா கண்காணிப்பு என, பல்வேறு நவீன நடைமுறைகள் பின்பற்றினாலும், கள்ள ஓட்டுகள் பதிவாவதை தடுக்க முடியவில்லை. ஊரில் இல்லாதவர்கள், இறந்து போனவர்கள் குறித்த விவரங்களை துல்லியமாக சேகரித்துக் கொண்டு, அவர்களின் ஓட்டுகளை கள்ள ஓட்டுகளாக போடும் நடைமுறை, காலம், காலமாக பின்பற்றப்படுகிறது. ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்கினால், கள்ள ஓட்டு பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும். கட்டாய ஓட்டுப் பதிவால், பொதுமக்களிடையே அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படும். தற்போது பெரும்பாலானோர், ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் நமக்கென்ன என்ற மனநிலையோடு தான் உள்ளனர். அனைவரும் கட்டாயமாக ஓட்டுப் போட வேண்டும் என, சட்டம் கொண்டு வந்தால், யார் நல்லவர், யார் கெட்டவர் என, அலசிப்பார்த்து ஆராய்ந்து ஓட்டளிக்கும் மனப்பான்மை மக்களிடையே ஏற்படும்.

அடுத்ததாக, அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கி அரசியலுக்கு மூடு விழா நடத்தி விடலாம். ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் விருப் பங்களை மட்டும் நிறைவேற்றினால் போதும், குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் நல்லது செய்தால் போதும் என, எந்த அரசியல் கட்சியும் நினைக்க முடியாது. அனைவருமே ஓட்டளிப்பதால், அனைத்து மக்களின் விருப்பங்களையும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம், ஆளும் தரப்புக்கு ஏற்படும். இறுதியாக, வரி செலுத்துவது எப்படி ஒருவரின் அடிப்படை கடமையோ, அதுபோல ஓட்டுப் போடுவதும் ஒருவரின் அடிப்படை கடமை. இதை கட்டாயமாக்குவதன் மூலம், ஓட்டுப் போடும் ஜனநாயக கடமையை யாரும் தட்டிக் கழிக்க முடியாது.

கட்டாய ஓட்டுக்கு அவசியமே இல்லை: ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்க வேண்டிய அவசியம் இல்லை என, கூறுவோர் அதற்கான காரணங்களை தெளிவாக எடுத்து வைக்கின்றனர். முதலாவதாக, ஒருவரை ஓட்டுப் போட வேண்டும் என, கட்டாயப்படுத்துவது அவரின் அடிப்படை உரிமையை அப்பட்டமாக மீறும் செயலாகும். ஓட்டுப் போட வேண்டும், இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என, கட்டாயப்படுத்தினால், அவரின் அடிப்படை சுதந்திரத்தில் தலையிடும் விஷயமாகி விடும். இப்படி கட்டாயப்படுத்தி ஓட்டு வாங்கி, அதன் அடிப்படையில் அமையும் அரசு, எப்படி ஜனநாயக அரசாக இருக்க முடியும். இதில், சர்வாதிகார மனப்பான்மை தானே மேலோங்கி நிற்கிறது. அடுத்தாக, போதிய நிதி வசதி இல்லாத நாடுகளால், ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்குவது என்பது முடியாத காரியம். ஒருவரை கட்டாயப் படுத்தி ஓட்டுப் போட வைப்பதால், அவருக்கு வெறுப்பு தான் ஏற்படுமே தவிர, யாருக்கு ஓட்டுப் போடுவது என்ற விஷயத்தில் கவனம் செலுத்த மாட்டார். கட்டாய படுத்துகிறார்களே என்ற வெறுப்பில், தனது ஓட்டை செல்லாத ஓட்டாக்கி விட்டுச் செல்வதற்கும் தயங்க மாட்டர். மேலும், ஓட்டுப் போட வேண்டும் அவ்வளவு தானே, என்ற மனப்பான்மையில், ஓட்டுச் சீட்டில் அல்லது இயந்திரத்தில் முதலில் இருக்கும் வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்கும் சிக்கலும் உருவாகும்.

சாத்தியமா? மகாராஷ்டிராவின் விதர்பா உள்ளிட்ட பகுதிகளில் கடன் தொல்லை காரணமாக, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தினமும் அரங்கேறுகின்றன. ஒரிசா, பீகார் போன்ற மாநிலங்களில் பட்டினிச் சாவுகள் அதிகரித்து வருகின்றன. வடகிழக்கு மாநில மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே, போதிய சுகாதார வசதிகள் கிடைக்கின்றன. இவர்களுக்கு எல்லாம் போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து விட்டு அதற்கு பின்னர் அல்லவா ஓட்டுப் பதிவை கட்டாயமாக்க வேண்டும். வறுமையில் வாடும் மக்களிடம், இந்த சட்டத்தை எப்படி நடைமுறைப் படுத்த முடியும்? அன்றாட உணவுக்கே வழியில்லாத ஏழை மக்களை, ஓட்டுப் போடாத குற்றத்துக்காக சிறையில் அடைக்க முடியுமா? என்ற வேதனைக்குரல்களும் எழாமல் இல்லை.

ஆனால், சமீபகாலமாக, நாடு முழுவதும் நடந்து வரும் தேர்தல்களில் "காசுக்கு ஓட்டு' என்ற விசித்திரமான நடவடிக்கைகள் அரங்கேறத் துவங்கி விட்டன. அரசியல் கட்சிகளும், தங்கள் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, ஓட்டு வாங்குவதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கின்றன. "பணம் கொடுத்தால் தான் ஓட்டுப் போடுவோம்' என்ற மனநிலைக்கு பொதுமக்களையே அரசியல் கட்சிகள் தயார் படுத்தி விட்டன. ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கும் இதுபோன்ற அபாயகரமான போக்கிற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமானால், ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்க வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது. இதுபோன்ற சட்டங்களால் தான் பொதுமக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படும் என்பது தான் இதற்கு காரணம். ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்குவது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதற்கு காலம் தான் பதில் கூற வேண்டும். காத்திருப்போம்.

சாத்தியமில்லை என்கிறது தேர்தல் கமிஷன்: தேர்தல் கமிஷன் குரேஷி கூறியதாவது: ஓட்டளிப்பதை கட்டாயமாக்குவது குறித்து தேர்தல் கமிஷன் சார்பில் பலமுறை விரிவான ஆலோசனை நடத்தப் பட்டுள்ளது. இருந்தாலும், இந்தியா போன்ற நாட்டில் அதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. ஜனநாயகமும், கட்டாயப்படுத்துதலும் ஒரே நேரத்தில் சாத்தியமில்லை. நாடு முழுவதும் 40 சதவீதம் வாக்காளர்கள், ஓட்டளிக்காமல் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடையே ஓட்டளிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பிரசாரம் செய்யலாம்.இவ்வாறு குரேஷி கூறினார்.

லாலு, பா.ஜ., ஆதரவு: பா.ஜ., மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறுகையில்,"குஜராத் மாநில அரசு, ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்கி கொண்டு வந்துள்ள மசோதா, மிகவும் புதுமையானது. மிகவும் பயன் உள்ள திட்டமும் கூட. இத்திட்டத்தை நாடு முழுவதும் கொண்டுவருவது குறித்து விரிவான ஆலோசனை நடத்த வேண்டியது அவசியம். தேவைப்பட்டால், இதற்காக தேசிய அளவில் விவாதமும் நடத்தலாம்'என்றார். ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் கூறுகையில்,"தேர் தல்களில் ஓட்டுப் போடுவோரின் சதவீதம் குறைந்து வருகிறது. இது மிகவும் கவலை அளிக்கும் விஷயம். இதைத் தடுக்க வேண்டுமெனில், உள்ளாட்சி தேர்தல்களில் மட்டுமல்லாமல், லோக்சபா தேர்தலிலும் ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்கி, சட்டம் கொண்டு வர வேண்டும்'என்றார்.

பார்லி விதிமுறைகள் கூறுவது என்ன? கடந்த 2004ல் "ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்க வேண்டும்'என, வலியுறுத்தி, பா.ஜ., எம்.பி., பாச்சி சிங் ரவாத் ஒரு மசோதாவை பார்லிமென்டில் கொண்டு வந்தார். இதற்கு பதில் அளித்து அரசு சார்பில் கூறப்பட்டதாவது: தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக, ஆய்வு செய்த தினேஷ் கோஸ்வாமி குழு, ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன என, கூறி அந்த திட்டத்தை நிராகரித்துள்ளது. மேலும், ஓட்டுப் போடுவதை கட்டாயப்படுத்துவது,  ஜனநாயக விதிமுறைகளுக்கு எதிரானது. வேண்டுமானால், ஓட்டுப் போட வேண்டிய அவசியம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரசாரங்களை மேற்கொள்ளலாம். இவ்வாறு மத்திய அரசு சார்பில் கூறப்பட்டது.

காங்., - இடதுசாரி எதிர்ப்பு: காங்கிரஸ் செய்தி தொடர் பாளர் ஷகீல் அகமது கூறுகையில்,"ஓட்டுப்போடுவதை கட்டாயப்படுத்துவது, ஒருவரின் அடிப்படை உரிமையை மீறும் செயல். இந்த விஷயத்தில், மக்களை கட்டாயப்படுத்தக் கூடாது. இது எந்த வகையிலும் பயன் அளிக்காது. ஜனநாயக நடைமுறையில், ஓட்டுப் போடுவதை ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர, கட்டாயப்படுத்தக் கூடாது. ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்குவதை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது'என்றார். மார்க்சிஸ்ட் கம்யூ., மூத்த தலைவர் வாசுதேவ் ஆச்சார்யா லோக்சபாவில் பேசுகையில்,"ஓட்டுப்போடுவது நமது உரிமை என்பதை வாக்காளர்களுக்கு, போதிய விழிப்புணர்வு பிரசாரங்கள் மூலம் புரிய வைக்க வேண்டும். அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது'என்றார்.

 

நன்றி: தினமலர்.

Read On 0 comments

பெண்ணாசையால் மண்ணைக் கவ்வியவர்கள்

4:59 AM

nd_tiwari

ஆந்திர கவர்னர் என்.டி. திவாரி கடந்த வெள்ளிக்கிழமை 3 பெண்களுடன் தனி அறையில் உல்லாசமாக இருந்ததாக தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பு செய்தில், செக்ஸ் புகாரில் சிக்கி இருக்கிறார். அதற்கான வீடியோ ஆதாரங்களும் வெளியிடப்பட்டு உள்ளன. இதே போல இதற்கு முன்பு பல தலைவர்கள் வீடியோ ஆதாரங்களுடன் செக்ஸ் புகாரில் சிக்கி உள்ளனர்.

 

2005091601360402
கேரள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் உன்னித்தான் கடந்த வாரம் டி.வி. நடிகை ஒருவருடன் ரகசியமாக ஒரு வீட்டில் தங்கியபோது சிக்கினார். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது நடிகை ஜெயப்பிரதாவின் நிர்வாண படங்கள் வெளியானது. இது போலி படம் என்று ஜெயபிரதா கூறினார்.

 

omar-abdullah
காஷ்மீரில் விபசார பெண்களை அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சப்ளை செய்ததாக ஒரு பெண்பிடிபட்டார். இதில் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கும் சம்பந்தம் உண்டு என்று புகார்கள் வந்தன. இதையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் ராஜினாமா வாபஸ் பெற்றுக்கொண்டார்.

 BJP delhi Pradesh President with Sanjay Joshi,BJP Senior leader at a function to Celebrate Birthday of Baba Sahib Ambedkar, in the Capital on Thursday. tribune Photo/Rajeev Tyagi
2005 ம் ஆண்டு பாரதீய ஜனதா பொதுச் செயலாளர் சஞ்சய் ஜோஷி ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ படம் வெளியானது. அதையடுத்து அவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

2007041913640301
2003 ல் உத்தரபிரதேச அமைச்சர் அமரமணி திரிபாதி ஒரு பெண்ணுடன் தவறான தொடர்பு வைத்து இருந்தார். இதில் அந்த பெண் கர்ப்பமானார். பின்னர் அவரை கொலை செய்ததாக திரிபாதி கைது செய்யப்பட்டார்.


2003 ம் ஆண்டு உத்தரகாண்டம் அமைச்சர் ஹாக்கில் திருமணமாகாத ஒரு பெண்ணை கர்ப்பிணியாக்கினார். இதில் அவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.


2001 ம் ஆண்டு ராணுவ ஆயுத தளவாடங்கள் வாங்க ஒப்பந்தம் கொடுப்பதற்கு ராணுவ அதிகாரிகள் விபசார பெண்களை கேட்டதை பத்திரிகை ஒன்று வீடியோ ஆதாரத்துடன் வெளிப்படுத்தியது.

3389717315_kunjalikutty
1997 ம் ஆண்டு கேரள முன்னாள் அமைச்சர் குஞ்சாலி குட்டி மீது செக்ஸ் புகார் எழுந்தது. 1978 ம் ஆண்டு அப்போதைய ராணுவ அமைச்சர் ஜெகஜீவன்ராம் மகன் சுரேஷ் ஒரு பெண்ணுடன் தவறான முறையில் இருந்ததாக படத்துடன் பத்திரிகையில் செய்தி வந்தது

 

நன்றி: நக்கீரன்.

Read On 0 comments

Followers