வச்சுட்டான்யா...ஆப்பு
லஞ்சம் வாங்கறவங்களுக்கு...

2009-ல் 71 ஊழல் வழக்குகள்: சிபிஐ பதிவு

Labels:

23cbis

 

சென்னை, ஜன. 8: மத்திய குற்றப் புலனாய்வுத் துறையின் (சி.பி.ஐ.) ஊழல் தடுப்புப் பிரிவில் 2009-ல் 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது குறித்து சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவல்:
÷லஞ்சம் பெற்றதாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன், தனியார் டிராவல் ஏஜென்ட் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.


÷மேலும் மாநகராட்சி மருத்துவ அதிகாரியாகப் பணிபுரிந்து வந்த சுமதி ரவிச்சந்திரனின் கணவர் மீது ரூ.1.5 கோடி சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


÷சென்னையில் குடியுரிமை பாதுகாப்பு அதிகாரி சேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர் தனது மகனை பொறியியல் கல்லூரி ஒன்றில் சேர்ப்பதற்காகப் பல லட்சம் லஞ்சம் கொடுத்ததும், பலரிடம் இருந்து லஞ்சம் பெற்றதும் தெரியவந்தது.அவர்களிடம் இருந்து ரூ.2.13 கோடி ரொக்கப் பணமாகவும், ரூ.2.17 கோடி சொத்துகளாகவும் பறிமுதல் செய்யப்பட்டன.


÷சென்னை துறைமுக பொறுப்பு கழகத் தலைவர் சுரேஷ் மீது ரூ.20 கோடி முறைகேடு வழக்கு தொடரப்பட்டது.


÷சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள கலால் வரித் துறை அதிகாரிகள் 12 பேர் லஞ்சம் பெற்றதாகக் கைது செய்யப்பட்டனர். தேசிய நெடுஞ்சாலை எண் 7 மற்றும் 5-ல் பணிகள் நிறைவடையும் முன்பாக கட்டணம் வசூலிக்க ஒப்பந்தம் வழங்கியதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைமை பொது மேலாளர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.


÷அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சலின் (ஏஐசிஇடி) அதிகாரிகள் மற்றும் பல்வேறு பொறியியல் கல்லூரிகளின் அறக்கட்டளை மீதும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.


÷2009-ல் 54 வழக்குகளில் விசாரணை முடிந்து தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வருமான வரித் துறை, இந்திய உணவுக் கழகம், ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம், பிஎஸ்என்எல், ரயில்வே பாதுகாப்புப் படை, அஞ்சல் துறை, பொதுத் துறை வங்கிகளின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழக்கும் இதில் அடங்கும். சுமார் ரூ.1.56 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

" ஓட்டு போட்டால், இந்த செய்தி இன்னும் நிறைய பேரைப் போய் சேரும் .Please

0 comments:

Post a Comment


Followers