வச்சுட்டான்யா...ஆப்பு
லஞ்சம் வாங்கறவங்களுக்கு...

நாகை பெண் தாசில்தார்க்கு ஆப்பு

 

thasildaar

நாகை: நாகை அருகே ரூ.1000 லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது செய்யப்பட்டார்.


நாகை அருகே திருப்பூண்டியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தங்க நகை மதிப்பீட்டாளர் படிப்பை முடித்து விட்டு, தனக்கு அந்த வேலையை செய்வதற்கான அனுமதி வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவை மாவட்ட கலெக்டர் தாசில்தாருக்கு அனுப்பி வைத்தார்.


அப்போது சான்றிதழ் தருவதற்கு ராஜ்குமாரிடம் பெண் தாசில்தார் அமுதா ரூ. 1000 லஞ்சம் கேட்டார். மறுநாள் தருவதாகக் கூறிவிட்டு வந்த ராஜ்குமார் நாகை மாவட்டம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.


இதனையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் தாசில்தார் அலுவலகத்துக்கு ரகசியமாக சென்று கண்காணித்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி தாசில்தார் அமுதாவிடம் ராஜ்குமார் பணம் கொடுத்தார்.


ராஜ்குமாரிடம் இருந்து ரூ.1000 லஞ்சப் பணம் வாங்கிய போது தாசில்தார் அமுதாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

" ஓட்டு போட்டால், இந்த செய்தி இன்னும் நிறைய பேரைப் போய் சேரும் .Please

0 comments:

Post a Comment


Followers