வச்சுட்டான்யா...ஆப்பு
லஞ்சம் வாங்கறவங்களுக்கு...

சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையர்க்கு ஆப்பு

chennai-airport

சென்னை, ஜன.6: லஞ்சம் பெற முயன்றதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் உள்பட 3 பேரை சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவு போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர்.


÷இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சர்க்யூட் பலகை எலக்ட்ரானிக் பொருள்களுக்கு சுங்கத் தீர்வை விதிக்காமல் இருப்பதற்காக, லஞ்சப் பணம் பெற முயன்ற போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.


÷சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சரக்கு கையாளும் பிரிவில் சுங்கத்துறையின் துணை ஆணையராகப் பணிபுரிபவர் வி.எஸ்.சுந்தரராஜன். அங்கு மதிப்பீட்டு அதிகாரியாகப் பணிபுரிபவர் ரமணி.


÷இருவரும், இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பழைய சர்க்யூட் பலகை எலக்ட்ரானிக் பொருள்களின் கூரியர் உரிமையாளரிடம் சுங்கத் தீர்வை விதிக்காமல் இருக்க வேண்டுமானால் ரூ.2,500 லஞ்சம் கொடுக்கும்படி கேட்டனராம்.


÷இந்த லஞ்சப் பணத்தை கூரியர் நிறுவன ஊழியர் சாகுலிடம் கொடுத்துவிடுமாறு அதிகாரிகள் இருவரும் கேட்டுக் கொண்டனராம்.
÷இதுகுறித்து கூரியர் உரிமையாளர், சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவு போலீஸில் புகார் செய்தார்.


÷இதையடுத்து, லஞ்சப் பணம் பெற முயன்றபோது துணை ஆணையர் வி.எஸ்.சுந்தரராஜன், மதிப்பீட்டு அதிகாரி ரமணி மற்றும் கூரியர் நிறுவன ஊழியர் சாகுல் ஆகியோரை போலீஸôர் கைது செய்தனர்.

" ஓட்டு போட்டால், இந்த செய்தி இன்னும் நிறைய பேரைப் போய் சேரும் .Please

0 comments:

Post a Comment


Followers